புதன், 28 ஏப்ரல், 2010

இலங்கை தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு அமைக்கப்படுவதை - தடுக்கும் முயற்சி தீவிரம்!

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் லின் பாஸ்கோ, அடுத்தமாதமளவில் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.நாவின் உயர்மட்ட தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ள போதும், அவர் ஐ.நா அமைக்கவுள்ள இலங்கை தொடர்பான விஷேட நிபுணர் குழு பற்றி ஆராய்வதற்காக இவ்விஜயத்தினை பயன்படுத்தமாட்டார் என தெரிய வருகிறது.

இலங்கையின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அண்மையில் நியூயோர்க்கில், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். இதில், இலங்கை தொடர்பில், நிபுணர் குழுவை அமைக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை ஏப்ரல் 20 ம் திகதி இஸ்ரேலினால் ஐ.நா வில் நடத்தப்பட்ட வரவேற்பு உபசாரத்தின் போது உங்கள் அரசாங்கத்திற்கு எதிராக நான் செயற்படுவதில்லையென பான் கீ மூன், ஐ.நாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹணவுக்கு தெரிவித்ததாக இன்னர்சிற்றி பிறஸ் குறிப்பிட்டிருந்தது.

மேலும், இலங்கை தொடர்பில் நிபுணர் குழு அமைக்கப்படும் என எதிர்பாத்திருக்க வேண்டாமென்று ஐ.நாவில் உள்ள சிரேஷ்ட்ட அதிகாரியொருவர் கூறியதாகவும் இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது.
இந்நிலைமைகளினல் இலங்கை தொடர்பில் ஐ.நாவின் விஷேட நிபுணர் குழு அமைக்கப்படுமா? என்றே சந்தேகம் எழுந்துள்ளது!

காந்தஹாரில் ஐ.நா அலுவலகம் மூடப்பட்டது

காபூல்:ஆப்கானிஸ்தானில் காந்தஹார் நகரில் செயல்பட்டுவந்த ஐ.நா அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள் என கூறப்பட்டாலும் வருகிற ஜூனில் நேட்டோ படையினர் நடத்தவிருக்கும் தாக்குதலை முன்னிட்டுத்தான் ஐ.நா அலுவலகம் மூடப்பட்டது என கூறப்படுகிறது.

வெளிநாடுகளைச் சார்ந்த பணியாளர்களிடம் காபூல் தலைமை அலுவலகத்திற்கு செல்லவும், ஆப்கானிஸ்தான் பணியாளர்கள் சிறிதுகாலம் வீட்டிலிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் சூசன் மானுவல் தெரிவித்தார்.

40 வெளிநாட்டு பணியாளர்களிருந்த அலுவலகத்தில் தற்பொழுது 10க்கும் குறைவான பணியாளர்களே உள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்படும் அலுவலகத்திற்கு தாக்குதல் பீதி உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அலுவலகத்தை மூடுவதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

ஆனால்,அத்தகைய சூழல் தற்பொழுது இல்லை என்றும், அலுவலகத்தை மாற்றியது கண்டிக்கத்தக்கது என்றும் மாகாண மேயர் அஹ்மத் வலி கர்ஸாயி தெரிவித்தார்.

அமெரிக்காவின் நிர்பந்தத்தின் அடிப்படையில் தான் ஐ.நா அலுவலகம் காந்தஹாரில் மூடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜூனில் நடைபெறும் ராணுவ நடவடிக்கையில் ஆப்கான் ராணுவத்தினர் உட்பட 23000 பேர் பங்குபெறுவர் என கூறப்படுகிறது. தற்பொழுது பணியிலுள்ள 8 ஆயிரம் அமெரிக்க-கனடா அந்நிய ஆக்கிரமிப்பு ராணுவத்தினருடன் புதியதாக வரும் 3500 அமெரிக்க அந்நிய ஆக்கிரமிப்பு படையினரும் இந்த ராணுவ நடவடிக்கையில் கலந்துக் கொள்வர்.

6700 ஆப்கான் ராணுவத்தினரும் இதில் பங்குபெறுவர். அமெரிக்க அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் நடத்தவிருக்கும் அக்கிரம ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நிய ஆக்கிரமிப்பு அக்கிரம் ராணுவ நடவடிக்கைக்கு கடுமையான பதிலடியைக் கொடுப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்.
செய்தி:தேஜஸ்

மால்கம் எக்ஸ் கொலையாளியை பரோலில் விடுதலைச் செய்தது

வாஷிங்டன்:அமெரிக்காவில் மனித உரிமை சேவகராகவும் நேசன் ஆஃப் இஸ்லாமின் தலைவராகவுமிருந்த மால்கம் எக்ஸ் என்ற மாலிக் அல் ஸாபாஸைக் கொன்ற கொலையாளியை 45ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் பரோலில் விடுதலைச் செய்தது.

1965 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மால்கம் எக்ஸை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தாமஸ் ஹகேன் என்பவரைத்தான் நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் குடும்பத்தினருடன் வாழ விடுதலைச் செய்துள்ளது.

ஹகேனுக்கு 22 வயதான காலக்கட்டத்தில்தான் மால்கம் எக்ஸை தனிப்பட்ட விரோதம் காரணமாக கொன்றார் என குற்றஞ் சாட்டப்படுகிறது. இதற்கு உதவிய முஹம்மது அப்துல் அஸீஸையும், காலித் இஸ்லாமினுக்கும் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

கறுப்பு நிற மக்களின் வாழ்வில் வசந்தம் இஸ்லாமின் மூலமே சாத்தியம் என்பதை பிரச்சாரம் செய்த மால்கம் எக்ஸ் நேசன் ஆஃப் இஸ்லாம் என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவராவார். இவர் ஒரு மனித உரிமைப் போராளியாவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வேற்றுகிரக உயிரிகள் உண்டு:ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்.

வாஷிங்டன்:வேற்றுக்கிரக உயிரிகள் உண்டுமா? பல நூற்றாண்டுகளாக விஞ்ஞான உலகத்தை குழப்பத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் கேள்வி இது.வேற்று கிரக உயிரிகள் உண்டு என்கிறார் இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங். ஆனால் அவற்றுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வது மனித குலத்தின் அழிவிற்கு காரணமாக மாறிவிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.டிஸ்கவரி சேனலில் ஒரு புதிய டாக்குமெண்டரி தொடரில் பிரபஞ்சத்தின் மிகவும் மர்மமான ஒன்றைக் குறித்து ஹாக்கிங்ஸ் தனது ஆய்வை தெரிவிக்கிறார்.

கிரகங்களில் மட்டுமல்ல கிரகங்களுக்கிடையிலான வெற்றிடங்களிலும் இவை நடமாடலாம் என்கிறார். வேற்றுக்கிரக உயிரினங்களை குறித்த ஹாக்கிங்ஸின் வாதம் எளிதானது. இப்பிரபஞ்சத்தில் 100 பில்லியன் கேலக்ஸிகள் உள்ளன. ஒவ்வொன்றிக்கும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களும் உள்ளன. இத்தைகையதொரு விசாலமான பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் உயிரினங்கள் வாழுகின்றன எனக்கூறுவது கற்பனைச் செய்யவியலாத ஒன்றாகும். அவற்றின் உருவம் எவ்வாறிருக்கும் என்பதை கற்பனைச் செய்வதுதான் உண்மையான சவாலாகும். என ஹாக்கிங்ஸ் கூறுகிறார்.

உலகில் அதிக அளவு ஏவுகணைகளை வைத்துள்ள ஹஸ்புல்லாஹ் இயக்கத்தினர்: அமெரிக்கா அறிவிப்பு.



உலகில் பல நாடுகளிடம் உள்ள ஆயுதங்களை பார்க்கிலும் அதிக ஏவுகணை, ஏறிகணைகளை ஹஸ்புல்லாஹ் அமைப்பினர் தமது வசம் வைத்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். சிரியாவும் ஈரானும் அதிக அளவிலான ஆயுதங்களை லெபனானிய இஸ்லாமிய அமைப்பான ஹஸ்புல்லாஹ்விற்கு வழங்குவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபர்ட் கேட்ஸ் குற்றச்சாட்டியுள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகள் பிராந்தியத்தின் அனைவரையும் பாதிக்கும் என ரொபர்ட் கேட்ஸ் இஸ்ரேலிய தலைவர்களுடன் கலந்துரையாடும்போது தெரிவித்துள்ளார்.ஹஸ்புல்லாஹ் அமைப்பினருக்கு சிரியா ஏவுகிற ஏறிகணைகளை வழங்குவதாக ரொபர்ட் கேட்ஸ் குறிப்பிடாதபோதிலும் இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது.

2006 ஆம் ஆண்டு ஹஸ்புல்லாஹ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 34 நாட்கள் இடம்பெற்ற மோதலில் ஆயிரத்து 200 இற்கும் அதிகமான லெபனானியர்கள் பலியானதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாவர் இஸ்ரேலைச் சேர்ந்த 560 பேர் இந்த மோதலில் கொல்லப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிரியாவும் ஈரானும் ஹஸ்புல்லாஹ் அமைப்பினருக்கு அதிக எறிகணைகளை வழங்குவதாகவும், அவர்களிடம் இந்த ஆயுதங்கள் அதிக அளவில் இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஏவூத் பராக்கை வொஷிங்டனில் சந்தித்து கலந்துரையாடிய போதே ரொபர்ட் கேட்ஸ் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
உலகில் பல அரசாங்கத்திடம் உள்ளவற்றை விட அதிக அளவிலான ஆயுதங்கள் ஹஸ்புல்லாஹ் அமைப்பினரிடம் இருக்கின்றனது பாரிய அச்சுறுத்தல் எனவும் எனவே அதனை மிக கவனமாக அவதானித்து வருவதாக ரொபர்ட் கேட்ஸ் பென்டகனின் செய்தியாளர்களிடம் உரையாடியபோது குறிப்பிட்டுள்ளார்.

பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பியமை : உடன் பதிலளிக்க ம. அரசுக்கு உத்தரவு

சென்னையில் சிகிச்சை பெறவந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைth திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசை உடனடியாகப் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

மனுவில், "மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் திகதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஜெயசிங் ஆஜராகி வாதாடுகையில்,

"இந்த வழக்கில் மத்திய அரசையும், மாநில அரசையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்கள். பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. வெளிநாட்டவர்கள் வருகையும், அனுமதி வழங்குவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது" என்று கூறினார்.

இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர்.

பின்னர் நடந்த வாதத்தில் மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி நாளை(இன்று)பதில் அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ___

ரஷ்யாவின் கடற்படைத் தளத்துக்கான கால எல்லை 2042 வரை நீடிப்பு

உக்ரைன் பாராளுமன்றத்துக்குள் கூழ் முட்டை, பெற்றோல் குண்டுகள் வீசி எதிர்க்கட்சிகள் ரகளை

உக்ரைன் பாராளுமன்றம் ரஷ்யாவின் கடற்படைத் தளத்துக்கான காலத்தை 25 ஆண்டுவரை நீடிக்க அனுமதி வழங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியபோது இதற்கான அனுமதியை பாராளுமன்றம் வழங்கியது. இதன் பிரகாரம் 2042ம் ஆண்டுவரை உக்ரைனில் ரஷ்யாவின் கடற்படைத் தளம் இயங்கவுள்ளது.

உக்ரைன் பிரதமர் யனுகோவிச், ரஷ்ய ஜனாதிபதி மெத்விடிவ் ஆகியோருக்கிடையே இது தொடர்பான உடன்படிக்கைகள் ஏப்ரல் 21ம் திகதி கைச்சாத்திடப்பட்டன. ரஷ்யாவிடமிருந்து உக்ரைன் பெறும் எரிவாயுக்களுக்கு முப்பது வீத விலைக் கழிவை வழங்குவது என ரஷ்யா உத்தரவாதம் வழங்கியதையடுத்து கடற்படைக் காலத்துக்கான கால எல்லையை உக்ரைன் பாராளுமன்றம் நீடித்தது. 236 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தக் கால எல்லை நீடிக்கப்பட்டது.

எனினும் இதைச் சட்டமாக்க இன்னும் பத்து எம்.பி.க்களின் ஆதரவுகள் தேவையாயுள்ளன. இது குறித்துப் பிரதமர் யனுகோவிச் கூறியதாவது, இதை மாற்றம் செய்ய முடியாது. குறைந்த விலையில் எரிவாயுவை பெற இதைச் செய்தோம். குறைந்த விலையில் எரிவாயுவை பெறுவதென்பது உக்ரைனின் வரவு செலவுத் திட்டத்தைப் போன்றதென்றார்.

யனுகோவிச் கடந்த பெப்ரவரி மாதம் ஆட்சிக்கு வந்தார். 2010ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்துக்கென 12 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணயத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும் பிரதமர் யனுகோவிச் எதிர்பார்க்கின்றார்.

உக்ரைன் பாராளுமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே நின்று வன்முறைகளில் ஈடுபட்டனர். கூழ் முட்டைகள், பெற்றோல் குண்டுகளை பாராளுமன்றத்துக்குள் எரிந்தனர்.

பாராளுமன்றம் எங்கும் புகை மண்டலமாகவும் கூழ் முட்டையாகவும் காணப்பட்டது. சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி பெருந்தொகையான கூழ் முட்டைகள் எரியப்பட்டன. இதனால் குடையைப் பிடித்தவாறு சபாநாயகர் ஆசனத்தை நோக்கி வந்தார். உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி வேட்பாளருமான டைமோ கொன்கோ கூறுகையில், உக்ரைன் கறுப்புக் பக்கத்துக்குச் சென்றுவிட்டது.

இது எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அவமானம் எனத் தெரிவித்தார். எதிர்க்கட்சியை பொறுத்தவரை 2017ம் ஆண்டுவரைக்கும். இக்கால எல்லை நீடிக்கப்படுவதையே விரும்புகின்றனர். உக்ரைன் கொடிகளை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்தை மிக மோசமாக விமர்சித்தனர். படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டதுடன் அரசாங்கம் விழிப்பாக இருந்தது.

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

பிரான்ஸ்:மஸ்ஜிதில் துப்பாக்கிச்சூடு

பாரிஸ்:தெற்கு பிரான்சில் இஸ்டர்ஸ் நகரில் அமைந்திருக்கும் மஸ்ஜித் ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுத்தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

இத்துப்பாக்கிச்சூடுத் தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் முஸ்லிம் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்புதர உறுதிப்பூண்டுள்ளதாக தெரிவித்தார். ப்ரான்காயிஸ் ஃபில்லனின் அலுவலகம் முஸ்லிம் தலைவர்களிடம் தமது ஆழ்ந்த கவலையையும், ஆதரவையும் தெரிவித்துக் கொண்டது.

மஸ்ஜிதின் மீது நேற்று அதிகாலைக்கு முன்பு 30 தடவை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் தெரிவிக்கிறது. கடந்த சனிக்கிழமை இரவு மார்சிலே என்ற தென் துறைமுக நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய (ஹலால்) இறைச்சி வியாபாரம் செய்யும் கடையின் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

பிரான்சின் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றிணைக்கும் அமைப்பின் தலைவர் முஹம்மது மூஸாவி இதுக்குறித்து தெரிவிக்கையில்; "மஸ்ஜிதில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது மிகக்கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பிரான்சின் ஊடகங்கள் இந்நிகழ்ச்சிக்கு பதிலாக ஒரு முஸ்லிம் நபர் பல பெண்களை திருமணம் செய்ததை பெரிதுப்படுத்துகிறது." என்றார்.

பிரான்சின் உள்துறை அமைச்சரும் அந்த நபர் பல தாரமணம் புரிந்திருந்தால் அவருடைய குடியுரிமை பறிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தை நெருங்குவதற்கான முயற்சி தொடரும்

வாஷிங்டன்:முஸ்லிம் சமூகத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி தொடரும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நடந்த 50 முஸ்லிம் நாடுகளிலிலுள்ள தொழிலதிபர்கள் மாநாட்டில் உரையாற்றினார் அவர். முஸ்லிம் உலகத்துடனான உறவை பலப்படுத்துவதற்காக கல்வித்துறையிலும், தொழில்துறையிலும் ஏராளமான திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

தீவிரவாதத்தை ஒழித்துவிட்டு பொருளாதார வளர்ச்சியை உறுதிச் செய்யவும் மத்திய ஆசியாவில் ஆசுவாசமான சமாதானத்தை நிறுவுவதிலும் அமெரிக்கா உறுதிப்பூண்டுள்ளதாகவும் ஒபாமா தெரிவித்தார்.

