திங்கள், 19 ஏப்ரல், 2010

கட்டாரில், புனித குர்ஆன் மனனத்திற்கான தேசிய போட்டி



கட்டாரின் அவ்காப் இஸ்லாமிய விவகார அமைச்சர் அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் அல்மர்ரி குறிப்பிடும் போது, ஹிஜ்ரி 1431ம் ஆண்டுக்கான புனித அல்குர்ஆனின் பதினேழாவது போட்டியான 'ஜாசிம் இப்னு முஹம்மத் ஆல் தானி' எனும் போட்டி ஒழுங்கமைப்புக்கான புதிய நடுவர் குழாமை உருவாக்க அமைச்சு தீர்மானித்துள்ளது என்றார்.


கட்டாரின் அர்ராயா பத்திரிகை தெரிவிப்பதாவது, இக்குழுவின் தலைவராக, கைஸ் இப்னு முபாரக் என்பவரும், பிரதித் தலைவராக நாசர் யூசுப் அஸ்ஸலீத் என்பவரும், உறுப்பினர்காளக, ஷைக் காலித் இப்னு முஹம்மத் ஆல் தானி, செய்யித் ஹம்த் அப்துல்லாஹ் அல்முரீ, செய்யித் அலீ தாலிப் அல்முஹன்னா, செய்யித் முஹம்மத் பஹீத் அல்முரீ ஆகியோரும் கடமையாற்றுவர்.

இப்போட்டிக்கான நிபந்தனைகள், போட்டியின் இடம், காலம், பங்குபற்றுவோருக்கான பிரிவுகள், தகுதிகள் பற்றிய அனைத்து விபரங்களையும் இக்குழு தீர்மானித்து, அறிவிக்கும்.

நடுவர் குழுவுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கும், நீக்குவதற்குமான அதிகாரத்தை அவ்காப் அமைச்சர் கொண்டிருப்பார். இந்நடுவர் குழு உறுப்பினர்களே, போட்டியை நடத்துவதற்கும், போட்டி முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கும், வெற்றியாளர்களுக்கான பரிசில்களைத் தீர்மானிப்பதற்கும். அதற்கான விழாக்களை ஒழுங்கு செய்வதற்குமான பொறுப்புகளைக் கொண்டிருக்கும்.

இப்போட்டி, ஏழு பிரிவுகளாக இடம்பெறவுள்ளது. முழுக் குர்ஆன் மனனம், 25 ஜுஸ்உ குர்ஆன் மனனம், 20 ஜுஸ்உ குர்ஆன் மனனம், 15 ஜுஸ்உ குர்ஆன் மனனம், 10 ஜுஸ்உ குர்ஆன் மனனம், 5 ஜுஸ்உ குர்ஆன் மனனம் மற்றுமு; ஒரு ஜுஸ்உ குர்ஆன் மனனம் என்பன அப்போட்டிப் பிரிவுகளாகும். இப்போட்டிகளில், கட்டாரைச் சேர்ந்த மாணவர்கள் மாத்திரமே பங்குபற்ற முடியும்.

564434