திங்கள், 29 நவம்பர், 2010

ஈரான் அணுசக்தி விஞ்ஞானி குண்டுவெடிப்பில் படுகொலை

டெஹ்ரான்,நவ.30:ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த குண்டுவெடிப்பில் ஈரான் அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்.

டெஹ்ரானில் ஷாஹித் பெஹெஸ்தி பல்கலைக்கழகத்தில் மாஜித் ஷஹரியார்தான் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அணுசக்தி விஞ்ஞானியாவார்.

காஸ்ஸா மீது தாக்குதல் நடத்துவதை முன்னரே அப்பாஸிற்கு தெரிவித்திருந்தது இஸ்ரேல்

விக்கிலீக்ஸ்:
டெல்அவீவ்,நவ.30:இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல் குறித்து முன்னரே ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட ஃபத்ஹ் தலைவர்களுக்கும், எகிப்திற்கும் தகவலை இஸ்ரேல் தெரிவித்திருந்தது என விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய தூதரக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் யஹூத் பாரக் அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிக் குழுவிடம் தெரிவித்த விபரங்கள்தான் இதில் அடங்கியுள்ளன.

ஆபரேசன் காஸ்ட் லீட் என்றழைக்கப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலைக் குறித்து எகிப்து மற்றும் ஃபத்ஹ் தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டதாகவும், ஹமாஸை தோற்கடித்தால் காஸ்ஸாவின் கட்டுப்பாட்டை ஏற்பதற்கு விருப்பமுண்டா? என விசாரித்ததாகவும் பாரக் கூறுகிறார். ஆனால், இருவரும் வாக்குறுதியை மீறியதாக 2009 ஜூன் மாதம் இரண்டாம் தேதி நடத்தப்பட்ட உரையாடலில் கூறப்பட்டுள்ளது. இதனைக் குறித்து இஸ்ரேல் பதிலளிக்கவில்லை

உலகத் தலைவர்களுக்கு அமெரிக்கா சூட்டிய பெயர்கள்

நவ,30:* ஐரோப்பிய தலைவர்களில் வலிமையற்றவர், முட்டாள், திறமையற்றவர் என, இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை ரோமில் உள்ள அமெரிக்க தூதர் குறிப்பிடுகிறார்.

* லிபியா தலைநகர் டிரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரகம், லிபியா அதிபர் கடாபி, தனது உக்ரேனிய நாட்டு நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் திரிவதாகவும், மிக உயரமான கட்டடங்களில் தங்குவதற்கு அவர் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

* ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம், ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினை 'ஆல்பா டாக்' என்று குறிப்பிடுகிறது. மேலும், இத்தாலி அதிபருக்கும் அவருக்கும் இடையில் உள்ள நெருக்கத்தைப் பற்றியும் விமர்சிக்கிறது.

* வடகொரிய அதிபர் கிம் ஜாங் இல், 'வயதான பேர்வழி' என்றும், ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத், 'ஹிட்லர்' என்றும் விமர்சிக்கப்படுகின்றனர்.

* தென்னாப்ரிக்காவின் வெளியுறவு அமைச்சர், ஜிம்பாப்வே அதிபருடன் ஒப்பிடப்பட்டு 'பித்துப்பிடித்த வயதானவர்' என்று கூறப்படுகிறார்.

*ஆப்கான் அதிபர் கோமாளி என்றழைக்கப்படுகிறார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள்

வாஷிங்டன்/லண்டன்,நவ.29:அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், தூதரக நடவடிக்கைகள் உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ் இணையதளம்.