எந்த தடைகள் ஏற்பட்டாலும், இரு நாடுகளுக்கிமிடையே ஏற்றுக் கொள்ளத்தக்க சமாதான முயற்சிகள் தொடரும்.ஆனால், தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சமாதான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்க புதிய முயற்சி தேவை என்றும் ஒபாமா தெரிவித்தார்.

இதுபோல் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும்,பாகிஸ்தானிலும் போராளிகளுக்கெதிரான போரை முடிவுக்கு கொண்டுவருவதிலும் அமெரிக்கா உறுதிப்பூண்டுள்ளது என்றும், போராளிகளை தனிமைப்படுத்துவதற்காக அமெரிக்க புதிய நட்புறவுகளை தேடுவதாகவும் ஒபாமா தெரிவித்தார்.

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் பெண்களுக்கு அமெரிக்காவில் intern ஆக பணியாற்ற வாய்ப்பளிக்கப்படும் என ஒபாமா வாக்குறுதியளித்தார். கடந்த ஆண்டு கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஒபாமா நடத்திய உரையில்;"முஸ்லிம்களும், அமெரிக்காவும் பரஸ்பர மதிப்பு ரீதியான புரிந்துணர்வுக் கொள்ளவேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்

உமர் அல் பஷீர் மீண்டும் சூடான் அதிபராக

கார்த்தூம்:வடக்கு கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் அதிபர் தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணித்ததைத் தொடர்ந்து நேசனல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உமர் அல் பஷீர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உமர் அல் பஷீர் அதிபராக நீடிப்பார் என தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சூடான் தேர்தல் கமிஷன் சேர்மன் அபில் அலியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

1,01,14,310 வாக்குகளில் 68 சதவீத வாக்குகளைப் பெற்ற பஷீர் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதேவேளையில் சூடான் பீப்பிள்ஸ் லிபரேசன் மூவ்மெண்ட் தலைவர் ஸல்வா கீர் மாயார்டிட் தெற்கு சூடான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பகுதி சுய ஆட்சி மாகாணமான தெற்கு சூடானில் மட்டும் போட்டியிட்ட ஸல்வா 93 சதவீத வாக்குகளைப்பெற்று பெரும்பான்மையை நிரூபித்தார். பஷீருக்கு அடுத்த இடத்தைப்பெற்றவர் எஸ்.பி.எல்.எம் வேட்பாளர் யாஸிர் அர்மனாவார்.

முன்னாள் பிரதமரும் நேசனல் உம்மா கட்சியின் வேட்பாளருமான ஸாதிக்குல் மஹ்திக் 96,868 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதேவேளையில் சூடான் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முஹம்மது இப்ராஹீம் அதிபர் தேர்தலில் மிகவும் பின் தங்கிவிட்டார். சூடானில் முதல் முறையாக பெண் வேட்பாளரான ஃபாத்திமா அப்துல் மஹ்மூதிற்கு 30,562 வாக்குகள் கிடைத்தன.

அதேவேளையில் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுள்ள பஷீருக்கெதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தர்ஃபூர் போர் குற்றத்திற்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது

ஈரானுக்கு எதிராக ஐநாவின் புதிய பொருளாதார தடைகளை விரைவாக அமல்படுத்த ஒபாமா



ஈரானுக்கு எதிராக ஐநாவின் புதிய பொருளாதார தடைகளை விரைவாக அமல்படுத்த வைப்பதில் அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிரமாக உள்ளதாக அமெரிக்க பொது விவகாரங்களுக்கான அமைச்சர் பி.ஜே.கிரவ்லி தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான தடைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், கடந்த வார இறுதியில் பல்வேறு உலக தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இத்தகவலை வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் பி.ஜே.கிரவ்லி, "ஈரானுக்கு எதிரான ஐ.நா. தடையை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக அமல்படுத்திட அதிபர் பராக் ஒபாமா விரும்புகிறார். இப்போதைக்கு இவ்விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுடன் அமெரிக்கா தீவிரமாக பேசி வருகிறது" என்று தெரிவித்தார்.

திங்கள், 26 ஏப்ரல், 2010

பிரிட்டன் ஈரானுக்கு 650 மில்லியன் டாலர் திருப்பியளிக்க நீதிமன்றம் உத்தரவு

திஹேக்:1970களில் ஆயுத உடன்பாட்டில் நஷ்டஈடாக பிரிட்டன் 650 மில்லியன் டாலர் ஈரானுக்கு திருப்பியளிக்க வேண்டும் என தி ஹேக் நகரின் மத்தியஸ்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை உறுதிச் செய்த பிரிட்டன் அரசு நஷ்டஈட்டுத் தொகையை உடனடியாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. 1971 முதல் 1976 வரையிலான காலக்கட்டத்தில் ஈரானின் சர்வாதிகாரி ஷா பஹ்லவியின் அரசு 1500 போர் டாங்கிகளும், 250 ராணுவ வாகனங்களும் வாங்குவதற்கு பிரிட்டனுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

ஆனால், பின்னர் இஸ்லாமிய புரட்சியின் காரணமாக ஈரானில் ஆட்சியில் அமர்ந்த புதிய அரசு அவ்வொப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டு கொடுத்த பணத்தை திருப்பித்தர வேண்டும் எனவும் கோரியது.

இதனைத் தொடர்ந்த வழக்கில்தான் ஹேக் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு. 400 கோடி பவுண்ட் பிரிட்டீஷ் அரசு ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உடனடியாக திருப்பியளிக்கும் என்று இண்டிபெண்டண்ட் இதழ் கூறுகிறது.

கடலுக்கடியில் கேபிளில் பழுது- இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு

தென்கிழக்கு ஆசிய நாடுகளை இந்தியா வழியாக ஐரோப்பாவுடன் இணைக்கும் கடலுக்கடியிலான இண்டர்நெட் கேபிளில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் இண்டர்நெட் சேவைகளில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கேபிள் சேவையை பாரதி ஏர்டெல், டாடா கம்யூனிகேசன் உள்பட 16 சர்வதேச தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைந்த அமைப்பு நடத்தி வருகிறது.

இத்தாலி அருகே கடலுக்கடியில் இந்த கேபிளில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணிகள் நடக்கவுள்ளதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளி்ல் இண்டர்நெட் சேவைகள் மேலும் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்த கடலடி இண்டர்நெட் கேபிளுக்கு சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், செளதி அரேபியா, இத்தாலி, துனீசியா, அல்ஜீரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் டெர்மினல் ஸ்டேசன்கள் எனப்படும் மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக் முன்னாள் துணை அதிபர் கைது

ஈராக்கின் முன்னாள் துணை அதிபர் இஸ்ஸத் இப்ராகிம் அல்-தெளரி கைது செய்யப்பட்டுள்ளார்.தூக்கிலிட்டு கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் ஹூசேனின் உறவினரான இஸ்ஸத் இப்ராகிம், பாத் கட்சியின் துணைத் தலைவராகவும், நாட்டின் புரட்சிகரப் படை கவுன்சிலின் தலைவராகவும் இருந்தவர்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளால் சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது முதல் இவர் தலைமறைவாக இருந்தார். இவரை உயிரோடு அல்லது பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு பல மில்லியன் டாலர் பரிசை அறிவித்திருந்தது அமெரிக்கா.

இந்நிலையில் ஈராக்கின் வட கிழக்கு மாகாணத்தின் தலைநகரான தியாலாவில் உள்ள ஹம்ரின் மலைப்பகுதியில் ஒரு குகைக்குள் பதுங்கியிருந்த போது இவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவருடன் அவரது ஆதரவாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க கோரிக்கையை ஏற்று சதாம் ஹூசேனின் மூத்த மகள் ரகத் ஹூசேனை தேடப்படுவோர் பட்டியலில் இன்டர்போல் சேர்த்துள்ளது. இதையடுத்து இப்போது ஜோர்டானில் உள்ள அவர் விரைவில் நாடு கடத்தப்பட்டு ஈராக் போலீசாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஈராக் தீவிரவாதிகளுக்கு ரகத் ஆதரவு அளித்து வருவதாக அமெரிக்க ஆக்கிரமிப்புக் கூட்டுப் படையினரும் ஈராக்கிய போலீசாரும் குற்றம் சாட்டியதையடுத்து இன்டர்போல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஜோர்டான் மன்னரின் ஆதரவுடன் சதாம் ஹூசேனின் குடுமபம் அங்கு அடைக்கலம் அடைந்து வாழ்ந்து வருகிறது

அமெரிக்காவின் மிஸிஸிபி மாகாணத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 10 பேர் பலி

அமெரிக்காவின் மிஸிஸிபி மாகாணத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 10 பேர் பலியானார்கள்.உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வீடுகள், வர்த்தக நிறுவனங்களின் மேற் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. மரங்கள் அடியோடு பெயர்த்து எறியப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாக்டாவ் என்ற பகுதியில் 5 பேரும், யாஸூ நகரில் 4 பேரும், ஹோம்ஸ் பகுதியில் ஒருவரும் சூறாவளிக்கு உயிரிழந்தனர்.

சூறாவளிக்கு யாஸூ நகர் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மிஸிஸிபி மாகாணத்தில் 15 நகரங்கள் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

எகிப்தில் அடுத்த வருடம் தேர்தல் ;

அவசர காலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது
ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் திட்டவட்டமாகத் தெரிவிப்பு

எகிப்தில் 2010ம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தெரிவித்தார். விசேட வைபவ மொன்றில் சென்ற சனிக்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் இதனை தெரிவித்தார்.
விசேட வைபவமொன்றில் சென்ற சனிக்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி ஹொப்னி முபாரக் 2011ம் ஆண்டு தேர்தல் இடம் பெறும் வெளிநாடுகளின் தலை யீடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது. எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல அரசியமைப்பு மாற்றம் செய்யப்பட மாட்டாதென தெரிவித்தார்.
1981ம் ஆண்டிலிருந்து எகிப்தின் ஜனா திபதியாக ஹொஸ்னி முபாரக் பதவி வகிக்கின்றார். 82 வயதான இவர் அண்மையில் பிரிட்டன் சென்று சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள தேர்தலில் போட்டி யிடும் நோக்கம் ஹொஸ்னி முபா ரக்கிற்குண்டென்பது அவரின் பேச்சிலிருந்து தெளிவாகியது.
இது வரைக்கும் உதவி ஜனாதிபதி ஒரு வரை ஹொஸ்னி முபாரக் நியமிக்கவில்லை. 2005 ஆம் அண்டு இவரது மகன் உதவி ஜனாதி பதியாக நியமிக்கப்படுவாரெனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இவர் மீண்டும் போட்டியிட விரும் புவதையே இந்நடவடிக்கை காட்டு வதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எகிப்தின் சினாய் பகுதியிலிருந்து இஸ்ரேல் இரா ணுவம் வெளியேறிய 28 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய் யப்பட்ட வைபவத்திலே ஹொஸ்னி முபாரக் உரையாற்றினார். அவசர காலச் சட்டத்தையும் நீக்க முடியா தென ஹொஸ்னி முபாரக் தனதுரை யில் குறிப்பிட்டார்.
அரசிய லமை ப்பை மாற்றி அவசர காலச் சட்ட த்தை நீக்கினால் மாத்திரமே தேர்த லில் போட்டியிடலாம் என எதிர்க் கட்சிகள் அடம்பிடிக்கின்றன. எகிப் தின் தற்போதைய அவசர காலச் சட்டம் 1981ம் ஆண்டு அமுலுக்கு வந்தது எகிப்தின் அப்போதைய ஜனாதிபதி அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்ட பின் இச்சட்டம் அமுலாக்கப்பட்டது. இஸ்ரேலுடன் இரண்டு வருட சமாதான ஒப்பந்தம் செய்யப் பட்டதால் அன்வர் சதாத் படு கொலை செய்யப்பட்டார்

சனி, 24 ஏப்ரல், 2010

ஈரான் சிறையிலிருக்கும் அமெரிக்கர் மூவரை விடுவிக்க வலியுறுத்தல்

வாஷிங்டன்:ஈரானால் சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று அமெரிக்கர்களை உடனடியாக அந்நாட்டு அரசு விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியதாவது;

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈரான் நாட்டுக்குள் சட்டவிரோதமாக வந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இது குறித்து அவர்கள் மீது முறையான குற்றச்சாட்டு எதையும் ஈரான் அரசு பதிவு செய்யவில்லை. இந்நிலையில் கடந்த ஒன்பது மாதங்களாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் உடல் நிலை பாதிப்படைந்து வருகிறது. எனவே, அவர்கள் மூவரையும் விடுவித்து, சொந்த நாட்டுக்கு அவர்கள் திரும்புவதற்கு ஈரான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

ஈரான் ஜிம்பாவே இடையே அறிவியல்,தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஆப்ரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத், கடந்த வியாழனன்று ஜிம்பாவே சென்றிருந்தார். அப்பொழுது இரு நாடுகளுக்கிடையே ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அறிவியல்,சுற்றுலா,தொழில்நுட்பம், இளைஞர் விவகாரங்கள், போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இவ்விரு நாடுகளுக்கிடையே உடன்பாடுகள் கையெழுத்தாயின.

மேலும்,ஈரானின் ஏற்றுமதி உத்திரவாதம் மற்றும் ஜிம்பாவே நிதி அமைச்சகத்திற்கிடையே விஞ்ஞானம்,நாகரீகம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்ற பல ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஈரானின் 3 நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்த டிராக்டர் பிரிவு கலையை ஜிம்பாவே அதிபர் ராபர்ட் முகாபே பார்வையிட்டார். இதை ஜிம்பாவேயில் தொடங்கி வைக்கும் வகையில், விழாவில் ஈரான் அதிபர் ஜிம்பாவே அதிபரிடம் டிராக்டரின் ஸ்விட்சை ஒப்படைத்தார்

இஸ்ரேலிய உளவாளி லெபனானில் கைது

பெய்ரூட்:லெபனானின் தெற்குப் பகுதியில் ஆட்டோமொபைல் வியாபாரி போல் வேடமிட்டு இஸ்ரேலுக்கு உளவுப் பார்த்த உளவாளியை லெபனான் உளவுத்துறை கைதுச் செய்தது.

நேற்று மாலையில் கியாம் நகரில் வைத்து இவர் கைதுச் செய்யப்பட்டார். இதனை லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் லெபனான் உளவுத்துறை அதிகாரிகள் 14 இஸ்ரேலிய உளவு நெட்வொர்க்கை பூண்டோடு அழித்தனர். மேலும் இதுத்தொடர்பாக 80 இஸ்ரேலிய உளவாளிகளையும் கைதுச் செய்தனர். கைதுச் செய்யப்பட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணத்தண்டனை விதிக்கப்படும்.

பெரும்பாலான உளவுவேலைப் பார்க்கும் இஸ்ரேலிய உளவாளிகளை ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கம் கண்டறிந்து பிடித்து லெபனான் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

சூரியனில் நடக்கும் மாற்றங்களை குறித்த அபூர்வ படங்கள்- நாசா வெளியீடு





சூரியனில் நடக்கும் மாற்றங்களை இதுவரை அறியாத புதிய கோணத்தில் படம் பிடித்து வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்.

பார்க்கவே படு பிரமிப்பாக இருக்கும் இநதப் படங்களை நாசாவின், சூரிய இயக்க கண்காணிப்பு செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியுள்ளது.

சூரியனில் ஏற்படும் மின் காந்தப் புயல்கள், பீறிடும் பிளாஸ்மா ஆகியவற்றை நெருக்கமாகப் படம் பிடிக்க இந்த பிரத்யேக செயற்கைக் கோளை ஏவியது நாசா.

இந்த செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியுள்ள அட்டகாசமான படங்களை விளக்கங்களுடன் வெளியிட்டுள்ளது நாஸா.

கடந்த பிப்ரவரி 11ம் தேதி இந்த செயற்கைக் கோளை நாசா அனுப்பியது. இதுகுறித்து திட்ட தலைமை விஞ்ஞானி டீன் பெஸ்னல் கூறுகையில், சூரியன் குறித்த பல கருத்துக்களை இந்தப் புதிய படங்கள் பொய்யாக்கியுள்ளது என்றார்.

நாசா ஹீலியோபிசிக்ஸ் பிரிவு இயக்குநர் ரிச்சர்ட் பிஷர் கூறுகையில், செயற்கைக் கோள் எந்தவித கோளாறும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. கொலராடோ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட சாதனம் உள்ளிட்ட பல முக்கிய கருவிகள் இந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் அதில் மூன்று கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.

ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிப்பதாக பென்டகன் அறிக்கை.



வாஷிங்டன்:2015ம் ஆண்டுக்குள் ஈரானிடம் அமெரிக்காவைத் தாக்கும் சக்தி கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாராக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது.அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு பென்டகன் அனுப்பியுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: சில நாடுகளின் (வடகொரியா, சீனா?) உதவியோடு ஈரான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை படுவேகத்தில் பலப்படுத்தி வருகிறது. இதே வேகத்தில் போனால் 2015ம் ஆண்டுக்குள் அமெரிக்காவைத் தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் (intercontinental ballistic missile- ICBM) ஏவுகணையை ஈரான் தயாரித்துவிடும்.

இந்த ஏவுகணையை வழியிலேயே தடு்த்து நிறுத்தி அழிக்கும் ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா நிலைநிறுத்தியாக வேண்டும். ஏவுகணை தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், வேறு பல விவகாரங்களிலும் ஈரான் தைரியமாக செயல்பட்டு வருகிறது. இராக்கி்ல் ஷியா பிரிவு போராளிகளுக்கு ஈரான் தொடர்ந்து பண, ஆயுத உதவிகளை செய்து வருகிறது. அவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறது. அதே போல ஆப்கானிஸ்தானிலும் ஒரு பிரிவு போராளிகளுக்கு அரசியல் ஆதரவும் நிதி, ஆயுத உதவிகளைத் தந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வேலைகளை அமெரிக்கா தொடர்ந்து செய்து வரும் நிலையில், பென்டகனின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்த்ததாக கருதப்படுகிறது.
Read more...

அமெரிக்காவின் அணுஆயுத தாக்குதல் மிரட்டல் குறித்து உலக நாடுகள் அமெரிக்காவை கண்டிக்கவேண்டும்.



THURSDAY, APRIL 22, 2010
டெஹ்ரான்:ஈரான் மற்றும் கொரியா நாட்டிற்கெதிராக அமெரிக்காவின் அணுஆயுத தாக்குதலின் மிரட்டல்களை தொடர்ந்து, அமெரிக்காவின் போர்தொடுக்கும் எண்னத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ளவேண்டும். இதற்கு ஒபாமாவின் அமெரிக்க அரசுதான் முழுவதுமாக பொறுப்பேற்க்க வேண்டும் என்று உலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என ஈரானின் மூத்த தலைவர் ஆயதுல்லா சையத் அலி கூறியுள்ளார்.

சர்வதேச நாடுகளுக்கும் இந்த மிரட்டல்களை தவிர்க்கும் உரிமை கிடையாது என்று டெஹ்ரானில் நடைபெற்ற செவிலிகள் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒபாமாவின் இந்த மிரட்டல், அமெரிக்க வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்றும் மனிதகுலத்திற்கு எதிராக இப்படி ஒரு மிரட்டலை விடுவதற்கு உலகத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அலி சூசகமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் எக்காலமும் யு.எஸ்சின் நரக தலைமைத்துவத்திற்கு அடி பணிய மாட்டோம் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார். முன்னதாக, அமெரிக்கா அணுஆயுதத்தை கொண்டு ஈரான், கொரியா போன்ற நாடுகளை தாக்கலாம் என்பதுபோல சட்டத்தை மாற்றியமைத்தது நினைவிருக்கலாம். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரானும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரானின் ராணுவ பலத்தை இஸ்ரேலால் எதிர்க்கொள்ள இயலாது: ஈரான் பாதுகாப்புத்துறை


அமைச்சர்.
தெஹ்ரான்:ஈரானின் ராணுவ பலத்தை எதிர்க்கொள்ள இஸ்ரேலுக்கு துணிவில்லை என்று ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்தார். ஈரானின் வடக்கு நகரான பபோலில் FNA வுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.

’ஈரானின் ராணுவ மற்றும் ஆன்மீக பலம் இஸ்ரேலுக்கு மரணத்தையும் துயரத்தையும் விளைவிக்கும்.’ இஸ்ரேல் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் சந்தித்துவரும் பிரச்சனைகளை நினைவுக்கூறிய வாஹிதி ,’சியோனிஷ அரசு சர்வதேச தனிமைப்படுத்தப்படுதலிருந்தும், உள்நாட்டுப் பிரச்சனையிலிருந்தும் தப்பிக்கலாம் என கற்பனைச் செய்கிறது. ஆனால் அது தோல்வியையே தழுவும்.

மேற்கு கரையும், பைத்துல் முகத்தஸும் இன்று சியோனிஷ அரசுக்கு முக்கிய பிரச்சனையாக திகழ்கிறது. இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் இஸ்ரேல் நாசத்தை விளைவிக்கும் பதிலடியை ஈரானின் படைகளிடமிருந்து எதிர் கொள்ளவேண்டி வரும். லெபனானுக்கு எதிராக நடந்த 33 நாள் போரை விட கடுமையான விளைவுகள் ஏற்படும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரானுக்கெதிரான அணுஆயுத அச்சுறுத்தல் மனித இனத்தை அழிப்பதற்கான அந்நாடுகளிலிருந்து வரும் அடையாளமாகும்.

வாஹிதி இதனை தெரிவிப்பதற்கான காரணம் என்னவெனின்ல் சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா,ஈரான் மற்றும் வடகொரியாவுக் கெதிராக அணு ஆயுத தாக்குதல் குறித்து அச்சுறுத்தினார்.அணுஆயுதக் குறைப்பை பற்றி ஒரு பக்கம் பேசும் அமெரிக்கா டெஹ்ரான் மற்றும் பியோங்யாங் (வடகொரியா தலைநகர்)கிற்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை குறித்தும் பேசுகிறது. ஒபாமாவின் அச்சுறுத்தலைப் பற்றிக் குறிப்பிட்ட ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் ஒபாமாவிற்கு அனுபவம் போதவில்லை எனத்தெரிவித்தார்.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் காமினி ஈரானின் புரட்சிப் படையினர் மற்றும் ராணுவ கமாண்டர்கள் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், அமெரிக்காவின் அணுஆயுத அச்சுறுத்தலைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது,’ஒபாமாவின் அறிக்கை ஆச்சரியமாக உள்ளது. உலகம் இதனை ஊன்று கவனிக்க வேண்டும். 21 ஆம் நூற்றாண்டில் அணுஆயுத தாக்குதலைக் குறித்துப் பேசும் அமெரிக்காதான் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்கிறது.’ என்றார்.

ஈரானின் தரைப்படை கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் ரசா போர்டஸ்டான் கடந்த புதன் கிழமை கூறுகையில்,’ஈரானின் தரை,கப்பல்,விமானப்படைகள் நாட்டிற்கெதிரான அச்சுறுத்தலை எதிர்க்க தயாராக உள்ளது என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் ஆயுதப்படைகள் எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடிக் கொடுக்க எந்நேரமும் விழிப்புடனும், தயாராகவும் இருக்கின்றன’ என்றார்.

வியாழன், 22 ஏப்ரல், 2010

இஸ்ரேல் இராணுவத்தினரை கைது செய்ய ஹமாஸ்

இஸ்ரேல் படை வீரர்களை கைது செய்யவுள்ளதாக அறிவித் துள்ள ஹமாஸின் வெளிநாட்டு அமைப்பாளர் காலித் மெஷால், இவ்வாறு கைது செய்யப்படும் இஸ்ரேல் வீரர்கள் பணயக் கைதிகளாகப் பாவிக்கப்படவுள் ளதாகக் கூறினார். இஸ்ரேல் சிறைகளிலு ள்ள பலஸ்தீனர் களை விடுவிக்க பேரம் பேசும் சக்தி தேவை.

இதற்காக இஸ்ரேல் இராணுவத்தினரைக் கைது செய்ய வேண்டியுள்ள தென்றும் காலித் மெஷால் குறிப்பிட்டார். 2006 ம் ஆண்டு காஸா இஸ்ரேல் யுத்தம் மூண்ட போது ஹமாஸ் அமைப்பினர் கிலாத்சாலிட் என்ற இஸ்ரேல் இராணுவ வீரரை கைது செய்தனர். இவரை விடுதலை செய்ய ஹமாஸ் நிபந்தனை விதித்தது. இஸ்ரேல் சிறைகளிலு ள்ள பலஸ்தீனர்களை விடுதலை செய்யவேண்டுமென ஹமாஸ் கோருகின்றது.

இந் நிலை மத்திய கிழக்கு சமாதான முயற்சி களை வெகுவாகப் பாதித்தது. எகிப்து, ஜேர்மன் என்பன இக் கைதிகள் பரிமாற்ற விடயத்தில் மத்தியஸ்தராகச் செயற்பட்டன. எனினும் எதிர் பார்த்த பலன் கிடைக்கவில்லை. இந் நிலையில் மேலும் பல இஸ்ரேல் வீரர்களைக் கைது செய்ய ஹமாஸ் எண்ணியுள் ளமை நிலைமையை மேலும் மோசமாக்கலாம்.

புதன், 21 ஏப்ரல், 2010

அமெரிக்க செனட்டர் எச்சரிக்கை


ஹிஸ்புல்லா நவீன ஏவுகணையை தயாரிப்பது இஸ்ரேலுக்கு ஆபத்து

லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் புதிய தொழில் நுட்பத்தினூடாக நவீன ஏவுகணைகளைத் தயாரிப்பதாக அமெரிக்காவின் செனட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹிஸ்புல்லாஹ் தொழில்நுட்ப ரீதியாகப் பலமடைவது இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்து எனத் தெரிவித்த செனட்டர் மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு சிரியா ஆயுதங்களை வழங்கு வதாக அண்மையில் இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமென் பெரஸ் குற்றம்சாட்டினார். இதை சிரியா முற்றாக நிராகரித்தது. ஆனால் இதன் உண்மைத் தன்மைகளை ஆராய அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது. சிரியத் தூதுவருக்கு இதுபற்றி விளக்கம் தரும்படியும் அமெரிக்கா கேட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் எதிர்கொள்ளும் ஆபத்தை இல்லாமல் செய்ய வேண்டுமெனில் இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினைகள் இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் தீர்க்கப்படவேண்டுமென அமெரிக்க செனட்டர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து விதமான அச்சுறுத்தல்களையும் சந்திக்க தயார் : ஈரான்


.
'எங்கள் இஸ்லாமிய குடியரசின் ராணுவம் அனைத்து விதமான மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் சந்திக்கும் ஆற்றலுடையதாக மாற்றப்பட்டுள்ளது' என்று ஈரானின் துணை ராணுவ அமைச்சர் அஹ்மத் வாஹித் தெரிவித்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளாக, எங்கள் ராணுவ பலத்தை கூட்டுவதில், நாங்கள் வெற்றியை ஈட்டியது மட்டுமல்லாமல் நிறைய புதிய தயாரிப்புகளையும் ஈரான் சாதிக்கவுல்லதாக அவர் புகழுரைத்தார்.இன்று அனைத்து விதமான ராணுவ ஆயுதங்களும் எங்களிடம் தயார் நிலையில் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.ஈரான் ஒரு அஞ்சக்கூடிய நாடில்லை என்று நம் சக்திகள் நிரூபித்துல்லதாக - ஆயாதுல்லா ஹுசைன் உடனான சந்திப்பிற்கு பிறகு அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Read more...

ஃபலஸ்தீன் - இஸ்ரேல் மத்தியஸ்தத்திற்க்கு யு.எஸ். தகுதியற்றது: ஹமாஸ் குற்றச்சாட்டு.



ஹிலாரி கிளிங்டனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா சர்சைக்குரிய விதத்தில் இஸ்ரேலை வாழ்தியதையடுத்து, இஸ்ரேல்-ஃபலஸ்தீனிற்கான அமைதி முயற்சியில் யு.எஸ் மத்தியஸ்தம் செய்வதற்கான தகுதியை இழந்துவிட்டது என்று ஹமாஸ் கூறியுள்ளது.
இதுக்குறித்து ஹமாஸ் செய்தி தொடர்பாளர் சமி அபு ஜுஹ்ரி, ஒபாமாவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் ஒபாமாவின் இவ்வகையான பேச்சு, இஸ்ரேல் ஃபலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது என்றார். எங்கள் விவகாரத்தில் வாஷிங்டன் ஒரு 'நேர்மையான தரகராக' செயல்பட முடியாது என்றே இது காட்டுகிறது என்று ஜுஹ்ரி குற்றம்சாட்டினார்.

அமெரிக்காவின் இவ்வாழ்த்துச் செய்தி ஒபாமாவின் முயற்சிகளை நம்பும் அனைத்து அரபு நாடுகளுக்கும் ஒரு சிறந்த பாடமாகும் என்று மேலும் தெரிவித்தார். முன்னதாக, ஏப்ரல் 20 அன்று தன் சுதந்திர தினத்தை கொண்டாடும் இஸ்ரேலுக்கு ஒபாமா கூறிய வாழ்த்து செய்தியில் இஸ்ரேல்அமெரிக்க உடனான எங்கள் உறவை யாராலும் பிரித்துவிட முடியாது என்றும் எதிர்காலத்தில் இது மேலும் வலுவடையத்தான் செய்யும்' என்று கூறியிருந்தார். இதுவரை, 700,000திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, தற்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலயே அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளது உலக வரலாற்றிலயே முதன்முறை என்று கூட கூறலாம்.
Read more...

ஹிஸ்புல்லாஹ்வுக்கு சிரியா ஆயுத உதவி :


அமெரிக்கா தனது தூதரை திரும்ப அழைத்தது.
வாஷிங்டன்:லெபனானில் செயல்படும் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆயுதம் வழங்கியதாக குற்றஞ்சாட்டி அமெரிக்கா தனது தூதரை சிரியாவிலிருந்து திரும்ப வருமாறு உத்தரவிட்டுள்ளது.வாஷிங்டனில் சிரியா தூதரக துணைத்தலைவர் சுஹைர் ஜாபரை அழைத்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தமது கண்டனத்தை தெரிவித்தது.
கடந்த வாரம் சிரியா ஹிஸ்புல்லாஹ்வுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியிருந்தது. 2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையே நடைபெற்ற போரில் 160 இஸ்ரேலிய ராணுவத்தினரும், 1200க்குமேற்பட்ட லெபனான் நாட்டைச் சார்ந்தவர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தில் லெபனான் மீது ஆயுதத்தடையை விதித்திருந்தது. லெபனான் அரசு மற்றும் ஐ.நா வின் உத்தரவில்லாமல் ஆயுதம் பரிமாற்றம் கூடாது என்பதுதான் தீர்மானம். ஆனால் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சிரியாவும், ஈரானும் ஆயுதங்களை வழங்குவது தொடர்வதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஹிஸ்புல்லாஹ் வசம் பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருந்தால் அது இஸ்ரேலுக்கு பெரும் பீதியை கிளப்பும் எனக் கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நான்காவது முறையாக சிரியாவுக்கு எதிராக இதுத்தொடர்பான சந்தேகம் எழுந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கார்டன் டுக்விட் கூறுகிறார்.

ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆயுதம் வழங்குவதை கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் கூறுகிறார். இக்குற்றச்சாட்டுகளை சிரியா ஏற்கனவே மறுத்திருந்தது. தங்களின் அணுஆயுத திட்டங்களை குறித்த கேள்விகளிலிருந்து கவனத்தை திசைத்திருப்ப இஸ்ரேல் தம் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுவதாக சிரியா தெரிவிக்கிறது. அமெரிக்கா சமீபத்தில் சிரியாவுடனான உறவை மேம்படுத்த முயற்சிகளை மேற்க்கொண்டிருந்தது.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

கிறிஸ்தவ பாதிரிகளின் பாலியல் சேட்டைகள்:

லத்தீன் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் கூடுதல் தகவல்கள்
ஸாவாபோலா:12 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் தொந்தரவுச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு பிரேசிலில் 83 வயது பாதிரியார் ஒருவரை கைது செய்ததன் மூலம் லத்தீன் அமெரிக்காவில் கிறிஸ்தவ பாதிரிகளின் பாலியல் பலாத்காரம் தொடர்பான மேலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

மோன்ஸித்தர் லூயிஸ் மார்க்கோஸ் பார்போஸாயிக்கும் மேலும் இரண்டு பாதிரியார்களுக்கும் எதிராக வெளிவந்த பாலியல் சேட்டைத் தொடர்பான ஆதாரப்பூர்வமான செய்திகள் பிரேசிலில் சூறாவளியை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கத்தோலிக்க பாதிரிகளின் பாலியல் சேட்டைகளைக் குறித்த செய்திகள் பரவிவரும் சூழலில் லத்தீன் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல என்பது பிரேசிலிலிருந்து வெளிவரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

பார்போஸாவுக்கும் 19 வயதுடைய இளைஞருக்கும் இடையேயான படுக்கையறைக் காட்சிகளை எஸ்.பி.டி தொலைக்காட்சி கடந்த மாதம் ஒளிப்பரப்பியதைத் தொடர்ந்து பாதிரிகள் குறித்த சர்ச்சைகள் பிரேசிலில் துவக்கம் குறித்தன. இச்செய்தி இணையதளத்தில் பரவலாக வெளியானது.

2009 ஜனவரியில் பதிவுச்செய்த வீடியோதான் அது என எஸ்.பி.டி தொலைக்காட்சி தெரிவித்தது. பார்போஸாவுடன் படுக்கையறையை பகிர்ந்துக்கொண்ட 19 வயது இளைஞன் அவருடன் 4 ஆண்டுகள் சர்ச்சில் பணியாற்றியுள்ளான். புலன் விசாரணை நடத்தியதில் பார்போஸா ஏராளமான சிறுவர்களை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. வழக்கு தற்பொழுது நீதிமன்றத்தில் உள்ளது. இருபதிற்குமேற்பட்ட சாட்சிகளி விசாரணைச்செய்ததில் பார்போஸாவும் இதர இரண்டு பாதிரிகளும் பணமும், ஆடைகளும் இதர அன்பளிப்புகளும் வாக்களித்து 12 வயது சிறுவர்களைக்கூட பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தியதாக கண்டறியப்பட்டது.

மூன்று பாதிரிகளையும் வெளியேற்றிய கிறிஸ்தவ சபை விசாரணையை துவக்கியுள்ளது. பார்போஸாவும் இதர இரண்டு பாதிரிகளும் எங்கு வேலைப்பார்த்தனர் என்பதுக் குறித்து தகவலை கிறிஸ்தவ சபை வெளியிடவில்லை.

லத்தீன் அமெரிக்காவில் கிறிஸ்தவ பாதிரிகளுக்கு எதிராக சமீபத்தில் ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த மாதம் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஒரு பாதிரியார் தப்பி ஓடினார். பொலிவியாவில் இவர் மூன்று சிறுவர்களை பாலியல் வன்புணர்வுச் செய்ததாக ஒரு கன்னியாஸ்திரி புகார் கூறியிருந்தார்.சிலி நாட்டில் வயதுக்கு வராத எட்டு சிறுமிகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியதாக பாதிரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் ஒரு சிறுமி கர்ப்பிணியானார்.

ஒரு ஆர்தோடக்ஸ் கத்தோலிக்க சபையின் ஸ்தாபகரான பாதிரியார் தனக்கு அவர் மூலம் பெற்ற இரண்டு சிறுவர்களில் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கியதாக மெக்சிக்கோவைச் சார்ந்த பெண்மணி கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார்.

பல்வேறு நாடுகளில் பாலியல் குற்றச்சாட்டுகளின் காரணமாக பல பாதிரியார்களையும் ட்ரான்ஸ்ஃபர் அல்லது வேறு நாடுகளுக்கு அனுப்பிய 30க்கும் மேற்பட்ட சம்பவங்களை கண்டறிந்ததாக அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பலரும் இதர நாடுகளிலும் தங்கள் பாலியல் சேவையை தொடர்கிறார்கள்.

பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த சூழலில்தான் போப்பின் அடுத்த இடத்திலிருக்கும் கர்தினால் டார்சிசியோ பெர்டோனின் அறிக்கை சர்ச்சையை கிளப்பியது. பாதிரிகளின் பாலியல் சேட்டைகளுக்கு காரணம் திருமணம் முடிக்காத துறவறம் காரணமல்ல எனவும் ஓரினச்சேர்க்கை மீதான ஈடுபாடுதான் என்றும் அவர் கூறியதற்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற இயற்கைக்குமாறான உறவை மேற்க்கொள்ளும் மாபாதகச் செயலை புரிவோரின் கூட்டமைப்பு தமது எதிர்ப்பை தெரிவித்தது

அரைகுறை ஆடைகளை அணிவதாலும் கண்மூடித்தனமான உறவுகள் வைப்பதனாலும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன - ஈரான் உலமா

பெண்கள் அறைகுறையாக அணியும் ஆடைகள், மார்க்கத்திற்கு புறம்பான வகையில் கண்மூடித்தனமாக ஆண்களிடம் உறவுகளை பேணும் பெண்களினால் தான் பூகம்பங்கள் ஏற்படுகின்றன என்று ஈரான் நாட்டின் மூத்த உலமா ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஈரான் அதிபர் அஹ்மத்நிஜாத், மிகப்பெரிய பூகம்பம் ஒன்று விரைவில் தெஹரானை தாக்கவுள்ளது, அதனால் தெஹ்ரானில் வாழும் 12 மில்லியன் மக்கள் தங்கள் வசிப்பிடத்தை மாற்றுமாறு கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை குத்பாவில் உரையாற்றிய இந்த உலமா, நிறைய பெண்கள் அடக்கமாக ஆடைகளை அணிவதில்லை. இது ஆண்களை வழிதவறச் செய்கிறது, தங்கள் மானத்தை காப்பாற்ற தவறிவிட்டார்கள், விபச்சாரத்திலும் ஈடுபடுகிறார்கள். இதனால் இன்றைய நாட்களில் பூகம்பங்கள் போன்ற இயற்க்கை சீற்றங்கள் அதிகம் நிகழ்கின்றன என்றார்.

ஈரானிய இஸ்லாமிய நாட்டில் வாழும் பெண்கள் தங்கள் ஆடைகளை தலையிலிருந்து பாதம்வரை மறைத்திருக்க வேண்டும். ஆனால் நிறைய பெண்கள் குறிப்பாக இளைஞிகள் இஸ்லாத்தை பின்பற்றுவதில்லை என்றும், மிகவும் இறுக்கமான ஆடைகளை அவர்கள் அணிவதாகவும், தலைஅணிகள் பாதி இழுத்தபடி அனைத்து உரோமங்களை காட்டும் படி நடப்பதால் இறைவனின் கோபப்பார்வையினால் பூகம்பங்கள் ஏற்படுகின்றன என்றார்.

மண்ணிற்குள் புதைவதில் இருந்து நாம் எப்படி தப்ப முடியும்? இறைவனிடம் மன்னிப்பு கேட்டு தஞ்சம் அடைவதும் , இஸ்லாமிய முறைப்படி நம் வாழ்க்கையை அமைப்பதும் தவிற வேறு எந்த வழியும் இல்லை என்றார் அந்த உலமா.

ஒரு உயர்ந்த பண்டிதர் எனக்கு சொல்லி இருந்தார், மக்கள் அனைவரும் தம்மை படைத்தவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இயற்கை சீற்றங்கள் நம்மை நெருங்குகின்றன என்று! தெஹ்ரானை ஒரு பூகம்பம் தாக்கும் பட்சத்தில் இறைவனின் அருள் மட்டும்தான் அதை எதிர்கொள்ள உதவும், ஆதலால் நாம் நம் இறைவனை ஏமாற்றமடையச் செய்ய வேண்டாம் என்று தன் ஜும்மா உரையை முடித்தார் காஸிம் சேதுகி என்ற அந்த உலமா.

ஈரானின் ஒரு அமைச்சர் கூறுகையில், மன்னிப்பும் இறைவனை துதி செய்வதும் தான் இது போல பூகம்பங்களை சமாளிக்கும் சூத்திரமாகும் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் நம்மால் பூகம்பத்தை நிறுத்த எந்த ஒரு கருவியையும் உருவாக்க முடியாது. மாறாக அது இறைவனின் சட்டகம், அதிலிருந்து தப்பிக்க இறைவனை வணங்க வேண்டும், பாவங்களை தவிர்க்க வேண்டும், பாவ மன்னிப்பை கோர வேண்டும், தருமம் செய்ய வேண்டும் மற்றும் தன்னை சுயமாக இறைவனின் பாதையில் அர்ப்பணிக்க வேண்டும் என்றார் மஹ்ஸூலி.

முன்னதாக, பெரிய வகையான பூகம்பம் ஒன்று தாக்கவுள்ளதாக ஆராய்ச்சி நிபுனர்கள் அரசிற்கு எச்சரிகை விடுத்திருந்தனர். 2003ஆம் ஆண்டில், ஈரானின் பாம் என்ற இடத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் சுமார் 31,000 உயிர்கள் மாண்டன. பாமின் ஜனத்தொகையின் கால்வாசி தொகை அது. பழைய கலாச்சார சின்னங்கள் அனைத்தும் அளிந்தன.

யு.ஏ.யில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்ணுக்கு மரணதண்டனை

ஐக்கிய அரபு அமீரகத்தில் போலீஸ் துறையில் பணியாற்றிய தனது கணவரை,பெண் ஒருவர் தனது கள்ளக் காதலர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த சம்பவம் 2003-ம் ஆண்டு நடைபெற்றது. இதையடுத்து அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு ஷார்ஜா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக விசாரித்து வந்த நீதிமன்றம் 4பேருக்கும் இவ்வழக்கில் மரணதண்டனை பிறப்பித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களின் மரணதண்டனையை உறுதி செய்தது.

கொலை நடந்து 7 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மரணதண்டனை பெறும் முதல் பெண் இவர்தான்.

இஸ்லாமிய சட்டப்படி, மரணதண்டனை குற்றவாளிகளை பாதிக்கப்பட்டோரின் நெருங்கிய உறவினர் மன்னித்துவிட்டால் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ரத்து செய்யப்படும்.

ஆனால், தற்போது மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளையும் மன்னிக்க முடியாது; அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று கொலையுண்டவரின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இதனால் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை விலக்கிக் கொள்ள எவ்விதத்திலும் வாய்ப்பில்லை. அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என ஐக்கிய அரபு அமீரக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாத இஸ்ரேலிற்கு எப்போதும் அமெரிக்கா துணை நிற்கும் – ஹிலாரி கிளிங்டன்.

வாஷிங்டன்:இஸ்ரேலிற்க்கு நாங்கள் அளித்து வரும் ஆதரவும், பாதுகாப்பும் எந்த சூல்நிலையிலும் வாபஸ் பெற மாட்டா என்று அமெரிக்க செயலாளர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார்.அதிபர் ஒபாமா மற்றும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூவிற்க்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தாலும், யு.எஸ் உங்களுக்காக என்றும் முன்னிற்க்கும்! உங்கள் இடர்களில் பங்குகொள்ளும்! உங்களின் தோல்களில் உள்ள சுமையை பகிர்ந்துக் கொள்ளும்! இரு நாடுகளும் தங்களுடைய எதிர்காலத்தை சேர்ந்தே சந்திக்கும்!" என்று இஸ்ரேலின் 62ஆம் ஆண்டு விழாவில் கிளிங்டன் சூளுரைத்தார்.


"எனக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு ஆழமான தனிப்பட்ட கடமை ஒன்றுள்ளது. ஆகவே, அது ஒபாமாவிற்க்கும் பொருந்தும். இஸ்ரேலுக்கெதிராக பல சவால்கள் இன்றுள்ளன. ஆனாலும், அது தன் வாக்குறுதிகளை இதுவரை இல்லாதவாறு பேணிவருகிறது" என்றார். அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரேல் மற்றும் ஃபலஸ்தீன நாட்டின் பிரச்சனைகளை தீர்த்தால், மத்திய கிழக்குகில் அமைதி ஏற்படுத்தும் என்ற ஒபாமா அரசின் நம்பிக்கை இன்னும் சாத்தியம்தான்" என்று தெரிவித்தார்.

"1948ல், வெறும் 11 நிமிடத்தில் அப்போதைய ஜனாதிபதி எடுத்த முடிவுதான் இன்று இஸ்ரேல் என்ற நாடு உருவாக காரணம்" என்று நினைவு கூர்ந்தார்.மேலும் "அன்றிலிருந்து இன்றுவரை, உங்களுடன் யு.எஸ் ஒற்றுமையோடுள்ளது" என்றார் கிளிங்டன். ஆனால், கடந்த மார்ச்சில் யு.எஸ் துணை ஜனாதிபதி பிடேன் இஸ்ரேல் சென்றபோது இஸ்ரேல் 1600 குடியேற்ற்ங்கள் கொண்ட யூத விரிவாக்கத்தை அறிவித்தது. இதை கிளிங்டன், அமெரிக்காவை அவமானப்படுத்துகிற செயல் என்றும் சாடிருந்தார்.இந்த வருடம் அமெரிக்கவிற்கும் இஸ்ரேலிற்க்கும் இடையே ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு மத்தியில், கிளிங்டனின் இந்த புகழாரம் இஸ்ரேல்-அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மேலும் வலுபடுத்தும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.
Read more...

ஆன்மீகத் தலைவர்: ஜனநாயம், மனித உரிமைகள் பற்றிப் பேசும் நிலையில் அமெரிக்க அரசு இல்லை



அரசியல் குழு: நவ்ரூஸ் வைபவம் மற்றும் ஈரானிய புதுவருடப் பிறப்பு என்பவற்றையொட்டி நிகழ்வின் போது, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமெனயி அவர்கள், மஷ்ஹத் மக்களையும், இமாம் ரிஸா (அலை) அவர்களின் புனித அடக்கஸ்தலத்தையும் தரிசித்தார்.

இச்சந்திப்பனி போது உரையாற்றிய ஆயத்துல்லாஹ் காமெனயி அவர்கள், ஜனநாயம் மற்றும் மனித உரிமைகளை ஆதரிப்பதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா மேற்கொண்ட அழிவு நடவடிக்கைகள், காஸாவில் இஸ்ரேலின் வன்முறைகளுக்கு அது வழங்கிய ஒத்துழைப்புகள் என்பவற்றின் அடிப்படையில், ஜனநாயகம் பற்றியொ மனித உரிமைகள் பற்றியோ பேசுவதற்கு அமெரிக்காவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆன்மீகத் தலைவர், ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் நான்காவது தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கும் நாம், நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளும் அர்ப்பணிப்புகளும் அதிகமுள்ளன எனத் தெரிவித்தார். கடந்த தேர்தலின் பின்னரான வன்முறைகளையும் எதிரிகளின் திட்டமிட்ட சதிகளையும் முறியடிப்பதில் ஈரானிய மக்கள் காட்டிய விசுவாசத்தையும் ஈரான் தேசத்தின் ஒற்றுமையையும் சிலாகித்த அவர், இத்தகைய உறுதியான நிலைப்பாடு தொடர்ந்திருக்க வேண்டுமெனவும் அப்போதே ஈரானை முன்னணி வல்லரசு நாடொன்றாக மாற்றியமைக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆயத்துல்லாஹ் காமெனயி அவர்கள் தொடர்ந்து உரையாற்றும் போது, ஈரான் இஸ்லாமியக் குடியரசு, இறைநம்பிக்கையையும் நபிகளாரின் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டது. இறைநம்பிக்கையும் இஸ்லாமியப் போதனைகளும் மனித வாழ்க்கையில் ஒழுக்க விழுமிய வளர்ச்சிக்கும், சடவாதத் தூய்மைக்கும் உயர்ந்த மனப்பக்குவத்திற்கும் பிரதான காரணமாக அமையும். இதன் காரணமாகவே இஸ்லாமியக் குடியரசு இஸ்லாமியப் போதனைகளையும் கோட்பாடுகளையும் தனது அடிநாதமாகக் கொண்டுள்ளது என்றார்.

பன்மடங்கு உறுதிக்கும் உழைப்புக்குமான ஆண்டு' எனப் பெயரிடப்பட்டுள்ள ஈரானியப் புதுவருடம் பற்றிக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு ஒவ்வொரு வருடத்திற்கும் பெயரிடுவது வெறுமனே வைபவங்களை சிறப்பிப்பதற்காக அல்ல என்றும், சமகாலப் பிரச்சினைகள் அவற்றின் முக்கியத்துவங்கள், அவற்றுக்கு தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தங்கள் மற்றும் தேவைகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டே இவ்வாறு யெரிடப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

கடந்த வருடத்தில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அறிவியலாளர்கள் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்துப் பேசிய அவர், இப்பணிகள் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்களிப்புச் செய்துள்ளன எனவும், பிரதான குறிக்கோளை அடையும் பாதையில் அவை ஊக்குவிப்பை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அறிவைப் பெறுவதும், ஆய்வுகளை மேற்கொள்வதும் மட்டும் மனித சமூகத்தின் கடமையல்ல, குறிக்கோள்களை அடைவதற்கான வழிகளுமல்ல. மாறாக, ஆய்வு நிலையங்களும் கல்லூரிகளும் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புடனும் தூரநோக்குடனும் தமது பாதையை வகுத்துச் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் நிருவாக மற்றும் சட்ட சபைகள், இவ்வருடத்தின் கருப்பொருளின் படி செயற்படவும் அதற்கான குறிக்கோளை அடையும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபடவும் தயாராக இருக்கும் என உறுதி கூறியதுடன், நிருவாகத்துறையானது, நாட்டின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் என்பவற்றையும் அவற்றுடன் தொடர்புடைய அனைத்துத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் என்றார். நிருவாகத்தின் இப்பணிகளின் போது, சட்டசபை தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆக்கபூர்வமான சிந்தனைகளை உருவாக்குதல், நூல்களை வாசித்தல் மற்றும் பொது அறிவை வளர்த்தல் என்பன நாட்டுக்கு அவசியமாகவுள்ள ஏனைய துறைகளாகும் என அவர் அடையாளப்படுத்தினார்.

பன்மடங்கு உறுதிக்கும் உழைப்பு என்பவற்றின் போது தேவைப்படும் மற்றொன்று வறுமை, ஊழல், மற்றும் அநீதி என்பவற்றுக்கெதிரான சண்டையாகும். அடிப்படைக் குறிக்கோளை அடைவதில் ஒவ்வொருவரும் தளராத அயராத முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் காணப்பட்ட அசம்பாவிதங்களுக்குக் காரணமாக அல்லது ஒத்துழைப்பாக செயற்பட்டவர்கள் தமது தவறுகளை உணர்ந்து நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் தமது மனப்பூர்வமான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்க முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

சர்வதேச விவகாரம் பற்றி தொடர்ந்து கருத்துரைத்த அவர், அமெரிக்கர்கள், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் உள்ள அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று வருவதுடன், காஸாவிலுள்ள பலஸ்தீன சிறார்களைக் கொலை செய்யும் இஸ்ரேலின் திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இவற்றையெல்லாம் செய்து கொண்டு மனித உரிமைகளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் காட்டிக் கொள்கின்றனர் எனச் சாடினார்.

அமெரிக்க அரசு, ஜனநாயகம் பற்றியோ மனித உரிமைகள் பற்றியோ பேசுவதற்கு எவ்விதத் தகுதியும் அற்றது என்பதை தற்கால யதார்த்தம் நிரூபித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆயத்துல்லாஹ் காமெனயி அவர்கள் தொடர்ந்து குறிப்பிடும் போது, ஈரான் இஸ்லாமியக் குடியரசை நிர்மூலமாக்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வரும் எதிரிகளும் அரக்கர்களும், தமது எத்தகைய நிர்ப்பந்தங்களையும் இஸ்லாமியக் குடியரசு நிராகரித்து விடும் என்பதை உணர்ந்து கொண்டுள்ளார்கள். இத்தகைய நயவஞ்சகர்களிடம் தனது பாதுகாப்பையும் ஒப்படைக்க ஈரான் ஒரு போதும் தயாராக அளவுக்கு, அ துநன்கு விழிப்புணர்வுடன் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்

குத்ஸ் நகரில் சியோனிச அரசு

அரசியல் குழு: லெபனான்-பலஸ்தீன் அரசியல் சமூக அமைப்பின் உத்தியோகபூர்வ ஒன்றுகூடல், ஏப்ரல் ஐந்தாம் திகதி சாயிதா லெபனானில் இடம்பெற்ற போது, புனித குத்ஸ் நகரில் சியோனிச அரசு மேற்கொண்டு வரும் சட்டவிரோத அகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


லெபனானில் இயங்கும் இக்னா செஸ்திக் கிளை தெரிவிப்பதாவது, இவ்வொன்றுகூடலில் பலஸ்தீனிலும் லெபனானிலும் நடைபெறும் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும், சியோனிச அரசினால் முன்வைக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

கலந்து கொண்டோர் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். சியோனிச அரசின் வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆதரவு வழங்கி வரும் ஐக்கிய அமெரிக்காவினது நடவடிக்கைகளையும், இவ்விறுக்கமான அரசியல் சூழ்நிலையிலும் மௌனம் சாதிக்கும் அரபுலகத்தின் கையாலாகாத்தனத்தையும் அவ்வறிக்கை கடுமையாக விமர்சித்திருந்தது.

பலஸ்தீன மக்களது உரிமைகளைப் பாதுகாப்பதில் துருக்கியின் ஆதரவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவ்வறிக்கை, நடைபெற்ற அரபு உச்சிமாநாட்டில் புனித குத்ஸ் விவகாரம் தொடர்பான எடுக்கப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்த முடியாமல் போயுள்ளமை குறித்து கவலையும் வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன விடுதலை இயக்கங்கள், இஸ்ரேலின் சியோனிசக் கொடுமைகளுக்கு தலைசாய்க்காமல் தொடர்ந்தும் தமது முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவ்வொன்றுகூடலில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் தேசிய குர்ஆன் மனனப் போட்டி புதன்கிழமை ஆரம்பம்
சர்வதேச குழு: மலேசிய இஸ்லாமிய அபிவிருத்தித் திணைக்களம், மலேகா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், எதிர்வரும் 21 தொடக்கம் 25 வரை, மலேகா சர்வதேச வர்த்தக நிலையத்தில், 31ஆவது தேசிய மட்ட குர்ஆன் மனனப் போட்டியை ஒழுங்கு செய்யவுள்ளது.


திணைக்களத்திலிருந்து விடுக்கப்பட்ட அறிக்கையொன்று குறிப்பிடுவதாவது, இப்போட்டி மூன்று மட்டங்களாகப் பிரிக்கப்படும். முதல் மட்டம் (ஜுஸ்உ 1 தொடக்கம் 10), இரண்டாம் மட்டம் (ஜுஸ்உ 1 தொடக்கம் 20), மூன்றாம் மட்டம் (ஜுஸ் 1 தொடக்கம் 30) என்பவையாகும்.

ஒவ்வொரு மாகாணமும், மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய, ஏழுக்கும் 25க்கும் இடைப்பட்ட வயதுடைய, மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களாக ஆறு பேரை தமது மாகாணத்தின் சார்பாக இந்த தேசிய மட்டப் போட்டிக்கு அனுப்ப முடியும்.

தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டுவோருக்கு பணப்பரிசும், ஹஜ் உம்ரா வாய்ப்பும் வழங்கப்படுவதுடன், பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மூன்றாம் மட்டத்தில், பணப்பரிசு சுஆ. 10,000, இரண்டாம் மூன்றாம் மட்டங்களில் பணப்பரிசுகள் முறையே சுஆ. 6,000 மற்றும் சுஆ. 4,000 ஆகும்.

உம்மாஹ்வின் உறவுகளையும் சக்தியையும் வலுப்படுத்தல் எனும் கருப்பொருளிலான இப்போட்டி, ஏப்ரல் 21ம் திகதி, மலேக்கா முதலமைச்சர் டதுக் செரி முஹ்த் அலி ருஸ்தாமினால் ஆரம்பித்து வைக்கப்படும்.

லிபிய பல்கலைக்கழக மாணவர்களுக்கான குர்ஆன் மனனம்

சர்வதேச குழு:பல்கலைக்கழக மாணவர்களுக்கான குர்ஆன் மனனம் மற்றும் தஜ்வீத் என்பவற்றுக்கான பத்தொன்பதாவது வருடாந்த போட்டி, நேற்றுக் காலை லிபியாவின் தலைநகர் தராபல்ஸ்சிலுள்ள அல்பாதிஹ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.


அல்பஜ்ருல் ஜதீத் தினசரியின் தகவலின்படி, இப்போட்டி, கலை, விஞ்ஞான, சிந்தனை ரீதியான கருப்பொருள்களில், பல்கலைக்கழக மாணவர்களுக்காக வருடாந்தம் நடைபெற்று வருகின்ற முக்கிய போட்டியொன்றாகும்.

இப்போட்டியுடன் இணைந்ததாக, விசேட கண்காட்சியொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில், லிபியாவின் பல பகுதிகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், பல்வேறு துறைகளிலான தமது படைப்புகளையும் பொருட்களையும் காட்சிக்கு வைப்பர். குறிப்பாக, பலஸ்தீன் தொடர்பான காட்சிகள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியொன்றும் விசேடமாக இடம்பெறும்.

குர்ஆன் மனனம், மற்றும் தந்வீத் என்பவை தொடர்பான இப்போட்டி, லிபியாவின் பல்கலைக்கழக மாணவர்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்ற போட்டியென்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையொன்று வெடித்து

ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையொன்று வெடித்து தொன் கணக்கில் புகையை கக்கத் தொடங்கியிருப்பது இன்று முழு உலகையும் அதிரவைத்துள்ளது. 11 கிலோ மீற்றர் உயரத்துக்கு புகையும் சாம்பலும் பரவியுள்ளதால் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் விமானச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இந்த எரிமலை இதற்கு முன் கி.பி. 921 மற்றும் 1612, 1812-13 ஆகிய ஆண்டுகளில் வெடித்துள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஐஸ்லாந்தில் 35 எரிமலைகள் உள்ளன. அவற்றில் வெடித்துப் புகையைக் கக்கிக் கொண்டிருக்கும் ஈயபியலக்யுக் எரிமலையைவிட பெரிய எரிமலைகளும் இருக்கின்றன.

1783 - 85 ஆம் ஆண்டு வரை லாவாக் எனும் எரிமலை வெடித்து ஐஸ்லாந்தின் கால்வாசி மக்களை காவு கொண்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால் ஈயபியலக்யுல் எரிமலையினால் உயிர்ச்சேதமோ பொருள் சேதமோ ஏற்படாதது நிம்மதியே.

ஐஸ்லாந்து எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம் முழுமையாக மறைந்து விடுவதோடு விமானப் போக்குவரத்து சீரடைந்துவிடும். ஆனால் இதற்கு சில வேளை மாதக்கணக்கு கூட ஆகலாம் என புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

அண்மைக் காலங்களில் பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்தாலும் எரிமலை வெடிப்பினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டது கிடையாது. ஆனால் கடந்த காலங்களில் எரிமலை வெடிப்புகளினால் பல்லாயிரம் உயிர்கள் பலியாகியுள்ளதோடு பல நகரங்கள் கூட புதைந்துள்ளன.

1883 ஆகஸ்ட் 26 இல் இந்தோனேஷியாவின் சுந்தா நிலச் சந்தியில் ஜகார்டாவின் மேற்கே உள்ள கிரகடோவாவின் நடுவே ஓர் அசுர எரிமலை வெடித்துப் பொங்கி எழுந்தது, புகை மண்டலம் வானில் 50 மைல் உயரத்தில் கிளம்பிக் கருமுகில் பூத வடிவில் வெளிப்பட்டு, பகலை இருட்டாக்கியது. சாம்பல் வீச்சு 290,000 சதுர மைல் பரவி அண்மையில் இருக்கும் ஜாவா, சுமத்ரா தீவுகளையும் கரிய மையால் வர்ணம் பூசியது.

அடுத்து அடுத்து எரிமலை நான்கு முறைகள் வெடித்தன. எரிமலைக் குமுறி வெடித்த இடி முழக்கம் 2500 மைல் தாண்டி மத்திய அவுஸ்திரேலியாவில் கேட்டதாம். வெடியின் சக்தி 100,000 ஹைடிரஜன் குண்டுகளின் ஆற்றலுக்கு ஒப்பானது என்று அனுமானிக்கப்படுகிறது.

வெடிப்பின் அழுத்த அலைகள் தணிந்து அடங்குவதற்குள் அவை பூமியின் சுற்றளவை (25,000 மைல்) ஏழு முறைச் சுற்றி வந்தனவாம். 1815 ஆம் ஆண்டு தாம்பராவில் தோன்றிய எரிமலை கிரகடோவாவைவிட மிக அதிகமாக 100 கியூபிக் கிலோ மீற்றர் பாறைக் கற்களைக் கக்கியதாக அறியப்படுகிறது.

கண்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ சுமார் 1500 உயிருள்ள எரிமலைகள் பூகோளத்தில் புதைந்து கொண்டுள்ளதாக அறியப்படுகின்றன. அவற்றில் 30 சதவீதம், மேற்தளத்தில் இல்லாமல், கடலடியில் குமிழியிட்டுக் கொண்டுள்ளன. குறிப்பாக, பசுபிக் மகா கடலில் தீ வளையம் எனப்படும் சங்கிலித் தொடர்ப் பகுதியில் வருடத்திற்கு 50 எரிமலைகள் வீதம் தோன்றுகின்றதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இத்தாலியின் நேப்பில்ஸ் வளைகுடாப் பகுதியில் உள்ள வெஸ்சூவியஸ் சிகரம் உலகப் புகழ்பெற்றது. அதன் அருகே இருந்த சோம்மா எரிமலையில் கண்டெடுத்த எரிமலைக் கற்பாறை 300,000 ஆண்டு வயதுள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. கி.மு. 5960, கி. மு. 3580 ஆண்டுகளில் வெஸ்சூவியஸ் இருமுறை கக்கியது. சோம்மா வெஸ்சூவியஸ் கூட்டு எரிமலைச் சாம்பல் 25,000 ஆண்டு வயதுள்ளது.

அடுத்து கி.பி. 79 முதலாம் நூற்றாண்டில் வெஸ்சூவியஸ் சிகரத்தில் தீவிர எரிமலைக் குமுறல் கிளம்பி ஹெர்குலானியம், பாம்ப்பி என்னும் இருபெரும் நகரங்களும் புதைந்து போயின. எரிமலை கக்கிய விஷ வாயுவைச் சுவாசித்து 20,000 மக்கள் மாண்டனர். எரிமலை கொட்டிய கருஞ் சாம்பலையும், சகதியையும் அடுத்து பெய்த கடும் மழை இரு நகரங்களையும் மூடிப் புதைத்தது. சகதி வெள்ளத்தில் புதைந்தவர் மட்டும் 3360 பேர். 19 மணி நேரங்களில் சுமார் 4 கியூபிக் கிலோ மீட்டர் கருஞ்சாம்பல் நகரங்களில் கொட்டிக் குவிந்ததாம்.

எரிமலை வெடிப்பால் ஹெர்குலேனியம் பாம்பி ஆகிய நகரங்கள் புதைந்தன. புதை பொருள் ஆராய்ச்சிகளின் போது 1595 ஆம் ஆண்டு மறைந்த நகரங்களின் சில பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு பல நூறு வருடங்களின் பின்னர் தீய்ந்து போன மனிதச் சடலங்கள், நாய்களின் எழும்புக் கூடுகள், நகைகள், இத்தாலிய நாணயங்கள் என்பனவும் தோண்டி எடுக்கப்பட்டன.

அதற்கு பின்னரும் பல தடவைகள் வெஸ்சூவியஸ் சிகரத்தில் இருந்து எரிமலைகள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. 1944 ஆம் அண்டில் தான் இந்த எரிமலை கடைசியாக கொந்தளித்தது. இன்று வரை அது விழித்து எழவில்லை.

இந்த எரிமலை வெடிப்புகளுடன் ஒப்பிடுகையில் ஐஸ்லாந்து எரிமலை மிகச் சிறிய நிகழ்வு மட்டுமே

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் சர்ச்சை: பாதுகாப்புச் சபைக்கு விளக்கமளிக்க விருப்பம்

தெஹ்ரான், ஏப்ரல். 19. ஏ. எப். பி.


ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் சர்ச்சைகள் தொடர்பாக ஐ. நா. பாதுகாப்புச் சபையிலுள்ள 15 நாடுகளுக்கும் விளக்க மளிக்கவுள்ளதாக ஈரானின் வெளிநாட்ட மைச்சர் மொனாச்சர் மொற்றாகி தெரிவித்தார். ஈரானில் நடந்த யுரேனியம் செறிவூட்டல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

அமெரிக்கா வுடன் மாத்திரம் இது தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்படமாட் டாதெனக் கூறிய ஈரான் வெளிநாட்டமைச்சர் ஏனைய 14 நாடுகளுடனும் நேரடிப் பேச்சுக்கள் நடத்தப்படுமென்றார். இனி வரும் காலங்களில் இப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். இதற்கான திட்டங்கள் எம்மிடமுள்ளன.

ஈரானைத் தாக்க முயற்சிப்போர் நெருப்புடன் விளையாடப் போகின்றனர். எங்களைத் தாக்கும் தைரியம் எவருக்கும் இல்லையெனவும் ஈரான் வெளிநாட்டமைச்சர் சூளுரைத்தார். யுரேனியத்தை செறிவூட்டி ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக மேற்கு நாடுகள் சந்தேகிக்கின்றன. இதனால் செறிவூட்டப் பட்ட யுரேனியத்தை சோதனை செய்வதற்காக பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அனுப்புமாறு ஐ. நா. வலியுறுத்துகிறது.

இதை நிராகரித்த ஈரான், தங்கள் நாட்டு எல்லைக்குள் யுரேனியத்தை சோதனையிட முடியுமெனக் கூறுகிறது. இந் நிலையில் ஈரானுக்குகெதிராக நான்காவது பொருளாதாரத் தடையைத் கொண்டுவர நிரந்தர உறுப்பு நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என்பன முன்வந்து ள்ளன.

ரஷ்யா, சீனா என்பன இவ் விடயத்தில் பின்நிற்கின்றன. ஈரான் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளுக்கும் தங்கள் நிலைப்பாட்டை விளக்கவுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் ஈரானை வழிக்குக் கொண்டு வரும் விரிவான விடயங்கள் வெள்ளை மாளிகையிடம் இல்லையென நகலொன்றை கடந்த ஜனவரி மாதம் அனுப்பி வைத்ததாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இச் செய்தியை பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் நிராகரித்தார்.

ஈரானைத் தண்டிக்கும் முறைகள், வழிக்குக் கொண்டு வரும் விடயங்கள், இவற்றைச் செய்ய வேண்டிய கால ஒழுங்குகள் என்பவற்றை உள்ளடக்கியதான நகல் ஒன்றையே நாம் ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்பியதாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட் டார்.

ஈரானில் நடைபெற்ற யுரேனிய மாநாட்டில் மத்திய கிழக்கின் பாதுகாப்பு, அழிவு தரும் ஆயுதங்களை அகற்றல், இஸ்ரேலை அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இணங்கச் செய்தல் போன்ற விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.

இஸ்ரேல் மத்திய கிழக்கில் மோதலைத் தூண்டுகிறது



தெஹ்ரான், ஏப்ரல். 18 ஏ. எப். பி.

மத்திய கிழக்கில் மோதலைத் தூண்டி விடும் நாடாக இஸ்ரேலுள்ளதென ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் குற்றம் சாட்டினார். ஈரானின் இராணுவ வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அஹ்மெதி நெஜாத் இக்குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆயதுல்லா அலி கொமைனியின் நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி தெரிவித்ததாவது:-

மத்திய கிழக்கில் வெளிநாட்டுப் படைகளின் பிரசன்னம் இப் பிராந்தியத்தில் வன்முறைகளையே தோற்றுவிக்கும். இப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்.

இஸ்ரேலின் இராணுவப் பலத்தை அழிக்க ஏனைய நாடுகள் ஒன்றுபட வேண்டும். இஸ்ரேலுக்குப் பின்னாலுள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் அஹ்மெதி நெஜாத் கண்டித்து உரையாற்றினார். இஸ்ரேலின் இருப்பை ஈரான் எப்போதும் எதிர்த்தே வருகின்றது. உலக வரை படத்திலிருந்து இஸ்ரேல் அகற்றப்பட வேண்டுமென ஈரான் கூறி வருகின்றது.

இந்நிலையில் அஹ்மெதி நெஜாதின் உரை இஸ்ரேலைச் சாடுவதாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் மீள்வாக்குப்பதிவை குழப்ப முயற்சி

தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சியொன்று மீள் வாக்களிப்பின் போது குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டி ருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தல் ஆணையாளரிடம் நேற்று (19) முறைப்பாடு செய்துள்ளது.

மீள் தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு ஐ. ம. சு. முன்னணி முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரதிநிதிகள் தேர்தல் ஆணையா ளரிடம் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

ஐ. ம. சு. முன்னணி பிரதிநிதிகள் நேற்று (19) காலை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவை தேர்தல் திணைக்களத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் மைத்திரிபால சிரிசேன, ஐ. ம. சு. மு. செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த், சு. க. சிரேஷ்ட பிரதித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, சு. க. பொருளாளர் டளஸ் அலஹப்பெரும ஆகியோர் கலந்து கொண்டனர். நாவலப்பிட்டி மற்றும் கும்புறுப்பிட்டிய பகுதிகளிலுள்ள 38 வாக்களிப்பு நிலையங்களில் நடத்தப்பட வுள்ள மீள் வாக்களிப்பு குறித்து இச்சந்திப் பின் போது முக்கியமாக ஆராயப்பட்டது.

அமைதியை நிலை நாட்டுவதற்காக ஜனாதிபதி இராணுவத்தினரையும் பொலிஸாரையும் ஈடுபடுத்தியுள்ளதோடு தேவையாக உத்தரவுகளையும் வழங்கியுள்ளதாக ஐ. ம. சு. மு. பிரதிநிதிகள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர்கள் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட மாட்டார்கள் என நம்பிக்கை வெளியிட்ட ஐ. ம. சு. முன்னணி பிரதி நிதிகள், தேர்தல் சட்டங்களை ஒழுங்காக நிறைவேற்றுமாறு கண்டி மாவட்ட ஐ. ம. சு. முன்னணி வேட்பாளர் களுக்கு ஜனாதிபதி பணித்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஒரு அரசியல் கட்சி, வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வன்முறையை தூண்டிவிட திட்டமிட்டுள்ளதாக ஐ. ம. சு. பிரதிநிதிகள் ஆணையாளருக்கு அறிவித்தனர். தேர்தல் செயலக பிரதிநிதிகளுக்கு இது குறித்து அறிவூட்டி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரினர்.

38 வாக்களிப்பு நிலையங்களில் மீள் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் எடுத்த முடிவு தொடர்பில் அந்தப் பிரதேச ஐ. ம. சு. முன்னணி பிரதிநிதிகள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் ஐ. ம. சு. முன்னணி ஆணை யாளரின் முடிவை ஏற்றுக் கொள்கிறது. ஐ. ம. சு. முன்னணிக்குக் கிடைத்த பெரு வெற்றியை இந்த நடவடிக்கை மூலம் பாதுகாக்க முடிவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலந்து ஜனாதிபதியின் இறுதி நிகழ்வில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவில்லை

ரஷ்யாவில் கடந்த வாரம் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான போலந்து ஜனாதிபதி லெக் கக்சின்ஸ்கியினதும் அவரது மனைவியினதும் உடல்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ஐரோப்பாவில் பரவிவரும் ஐஸ்லாந்து எரிமலை புகை காரணமாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பல உலகத் தலைவர்கள் கக்சின்ஸ்கியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

போலந்தின் கிராகோவில் நடைபெறத் திட்டமிட்டிருந்த இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரத்து செய்துள்ளார்.

ஜெர்மனியின் ஆளுநர் அஞ்சலாமார்கெல் பிரிட்டன் இளவரசர் பிரின்ஸ் ஆகியோரும் போலந்துக்கான தமது விஜயத்தை ரத்துச் செய்துள்ளனர்.

கக்சின்ஸ்கியின் இறுதிச் சடங்குகள் வவல் சவச் சாலையில் இடம் பெற்றபோது பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

1 இலட்சத்து 80 ஆயிரம் பேர் வரையில் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். போலந்து ஜனாதிபதியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளாதமையை இட்டு தான் மனம் வருந்துவதாக ஜனாதிபதி ஒபாமா குறிப்பிட்டுள்ளார். போலந்து ஜனாதிபதி கக்சின்ஸ்கி ஒரு தேசாபிமானி. அத்துடன் அமெரிக்காவின் ஒரு சிறந்த நண்பரும் ஆவாரென ஒபாமாவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

அமெ‌ரி‌க்கா ஒரு அணுஆயுத ‌கி‌ரி‌மி‌ன‌ல் நாடு: ஈரான்.



அமெ‌ரி‌க்கா ஒரு அணுஆயுத ‌கி‌ரி‌மி‌ன‌ல் நாடு'' எ‌ன்று ஈரா‌ன் கடுமையாக ‌விம‌ர்‌‌சி‌த்து‌ள்ளது.
மாநா‌ட்டி‌ல் ஈரா‌ன் மத‌த்தலைவ‌ர் எழு‌திய அ‌றி‌க்கை ஒ‌ன்று வா‌சி‌க்க‌ப்ப‌ட்டது. அத‌ி‌‌ல், அமெ‌ரி‌க்கா ‌த‌‌ங்க‌ள் நா‌ட்டி‌ல் உ‌ள்ள அணுஆயுத‌ங்களை அ‌ழி‌க்காம‌ல் ‌பிற நாடுகளை ‌மிர‌ட்டுவது கே‌லி‌க்கூ‌ரியது எ‌ன்று ‌விம‌ர்‌‌சி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

அணு ஆயுத‌‌ங்களை ‌மி‌க‌ப்பெ‌ரிய அள‌வி‌ல் சே‌‌‌மி‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் அமெ‌ரி‌க்கா தீ‌விரவா‌த‌த்தை ஒ‌ழி‌ப்பதாகவு‌ம் உலக அமை‌தி‌க்கு பாடுபடுவதாகவு‌ம் கூ‌றி‌க் கொ‌ள்வது அத‌ன் இர‌ட்டை வேட‌த்தை கா‌ட்டுவதாக தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.இத‌னிடையே டெ‌க்ரா‌னி‌ல் நடைபெ‌ற்ற இராணுவ அ‌ணிவகு‌ப்பை அ‌திப‌ர் அமகது ‌நிஜா‌ம் பா‌ர்வை‌யி‌ட்டா‌ர். அணுஆயுத‌ங்களை சும‌ந்து செ‌ன்று இல‌க்குகளை தா‌க்கு‌ம் ஷோக‌‌ப் 3 ரா‌க்கெ‌ட்டுகளு‌ம் அ‌ணி‌வகு‌ப்‌பி‌ல் இட‌ம் பெ‌ற்றன.

ஈரா‌ன் ‌மீது போ‌ர் தொடு‌க்க ‌நினை‌ப்பவ‌ர்களு‌க்கு த‌கு‌ந்த ப‌‌திலடி கொடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌திப‌ர் அகமது ‌நிஜா‌ம் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர். அ‌ண்டை நாடான இ‌ஸ்ரேலு‌க்கு ஆதரவு அ‌ளி‌ப்பத‌ன்மூல‌ம் ம‌த்‌திய ‌கிழ‌க்கு நாடுக‌ளி‌ல் அமெ‌ரி‌க்கா ஆயுத‌ப் போ‌ட்டியை ஏ‌ற்படு‌த்த‌ி வருவதாகவு‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.ஈரா‌‌க், ஆ‌‌ப்கா‌னி‌‌ஸ்தா‌ன் போ‌ன்ற நாடுக‌ளி‌ன் உ‌‌ள்‌விவகார‌ங்க‌ளி‌ல் தலை‌யி‌ட்ட‌தி‌‌ன் பலனை அமெ‌ரி‌க்கா அனுப‌வி‌த்து வருவதாகவு‌ம் அமகது ‌நிஜா‌ம் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.
Read more...

திங்கள், 19 ஏப்ரல், 2010

கட்டாரில், புனித குர்ஆன் மனனத்திற்கான தேசிய போட்டி



கட்டாரின் அவ்காப் இஸ்லாமிய விவகார அமைச்சர் அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் அல்மர்ரி குறிப்பிடும் போது, ஹிஜ்ரி 1431ம் ஆண்டுக்கான புனித அல்குர்ஆனின் பதினேழாவது போட்டியான 'ஜாசிம் இப்னு முஹம்மத் ஆல் தானி' எனும் போட்டி ஒழுங்கமைப்புக்கான புதிய நடுவர் குழாமை உருவாக்க அமைச்சு தீர்மானித்துள்ளது என்றார்.


கட்டாரின் அர்ராயா பத்திரிகை தெரிவிப்பதாவது, இக்குழுவின் தலைவராக, கைஸ் இப்னு முபாரக் என்பவரும், பிரதித் தலைவராக நாசர் யூசுப் அஸ்ஸலீத் என்பவரும், உறுப்பினர்காளக, ஷைக் காலித் இப்னு முஹம்மத் ஆல் தானி, செய்யித் ஹம்த் அப்துல்லாஹ் அல்முரீ, செய்யித் அலீ தாலிப் அல்முஹன்னா, செய்யித் முஹம்மத் பஹீத் அல்முரீ ஆகியோரும் கடமையாற்றுவர்.

இப்போட்டிக்கான நிபந்தனைகள், போட்டியின் இடம், காலம், பங்குபற்றுவோருக்கான பிரிவுகள், தகுதிகள் பற்றிய அனைத்து விபரங்களையும் இக்குழு தீர்மானித்து, அறிவிக்கும்.

நடுவர் குழுவுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கும், நீக்குவதற்குமான அதிகாரத்தை அவ்காப் அமைச்சர் கொண்டிருப்பார். இந்நடுவர் குழு உறுப்பினர்களே, போட்டியை நடத்துவதற்கும், போட்டி முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கும், வெற்றியாளர்களுக்கான பரிசில்களைத் தீர்மானிப்பதற்கும். அதற்கான விழாக்களை ஒழுங்கு செய்வதற்குமான பொறுப்புகளைக் கொண்டிருக்கும்.

இப்போட்டி, ஏழு பிரிவுகளாக இடம்பெறவுள்ளது. முழுக் குர்ஆன் மனனம், 25 ஜுஸ்உ குர்ஆன் மனனம், 20 ஜுஸ்உ குர்ஆன் மனனம், 15 ஜுஸ்உ குர்ஆன் மனனம், 10 ஜுஸ்உ குர்ஆன் மனனம், 5 ஜுஸ்உ குர்ஆன் மனனம் மற்றுமு; ஒரு ஜுஸ்உ குர்ஆன் மனனம் என்பன அப்போட்டிப் பிரிவுகளாகும். இப்போட்டிகளில், கட்டாரைச் சேர்ந்த மாணவர்கள் மாத்திரமே பங்குபற்ற முடியும்.

564434

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

காஸ்ஸா நிலைகுலையாமல் இருப்பதற்கு காரணம் என்ன?

ரஃபா:நான்கு ஆண்டுகளாக தொடரும் இஸ்ரேலின் தடையை காஸ்ஸாவாசிகள் எவ்வாறு எதிர்த்து நிற்கின்றார்கள்? என்ற கேள்வி நம் முன்னால் எழுகிறது. அதற்கு பதில் சுரங்கங்கள் மூலமாகத்தான் என்பதாகும்.

காஸ்ஸா-எகிப்து எல்லையில் சுரங்க நிர்மாணம் ஒரு குடிசைத் தொழிலாக வளர்ந்து வருகிறது. இத்தொழில் ஏற்பட்டுள்ள போட்டிக் காரணமாக சுரங்கங்கள் தோண்டுவது அவ்வளவு லாபகரமானதாக இல்லை என்று கூறுகிறார் ஃபலஸ்தீனைச் சார்ந்த இளைஞர் ஒருவர்.

சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றம் தயாராக்கிய ஒரு அறிக்கையின்படி 73 அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே காஸ்ஸாவிற்குள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது. ஆனால் காஸ்ஸாவிலுள்ள கடைகளில் 4000க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. அதுமட்டுமல்ல சமீபத்தில் சிமெண்டின் விலை 90 சதவீதம் குறைந்துள்ளது. இஸ்ரேலால் தகர்க்கப்பட்ட 4000க்கும் மேற்பட்ட வீடுகளின் நிர்மாணம் தற்ப்பொழுது வேகமாக நடைபெற்றுவருகிறது.

இஸ்ரேலால் மேற்குக்கரையில் வழங்கப்படும் பெட்ரோல், டீசல் விலையை விட காஸ்ஸாவில் கிடைக்கும் பெட்ரோல், டீசலின் விலை மிகக்குறைவாகும். இவையெல்லாம் எகிப்திலிருந்து சுரங்கங்கள் வழியாக வருகிறது.

அரபு இளைஞர்கள் தங்கள் திறமையை காட்ட பயன்படுத்தும் ஃபோர் வீல் ட்ரைவ் வரை காஸ்ஸாவில் காணமுடிகிறது. சுரங்கங்கள் நிர்மாணிப்பதை தடுக்க இஸ்ரேல் அடிக்கடி குண்டுவீசும். அமெரிக்காவின் நிர்பந்தம் பொறுக்க முடியாத சூழல் வரும்பொழுது எகிப்திய அதிகாரிகள் கட்டுப்பாட்டை விதிப்பார்கள். தற்ப்பொழுது எல்லையில் ஸ்டீல் சுவர் கட்டுவதற்கான முயற்சியில் எகிப்து ஈடுபட்டுள்ளது. ஆனால் அரசியல் நிர்பந்தம்,மற்றும் சர்வதேச அளவிலான காஸ்ஸா மக்களுக்கான ஆதரவும் காரணமாக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்கிறது எகிப்து ஹுஸ்னி முபாரக்கின் அரசு.

இஸ்ரேலிய கொடூரத் தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் இடிபாடுகளை மாற்றுவதற்கும், மின்சாரம், நீர் ஆகியவை புனர்நிர்மாணிக்கவும் முக்கியத்துவம் அளித்திருந்தது. அதனால் ஹமாஸுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தது. அமெரிக்க தடையின் காரணமாக வங்கிகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்தாலும் ஹவாலா மூலமாக பட்டுவாடா நடைபெறுகிறது. மஹ்மூத் அப்பாஸின் கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்குகரையை விட இது பரவாயில்லை என்பது காஸ்ஸா மக்களின் கருத்து.

இதற்கிடையே ஹமாஸை பலகீனப்படுத்துவதற்கான முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணை தாக்கி ஒரு தாய்லாந்து பிரஜையான விவசாயிக் கொல்லப்பட்டதற்கான பின்னணியும் இதுதான் காரணம் என கருதப்படுகிறது.

சவூதி அரேபியாவின் ஆதரவுடன் தீவிர பிரிவான ஸலஃபி அமைப்பு ஒன்று இஸ்லாமிய கிலாஃபத் நிர்மாணிப்பது குறித்து பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால் தாடி மற்றும் ஆடையின் நீளம் பற்றித்தான் அவர்களுக்கு முக்கிய கவலை. ஸல்ஸலா என்ற பிரிவும் சில இடங்களில் செயல்பட்டு வருகிறது. நான்கு வருடங்களாக தளராமல் உறுதியாக நிற்கும் ஹமாஸை தடைகள் மூலம் தோற்கடிப்பது இயலாத காரியம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மொஸாத்-சி.ஐ.ஏ பாதுகாப்பில் வசித்துவரும் மஹ்மூத் அப்பாஸின் கோமாளித்தனமான விளையாட்டுத்தான ஹமாஸின் ஆதரவை அதிகரிக்கச் செய்கிறது.

காஸ்ஸா நிலைகுலையாமல் இருப்பதற்கு காரணம் என்ன?


ரஃபா:நான்கு ஆண்டுகளாக தொடரும் இஸ்ரேலின் தடையை காஸ்ஸாவாசிகள் எவ்வாறு எதிர்த்து நிற்கின்றார்கள்? என்ற கேள்வி நம் முன்னால் எழுகிறது. அதற்கு பதில் சுரங்கங்கள் மூலமாகத்தான் என்பதாகும்.

காஸ்ஸா-எகிப்து எல்லையில் சுரங்க நிர்மாணம் ஒரு குடிசைத் தொழிலாக வளர்ந்து வருகிறது. இத்தொழில் ஏற்பட்டுள்ள போட்டிக் காரணமாக சுரங்கங்கள் தோண்டுவது அவ்வளவு லாபகரமானதாக இல்லை என்று கூறுகிறார் ஃபலஸ்தீனைச் சார்ந்த இளைஞர் ஒருவர்.

சமீபத்தில் பிரிட்டன் பாராளுமன்றம் தயாராக்கிய ஒரு அறிக்கையின்படி 73 அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே காஸ்ஸாவிற்குள் செல்ல இஸ்ரேல் அனுமதித்துள்ளது. ஆனால் காஸ்ஸாவிலுள்ள கடைகளில் 4000க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. அதுமட்டுமல்ல சமீபத்தில் சிமெண்டின் விலை 90 சதவீதம் குறைந்துள்ளது. இஸ்ரேலால் தகர்க்கப்பட்ட 4000க்கும் மேற்பட்ட வீடுகளின் நிர்மாணம் தற்ப்பொழுது வேகமாக நடைபெற்றுவருகிறது.

இஸ்ரேலால் மேற்குக்கரையில் வழங்கப்படும் பெட்ரோல், டீசல் விலையை விட காஸ்ஸாவில் கிடைக்கும் பெட்ரோல், டீசலின் விலை மிகக்குறைவாகும். இவையெல்லாம் எகிப்திலிருந்து சுரங்கங்கள் வழியாக வருகிறது.

அரபு இளைஞர்கள் தங்கள் திறமையை காட்ட பயன்படுத்தும் ஃபோர் வீல் ட்ரைவ் வரை காஸ்ஸாவில் காணமுடிகிறது. சுரங்கங்கள் நிர்மாணிப்பதை தடுக்க இஸ்ரேல் அடிக்கடி குண்டுவீசும். அமெரிக்காவின் நிர்பந்தம் பொறுக்க முடியாத சூழல் வரும்பொழுது எகிப்திய அதிகாரிகள் கட்டுப்பாட்டை விதிப்பார்கள். தற்ப்பொழுது எல்லையில் ஸ்டீல் சுவர் கட்டுவதற்கான முயற்சியில் எகிப்து ஈடுபட்டுள்ளது. ஆனால் அரசியல் நிர்பந்தம்,மற்றும் சர்வதேச அளவிலான காஸ்ஸா மக்களுக்கான ஆதரவும் காரணமாக தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடாமலிருக்கிறது எகிப்து ஹுஸ்னி முபாரக்கின் அரசு.

இஸ்ரேலிய கொடூரத் தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் இடிபாடுகளை மாற்றுவதற்கும், மின்சாரம், நீர் ஆகியவை புனர்நிர்மாணிக்கவும் முக்கியத்துவம் அளித்திருந்தது. அதனால் ஹமாஸுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தது. அமெரிக்க தடையின் காரணமாக வங்கிகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்தாலும் ஹவாலா மூலமாக பட்டுவாடா நடைபெறுகிறது. மஹ்மூத் அப்பாஸின் கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்குகரையை விட இது பரவாயில்லை என்பது காஸ்ஸா மக்களின் கருத்து.

இதற்கிடையே ஹமாஸை பலகீனப்படுத்துவதற்கான முயற்சிகளும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் இஸ்ரேல் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணை தாக்கி ஒரு தாய்லாந்து பிரஜையான விவசாயிக் கொல்லப்பட்டதற்கான பின்னணியும் இதுதான் காரணம் என கருதப்படுகிறது.

சவூதி அரேபியாவின் ஆதரவுடன் தீவிர பிரிவான ஸலஃபி அமைப்பு ஒன்று இஸ்லாமிய கிலாஃபத் நிர்மாணிப்பது குறித்து பிரச்சாரம் செய்துவருகிறது. ஆனால் தாடி மற்றும் ஆடையின் நீளம் பற்றித்தான் அவர்களுக்கு முக்கிய கவலை. ஸல்ஸலா என்ற பிரிவும் சில இடங்களில் செயல்பட்டு வருகிறது. நான்கு வருடங்களாக தளராமல் உறுதியாக நிற்கும் ஹமாஸை தடைகள் மூலம் தோற்கடிப்பது இயலாத காரியம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மொஸாத்-சி.ஐ.ஏ பாதுகாப்பில் வசித்துவரும் மஹ்மூத் அப்பாஸின் கோமாளித்தனமான விளையாட்டுத்தான ஹமாஸின் ஆதரவை அதிகரிக்கச் செய்கிறது.

சவூதி அரேபியாவில் கனமழை: 50 பேர் மரணம்.

Sunday, April 18, 2010
ஜித்தா:சவூதி அரேபியாவில் பிஷா, அஸீர் மாகாணங்களில் கடந்த நான்கு தினங்களாக பெய்துவரும் கனத்த மழையால் ஏற்பட்ட விபத்தில் 50 பேர் மரணமடைந்தனர். 395 பேருக்கு காயம் ஏற்பட்டது. சிவில் டிஃபன்ஸ் 250 பேரை உயிரோடு மீட்டுள்ளது. வீடுகளை இழந்த 145பேருக்கு சிவில் டிஃபன்ஸ் அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். யெமன் நாட்டையொட்டிய பிரதேசத்தில்தான் மழைப்பெய்தது.

கிராமங்களையும், அரசு அலுவலகங்களையும் இணைக்கும் ஏராளமான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. சவூதி மின்சாரத்துறை ஊழியர்கள் மின்சாரத் தொடர்பை ஏற்படுத்துவதற்காக 24 மணிநேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். 4596 வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜித்தாவில் கனமழையால் ஏற்பட்ட விபத்தில் ஏராளமானோர் மரணமடைந்திருந்தனர்.
Read more...

இந்தியாவை 'ஹிந்து' நாடாக அறிவிக்க வேண்டும்- பிரவீன் தொகாடியா.

இந்தியாவின் சவால்களை எதிர் கொள்ள இந்தியாவை இந்து நாடக அறிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது தீவிரவாத விஷ்வ ஹிந்து பரிஷத். இந்தியா ஹிந்து நாடாக இருந்தால் மட்டுமே இது முடியும் என அது கூறியுள்ளது. இதுகுறித்து தீவிரவாத வி.எச்.பியின் தலைவர் தொகாடியா கூறும்பொழுது "வி.எச்.பி அமைப்பு இந்தியாவை 'ஹிந்து' நாடாக மாற்ற விரும்புகிறது. எப்படி இங்கிலாந்து சீர்திருத்தத் திருச்சபையாளர்கள் (Protestants) மட்டும் ஆட்சி செய்து அதை உலகின் முன்னணி ஜனநாயகமாக திகழ செய்துள்ளார்களோ, அது போல இந்தியாவை 'ஹிந்து'க்கள் மட்டும் ஆட்சி செய்தால் இந்தியா சந்தித்துள்ள தீவிரவாதம், சவால்கள் ஆகியவற்றை எதிர் நோக்க முடியும்." என்று கூறியுள்ளார்.

மேலும் "இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான், இந்தியாவில் பெரிய மாற்றம் உண்டாகும், அது பா.ஜ.க அல்லது காங்கிரஸ் யார் ஆட்சி செய்தாலும் சரி" என கூறிய அவர் "இவ்வாறு அறிவிக்கப்பட்டால் யாரும் சிறுபான்மை இட ஒதுக்கீடு பற்றி பேச மாட்டார்கள், 'வந்தே மாதரம்' பாட எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்." என்றார்."பண்டைய காலங்களில் இருந்து இந்தியா 'ஹிந்து' நாடு தான், அதை மீண்டும் உருவாக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலணாய்வுக் குழு விசுவ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் தீவிரவாதி பிரவீன் தொகடியாவுக்கு, திங்கள் கிழமை (19-04-2010) அன்று விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியுள்ளது. எங்களுடைய பன்னாட்டுப் பொதுச் செயலாளர் தொகாடியா சிறப்புப் புலனாய்வுக் குழு முன் ஏப்ரல் 19ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்துள்ளதாக விசுவ ஹிந்து பரிஷத் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியன்று 69 நபர்களுடன் கொல்லப்பட்ட மக்களவை முன்னாள் உறுப்பினர் இஹ்ஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி கொடுத்த புகாரின் அடிப்படையில் தொகாடியாவுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
Read more...

குளச்சல் பள்ளி வாசல் மீது தாக்குதல;

குளச்சல் பள்ளி வாசல் மீது தாக்குதல் நடத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய கோரி இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் காவல் நிலையத்தில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் உள்ள மீரானியா பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி அதன் ஜன்னல் கண்ணாடிகளை கடந்த 8ம் தேதி மர்ம நபர்கள் உடைத்தனர். குற்றவாளிகளை கைது செய்ய கோரி முஸ்லிம்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் இதை செய்திருப்பார்கள் என்று இஸ்லாமிய இயக்கங்களும் பொதுமக்களும் நம்புகிறார்கள். இந்நிலையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி குளச்சல் காவல் நிலையத்தில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது.

போராட்ட குழு கன்வீனர் நூர்முகமது தலைமையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ, தமுமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மறுமலர்சி முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட 68 பேர் குளச்சல் இன்ஸ்பெக்டர் கந்த குமாரனிடம் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் மீரானியா பள்ளிவாசல் மீது கண்ணாடியை உடைத்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். அனைத்து இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்தவர்களும் மனு கொடுக்க காவல் நிலையத்திற்கு திரளாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Read more...

கஷ்மீரில்

கஷ்மீரில் இந்திய பயங்கரவாத ராணுவத்தால் சுட்டு கொள்ளப்பட்ட 70 வயது முதியவர்.
ஸ்ரீநகர்: கஷ்மீரில் ஆள்மாறி 70 வயது முதியவரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
ராணுவத்தால் கொல்லப்பட்ட ஹபீபுல்லாஹ் கானுக்கு தீவிரவாதத் தொடர்பு உள்ளது என்றும், அவரிடம் ஏ.கே.47 துப்பாக்கியும், ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றியதாகவும் ராணுவம் கூறியிருந்தது. ஆனால் விரிவான விசாரணையில் கொல்லப்பட்ட ஹபீபுல்லாஹ் கான் குப்வாரா மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு சாதாரண அப்பாவி மனிதர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்பாவி முதியவரை அநியாயமாக சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம் குற்றவாளிக் கூண்டில் சிக்கியுள்ளது
Read more...

ஸ்பெய்னில்


ஸ்பெய்னில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை
சர்வதேச குழு: ஸ்பெய்ன் பாடசாலையொன்றில் கற்கும் 16 வயதுடைய முஸ்லிம் மாணவி, தான் அணிந்து வந்த ஹிஜாபைக் களையும் படியாகத் தனக்கு விடுக்கப்பட்ட உத்தரவை நிராகரித்ததனால், வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.


ஸ்பெய்னிலுள்ள மொரோக்கோ வாசியின் புதல்வியான நவ்ஜா மல்ஹா, மட்ரிட்டிலுள்ள ஜோஸ் செலா பாடசாலையிலிருந்து, ஹிஜாப் தமது பாடசாலையின் ஆடைக் கட்டுப்பாடுகளை மீறுகின்றது என்பதைக் காரணமாகக் கொண்டு, வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஸ்பெய்னின் பாடசாலைகளில், முஸ்லிம்களது கலாசாரத்தைப் பிரதிபலிக்கின்ற தலையை மறைக்கும் ஆடைகளை அணிவது தொடர்பான சரியான திட்டமோ சட்டமோ இல்லாத நிலையில் இவ்வாறான ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

சுpல தனியார் பாடசாலைகளில், இவ்வாறான ஆடைக் கட்டுப்பாடுகளைத் திணிக்கும் நடைமுறைகள் இல்லை. எனினும், வளர்ந்த பாடசாலைகளிலேயே இவ்வாறான திணிப்புகள் இடம்பெறுவதாக அறியப்படுகின்றது.

நான் மிகவும் கவலையும் அவமானமும் அடைந்ததாக உணர்கிறேன் என மல்ஹா கூறினார். தனது சமயக் கடமை நிமித்தம் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தான் ஹிஜாப் அணியத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்பெய்னின் தேசிய நீதிமன்றத்திலிருந்து முஸ்லிம் பெண் வழக்கறிஞரொருவர், தனது ஹிஜாபை அணிய மறுத்தமைக்காக, நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வு, கடந்த நவம்பர் மாதம் ஸ்பெய்னில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிறைக்கைதிகள் நினைவுதினம்


சிறைக்கைதிகள் நினைவுதினம் ஃபலஸ்தீன் மக்கள் போராட்டம் Post under உலகம் நேரம்
காஸ்ஸா:காஸ்ஸா மற்றும் மேற்குகரையில் வாழும் ஃபலஸ்தீன் மக்கள் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி சிறைக்கைதிகள் நினைவு தினத்தையொட்டி இஸ்ரேலிய வெஞ்சிறைகளில் வாடும் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன் மக்களை விடுதலைச் செய்வதற்காக பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹூத் பாரக்கை கிண்டல் செய்யும் விதமாக அவர்களுக்கெதிரான விசாரணை நாடகத்தை நடத்திக் காட்டினர்.

ஃபலஸ்தீன் செண்ட்ரல் பீரோ ஆஃப் ஸ்டேடிஸ்டிக்ஸ் அறிக்கையின்படி 7 ஆயிரம் ஃபலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வாடுகின்றனர். இதில் 34 பெண் கைதிகளும், 270 குழந்தைகளும், 16 வயதுக்கு கீழ் உள்ள 44 பேரும் அடங்குவர்.

ஈரான் அணுசக்தி விவகாரத்தில் தூதரக நடவடிக்கைகள் மூலம் பரிகாரம் ஏற்படவேண்டும்: பிரேசில் உச்சிமாநாடு


ஈரான் அணுசக்தி விவகாரத்தில் தூதரக நடவடிக்கைகள் மூலம் பரிகாரம் ஏற்படவேண்டும்: பிரேசில் உச்சிமாநாடு

பிரேசிலியா:ஈரான் விவகாரத்தில் சமாதானத்தின் அடிப்படையிலான, பேச்சுவார்த்தை மூலம் பரிகாரம் காணவேண்டும் என இந்தியாவும், பிரேசிலும்,தென்னாப்பிரிக்காவும் வலியுறுத்தின.

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்ற இந்தியா,பிரேசில், தென்னாப்பிரிக்கா(IBSA) ஆகிய நாடுகளின் உச்சிமாநாட்டில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

சர்ச்சைக்குரிய விவகாரங்களில் ஐ.நா மற்றும் சர்வதேச அணுசக்திக்கழகத்தின் உத்தரவுகளை பேண ஈரான் தயாராக வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக்கொண்டது. ஈரானுக்கு அணுசோதனை நடத்துவதற்கு உரிமை உண்டு எனக்கூறிய இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கூற்றை அங்கீகரித்தது உச்சிமாநாடு. ஆனால் அது ஆபத்தை விளைவிக்க கூடியதாக மாறக்கூடாது எனவும் சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு செயல்படவேண்டுமெனவும் மன்மோகன்சிங் மேலும் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தைக் கண்டித்த உச்சிமாநாடு ஆப்கானிஸ்தானில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலுக்கு பரிகாரம் காண சர்வதேச நாடுகள் முன்வர கோரிகை விடுத்தது. பிப்ரவரியில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டதை பிரேசிலும், தென்னாப்ரிக்காவும் கண்டித்தன.

தீவிரவாதச் செயல்களை இல்லாமலாக்க இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இருநாடுகளும் ஆதரவு தெரிவித்தன.

புதன், 14 ஏப்ரல், 2010

புதிய அணு உலைகளை


மேலும் புதிய அணு உலைகளை அமைகிறது ஈரான்.
Monday, February 22, 2010
தெஹ்ரான், பிப்.22: யுரேனியம் செறிவூட்டுவதற்காக இரண்டு உலைகளை அமைக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. வான் வழி தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு இவை இரண்டையும் மலைக்குள்ளே அமைக்கப் போவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்றும், ஈரானை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்க உயர் அதிகாரி டேவிட் பெட்ராஸ் சமீபத்தில் எச்சரித்திருந்தார். ஈரான் தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டால் அதை அமெரிக்கா தகர்க்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஈரானின் அணுவிசை பிரிவின் தலைவர் அலி அக்பர் சலேஹ் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தமாதம் யுரேனியம் செறிவூட்டும் உலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.ஏற்கெனவே நதான்ஸில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையின் திறனை ஒத்ததாகவே புதிய ஆலைகளும் அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யுரேனியத்தை செறிவூட்டக்கூடாது என ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து 3 முறை பொருளாதார தடை விதித்த போதிலும் அதை பொருட்படுத்தாது செயல்படுத்தி வருகிறது ஈரான்.

ஐக்கிய நாடுகள் சபை தகவலின்படி நதான்ஸில் உள்ள செறிவூட்டும் மையம் 8610 சென்ட்ரிஃபியூகஸ் திறன் கொண்ட செறிவூட்டு உலையை அமைக்கிறது. இது சூப்பர்சானிக் வேகத்தில் செயல்பட்டு யுரேனியத்தை செறிவூட்டும்.ஏற்கெனவே 3,772 சென்ட்ரிபியூகஸ் திறன் கொண்ட செறிவூட்டும் இயந்திரம் மட்டுமே தற்போது சர்வதேச கண்காணிப்பின்கீழ் செயல்படுகிறது.

ஆண்டுக்கு 30 டன் யுரேனியத்தை செறிவூட்டும் திறன் கொண்டதாக ஈரான் விளங்குகிறது. தற்போது 2,065 கி.கி. எடையுள்ள குறைவான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரான் வசம் இருக்கலாம் என்று சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கணித்துள்ளது.

ஏவுகணை தாங்கிய கப்பலை அறிமுகப்படுத்தியது ஈரான்


நவீன ஏவுகணை தாங்கிய கப்பலை அறிமுகப்படுத்தியது ஈரான்.
Friday, February 19, 2010

தெஹ்ரான்:ஈரான் தனது நாட்டு பாதுகாப்பிற்காக தயாரித்த முதல் ஏவுகணை கப்பலை அறிமுகப்படுத்தியது.

ஈரான் ஆன்மீகத்தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னியின் முன்னிலையில் ஜம்ரான் என்ற பெயரிலான நவீன தொழில்நுட்பத்தில் தயாரான கப்பலை நாட்டுக்குஅர்ப்பணிக்கப்பட்டது. 30 நாட்டிக்கல் (கடல் நீட்டலளவை அலகு) மைல் வேகத்தில் செல்லும் இக்கப்பலில் நவீன ரேடாரும், விமான எதிர்ப்பு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 140 பேர் பயணம் செய்யலாம். பீரங்கிகள், ஆயுத பாதுகாப்பு சாலைகள் ஆகியன இதில் உள்ளன.

ஏவுகணைகளை ஏவவும், தடுக்கவும் இதனால் இயலும். இதன் நீளம் 94 மீட்டர் ஆகும். தடைகளுக்கு மத்தியிலும் புதியதொரு திட்டத்தை செயல்படுத்த முடிந்ததற்கு காரணம் இந்நாட்டின் பேரார்வத்தை காண்பிப்பதாக காமினி தெரிவித்தார்.

அமெரிக்கா அரபு நாடுகளின் ஆதரவிற்காக


Wednesday, February 17, 2010
ஈரானுக்கெதிராக மீண்டும் தடை ஏற்படுத்த சீனாவை இணங்கச் செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சவூதி அரேபியா மறுத்துள்ளது.

ஈரான் விவகாரத்தில் என்ன செய்யவேண்டும் என்பது சீனா அதிகாரிகளுக்கு சவூதி அரேபியா சொல்லிக் கொடுக்க வேண்டிய சூழல் இல்லை என சவூதிஅரேபியா வெளியுறவுத்துறை அமைச்சரும் இளவரசருமான ஸவூத் அல் ஃபைஸல் தெரிவித்தார்.

தோஹாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அவர். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரமுள்ள நாடு என்ற முறையில் சீனா அவர்களுடைய பொறுப்பை நிர்வகிப்பார்கள். தடை என்பது நீண்டகால பரிகாரமாகும். இதற்கு பதில் உறுதியானதும், அதிக காலம் நீளாத நடவடிக்கைகளும் தான் மேற்க்கொள்ள வேண்டும். இப்பகுதியின் பாதுகாப்பிற்கு ஈரானில் சமாதானமும், மகிழ்ச்சியும் நிலைநிற்க வேண்டும் என ஃபைஸல் தெளிவுப்படுத்தினார்.

அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஈரானுக்கெதிராக நடவடிக்கை மேற்க்கொள்ள கோரும் அமெரிக்கா அரபு நாடுகளின் ஆதரவிற்காக ஹிலாரியை சுற்றுப் பயணத்திற்கு அனுப்பியுள்ளது.

ஈரான் விவகாரத்தில் ராஜதந்திர நடவடிக்கைகள் வேண்டும் என்று கோரும் சீனா அமெரிக்காவின் ஒருதலை பட்சமான நடவடிக்கைகளை எதிர்க்கும் நாடாகும். ஈரானுக்கெதிராக மூன்று தடைகள் தற்போது உள்ளன. நான்காவது தடையை ஏற்படுத்துவதற்குதான் அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் முயற்சிச்செய்துவருகின்றன.

சர்வாதிகாரி' அமெரிக்காதான்


உலக மகா 'சர்வாதிகாரி' அமெரிக்காதான்: இரான் பதிலடி
Tuesday, February 16, 2010

தாம் இராணுவ சர்வாதிகாரியாக வருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியிருப்பதற்கு பதிலடி தந்துள்ள இரான், அமெரிக்கா தான் சர்வாதியாக இருந்து கொண்டு பிறர் மீது குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளது.

இராக்கிலும், ஆப்கானிலும் சண்டையிடுவதற்கு அமெரிக்காதான் வெளிநாட்டுக்கு நூற்றுக்கணக்கான சிப்பாய்களை அனுப்பியதே ஒழிய இரான் அவ்வாறு செய்யவில்லை என்று இரானிய அதிபர் மஃமுட் அஹ்மதிநிஜாத் கூறியுள்ளார்.

தமது நாட்டின் அணுத் திட்டத்துக்கு எதிரான புதிய தடைகளுக்கான அச்சுறுத்தல்களை நிராகரித்துப் பேசிய அவர், அத்தகைய நகர்வுகளினால் தமது நாடு பாதிக்கப்படாது என்றும் கூறினார்.

உலகம் முழுவதும் குழப்பங்களை ஏற்படுத்தி, இரு நாடுகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தி ஆயூத வியாபாரம் செய்யும் அமெரிக்க ஈரானை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து அமெரிக்கா என்ற தனி ஒரு நாடு உலக மக்களை கொன்று குவித்தது போல் உலகில் ஹிட்லர் முதற்கொண்டு எந்த சர்வாதிகாரியும் செய்யவில்லை.

ஹிரோஷிமா, நாகசாகி தொடங்கி வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், இஸ்ராயில் என்ற கள்ள குழந்தை மூலம் பாலஸ்தீன, பாகிஸ்தானுக்கு ஆயூதம் கொடுத்து இந்தியா பாகிஸ்தான் பிரச்னை, ஸ்ரீ லங்காவில் புலிகளுக்கு உதவி ராஜீவ் காந்தி கொலை, தங்களுக்கு வேண்டாத வெளிநாட்டு தலைவர்களை கொல்வதற்கு பிளக் வாட்டர் கூலிப்படை, தங்களது சி.ஐ.எ. உளவுபிரிவின் மூலம் உலகம் முழுவதும் குழப்பம் ஏற்படுத்துவது, வடக்கு கொரியா தெற்கு கொரியா பிரச்னை, கியூபாவில் பிரச்னை, உலகம் முழுவது உள்ள நாடுகளில் தனது ராணுவ தளங்களை அமைத்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது.

தனது ராணுவ தளத்தை நிறுவ இடம்தாராத நாட்டின் மீது தீவிரவாதிகள் இருக்கிறார்கள் பேரழிவு ஆயூதம் இருக்கிறது என்று போர்தொடுப்பது. இல்லை பக்கத்துக்கு நாட்டுக்கு ஆயூதம் கொடுத்து சண்டையை மூட்டிவிட்டு சமாதானம் செய்வது போல்வந்து தனது ராணுவ தளத்தை நிறுவுவது , உலகில் ஏதாவது பெரிய இயற்க்கை பேரழிவுகள் ஏற்ப்பட்டால் அதற்க்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று தனது ராணுவத்தை அனுப்புவது உதவி பணிகள் முடிந்தது அங்கு உள்ளநாட்டு பாதுகாப்பு சரியில்லை என்று காரணம் சொல்லி தனது ராணுவத்தை அங்கே நிறுத்துவது.இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

தன்னை கண்டு இந்த உலகம் பயப்பட வேண்டும் தான் தான் இந்த உலகின் நம்பர் ஒன் வல்லரசாக இருக்கவேண்டும் என்று அமெரிக்கா உலகில் ஏற்படுத்திய அழிவுகள் தான் எத்தனை? எத்தனை? கொன்ற உயிர்கள் தான் எத்தனை? எத்தனை? ஹிரோஷிமா, நாகஷாகியில் போட்ட அணுகுண்டில் மட்டும் ஒரே நேரத்தில் 2 லட்சம் மக்கள் கொல்லபட்டர்கள். அதன் பாதிப்புகள் இன்றுவரை பிறக்கும் குழந்தைகள் ஊனமாக மற்றும் புற்றுநோய் இப்படியாக தொடர்கிறது. அடுத்து வியட்நாம் 35 வருட போரில் அமெரிக்கா பயன்படுத்திய பேரழிவு ஆயூதங்கள் மூலம் அந்த நாடு உருத்தெரியாமல் போகியது. அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் இல் விதவிதமான குண்டுகளை பயன்படுத்தி லட்ச கணக்கான மக்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்தது. ஈராக் இல் பொருளாதார தடை ஏற்படுத்தி அத்தியாவாசிய மருந்து பொருட்கள் கிடைக்காமல் 1 .5 லட்சம் குழந்தைகள் செத்துமடிந்தது.

முன்பு ஈரானில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆயிர கணக்கான மக்களை கொன்றது இம்மாம் கொமைனி ஒரு இஸ்லாமிய புரட்சியை ஏற்படுத்தி இவர்களை விரட்டியது இப்ப திரும்ப இரானின் வளர்ச்சி பிடிக்காமல் திரும்பவும் இரானை அழிக்க முற்படுவது. உலகில் நடக்கும் அத்தனை தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் இது போல் ஆக்கிரமிப்புகளும், அந்நிய நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க நடத்தும் போர்களும் தான் காரணம். அமெரிக்கா தனது அயல்நாட்டு கொள்கையில் மாற்றம் கொண்டுவருமா? தனது தீவிரவாத போக்கை மாற்றி உலகில் அமைதியை ஏற்படுத்துமா? உலகம் எதிர்பார்கிறது. என்று தனியுமோ இவர்கள் இரத்ததாகம். என்று உலகம் அமைதி பெறுமோ.

அமெரிக்காவுக்கு எந்த அருகதையும்


மனித வுரிமை மீறல்களை பற்றி பேச அமெரிக்காவுக்கு எந்த அருகதையும் இல்லை: ஈரான்
Monday, February 15, 2010
இரானின் மனித உரிமைகளின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளின் மீளாய்வின் போது வெளியாகியுள்ள விமர்சனங்களை இரான் நிராகரித்துள்ளது. ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின் போது கருத்து தெரிவித்த பிரான்ஸ் தூதுவர், இரானில் கடந்த வருடம் நடைபெற்ற தேர்தல்களின் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள இரத்தக் கறைபடிந்த ஒடுக்குமுறைகளுக்கு இரான் அதிகாரிகளே பொறுப்பு எனக்கூறினார். இந்த நிலைமைகள் குறித்து இரான் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்த முன்வரவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த மனித உரிமைகள் பேரவைக்கான இரானிய தூதுவர், சர்வதேச உடன்பாடுகளுடன் இரான் இசைவான போக்கையே கொண்டுள்ளதாகவும், மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் நேர்மையான அணுகு முறைகளையே இதுநாள் வரை கைக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார். உலகம் முழுவது மனித வுரிமை மீறல்களை நடத்திவரும் இவர்கள் மனித வுரிமை பற்றி பேச எந்த அருகதையும் இல்லாதவர்கள் என்றும் கூறினார்.

பயப்படும் அமெரிக்கா


ஈரானின் அணு ஆயூத வளர்ச்சியை கண்டு பயப்படும் அமெரிக்கா..
இரான் ஒரு இராணுவ சர்வாதிகார நாடாக மாறிவருகிறது எனத் தான் நம்புவதாக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் அம்மையார் கூறியுள்ளார். அரசாங்க அதிகாரங்களை இரானின் புரட்சிப் படை அத்துமீறி கைப்பற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அப்புரட்சிப் படையை இலக்குவைத்து இரான் மீது சர்வதேச தண்டனைத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிளிண்டன் அம்மையார் தெரிவித்துள்ளார்.

சவுதிஅரேபியா வந்துள்ள அவர் மன்னர் அப்துல்லாவை சந்திக்கவிருக்கிறார். இரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் அந்நாட்டின் மீது புதிய தடைகளை விதிக்க சவுதியின் ஆதரவை கிளிண்டன் நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரான் மீது கடுமையான தடைகளை விதிப்பதற்கு சீனாவின் சம்மதத்தை பெற சவுதிஅரேபிபியாவால் முக்கியப் பங்காற்ற முடியும் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்புணர்த்தியுள்ளனர்