புதன், 14 ஏப்ரல், 2010

புதிய அணு உலைகளை


மேலும் புதிய அணு உலைகளை அமைகிறது ஈரான்.
Monday, February 22, 2010
தெஹ்ரான், பிப்.22: யுரேனியம் செறிவூட்டுவதற்காக இரண்டு உலைகளை அமைக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. வான் வழி தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு இவை இரண்டையும் மலைக்குள்ளே அமைக்கப் போவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்றும், ஈரானை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்க உயர் அதிகாரி டேவிட் பெட்ராஸ் சமீபத்தில் எச்சரித்திருந்தார். ஈரான் தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டால் அதை அமெரிக்கா தகர்க்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஈரானின் அணுவிசை பிரிவின் தலைவர் அலி அக்பர் சலேஹ் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தமாதம் யுரேனியம் செறிவூட்டும் உலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.ஏற்கெனவே நதான்ஸில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையின் திறனை ஒத்ததாகவே புதிய ஆலைகளும் அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யுரேனியத்தை செறிவூட்டக்கூடாது என ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து 3 முறை பொருளாதார தடை விதித்த போதிலும் அதை பொருட்படுத்தாது செயல்படுத்தி வருகிறது ஈரான்.

ஐக்கிய நாடுகள் சபை தகவலின்படி நதான்ஸில் உள்ள செறிவூட்டும் மையம் 8610 சென்ட்ரிஃபியூகஸ் திறன் கொண்ட செறிவூட்டு உலையை அமைக்கிறது. இது சூப்பர்சானிக் வேகத்தில் செயல்பட்டு யுரேனியத்தை செறிவூட்டும்.ஏற்கெனவே 3,772 சென்ட்ரிபியூகஸ் திறன் கொண்ட செறிவூட்டும் இயந்திரம் மட்டுமே தற்போது சர்வதேச கண்காணிப்பின்கீழ் செயல்படுகிறது.

ஆண்டுக்கு 30 டன் யுரேனியத்தை செறிவூட்டும் திறன் கொண்டதாக ஈரான் விளங்குகிறது. தற்போது 2,065 கி.கி. எடையுள்ள குறைவான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரான் வசம் இருக்கலாம் என்று சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கணித்துள்ளது.

ஏவுகணை தாங்கிய கப்பலை அறிமுகப்படுத்தியது ஈரான்


நவீன ஏவுகணை தாங்கிய கப்பலை அறிமுகப்படுத்தியது ஈரான்.
Friday, February 19, 2010

தெஹ்ரான்:ஈரான் தனது நாட்டு பாதுகாப்பிற்காக தயாரித்த முதல் ஏவுகணை கப்பலை அறிமுகப்படுத்தியது.

ஈரான் ஆன்மீகத்தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னியின் முன்னிலையில் ஜம்ரான் என்ற பெயரிலான நவீன தொழில்நுட்பத்தில் தயாரான கப்பலை நாட்டுக்குஅர்ப்பணிக்கப்பட்டது. 30 நாட்டிக்கல் (கடல் நீட்டலளவை அலகு) மைல் வேகத்தில் செல்லும் இக்கப்பலில் நவீன ரேடாரும், விமான எதிர்ப்பு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 140 பேர் பயணம் செய்யலாம். பீரங்கிகள், ஆயுத பாதுகாப்பு சாலைகள் ஆகியன இதில் உள்ளன.

ஏவுகணைகளை ஏவவும், தடுக்கவும் இதனால் இயலும். இதன் நீளம் 94 மீட்டர் ஆகும். தடைகளுக்கு மத்தியிலும் புதியதொரு திட்டத்தை செயல்படுத்த முடிந்ததற்கு காரணம் இந்நாட்டின் பேரார்வத்தை காண்பிப்பதாக காமினி தெரிவித்தார்.

அமெரிக்கா அரபு நாடுகளின் ஆதரவிற்காக


Wednesday, February 17, 2010
ஈரானுக்கெதிராக மீண்டும் தடை ஏற்படுத்த சீனாவை இணங்கச் செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சவூதி அரேபியா மறுத்துள்ளது.

ஈரான் விவகாரத்தில் என்ன செய்யவேண்டும் என்பது சீனா அதிகாரிகளுக்கு சவூதி அரேபியா சொல்லிக் கொடுக்க வேண்டிய சூழல் இல்லை என சவூதிஅரேபியா வெளியுறவுத்துறை அமைச்சரும் இளவரசருமான ஸவூத் அல் ஃபைஸல் தெரிவித்தார்.

தோஹாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அவர். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரமுள்ள நாடு என்ற முறையில் சீனா அவர்களுடைய பொறுப்பை நிர்வகிப்பார்கள். தடை என்பது நீண்டகால பரிகாரமாகும். இதற்கு பதில் உறுதியானதும், அதிக காலம் நீளாத நடவடிக்கைகளும் தான் மேற்க்கொள்ள வேண்டும். இப்பகுதியின் பாதுகாப்பிற்கு ஈரானில் சமாதானமும், மகிழ்ச்சியும் நிலைநிற்க வேண்டும் என ஃபைஸல் தெளிவுப்படுத்தினார்.

அணுசக்தி திட்டத்தின் பெயரால் ஈரானுக்கெதிராக நடவடிக்கை மேற்க்கொள்ள கோரும் அமெரிக்கா அரபு நாடுகளின் ஆதரவிற்காக ஹிலாரியை சுற்றுப் பயணத்திற்கு அனுப்பியுள்ளது.

ஈரான் விவகாரத்தில் ராஜதந்திர நடவடிக்கைகள் வேண்டும் என்று கோரும் சீனா அமெரிக்காவின் ஒருதலை பட்சமான நடவடிக்கைகளை எதிர்க்கும் நாடாகும். ஈரானுக்கெதிராக மூன்று தடைகள் தற்போது உள்ளன. நான்காவது தடையை ஏற்படுத்துவதற்குதான் அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் முயற்சிச்செய்துவருகின்றன.

சர்வாதிகாரி' அமெரிக்காதான்


உலக மகா 'சர்வாதிகாரி' அமெரிக்காதான்: இரான் பதிலடி
Tuesday, February 16, 2010

தாம் இராணுவ சர்வாதிகாரியாக வருவதாக அமெரிக்க குற்றஞ்சாட்டியிருப்பதற்கு பதிலடி தந்துள்ள இரான், அமெரிக்கா தான் சர்வாதியாக இருந்து கொண்டு பிறர் மீது குற்றஞ்சாட்டுவதாக கூறியுள்ளது.

இராக்கிலும், ஆப்கானிலும் சண்டையிடுவதற்கு அமெரிக்காதான் வெளிநாட்டுக்கு நூற்றுக்கணக்கான சிப்பாய்களை அனுப்பியதே ஒழிய இரான் அவ்வாறு செய்யவில்லை என்று இரானிய அதிபர் மஃமுட் அஹ்மதிநிஜாத் கூறியுள்ளார்.

தமது நாட்டின் அணுத் திட்டத்துக்கு எதிரான புதிய தடைகளுக்கான அச்சுறுத்தல்களை நிராகரித்துப் பேசிய அவர், அத்தகைய நகர்வுகளினால் தமது நாடு பாதிக்கப்படாது என்றும் கூறினார்.

உலகம் முழுவதும் குழப்பங்களை ஏற்படுத்தி, இரு நாடுகளுக்கிடையே சண்டையை ஏற்படுத்தி ஆயூத வியாபாரம் செய்யும் அமெரிக்க ஈரானை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து அமெரிக்கா என்ற தனி ஒரு நாடு உலக மக்களை கொன்று குவித்தது போல் உலகில் ஹிட்லர் முதற்கொண்டு எந்த சர்வாதிகாரியும் செய்யவில்லை.

ஹிரோஷிமா, நாகசாகி தொடங்கி வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஈராக், இஸ்ராயில் என்ற கள்ள குழந்தை மூலம் பாலஸ்தீன, பாகிஸ்தானுக்கு ஆயூதம் கொடுத்து இந்தியா பாகிஸ்தான் பிரச்னை, ஸ்ரீ லங்காவில் புலிகளுக்கு உதவி ராஜீவ் காந்தி கொலை, தங்களுக்கு வேண்டாத வெளிநாட்டு தலைவர்களை கொல்வதற்கு பிளக் வாட்டர் கூலிப்படை, தங்களது சி.ஐ.எ. உளவுபிரிவின் மூலம் உலகம் முழுவதும் குழப்பம் ஏற்படுத்துவது, வடக்கு கொரியா தெற்கு கொரியா பிரச்னை, கியூபாவில் பிரச்னை, உலகம் முழுவது உள்ள நாடுகளில் தனது ராணுவ தளங்களை அமைத்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது.

தனது ராணுவ தளத்தை நிறுவ இடம்தாராத நாட்டின் மீது தீவிரவாதிகள் இருக்கிறார்கள் பேரழிவு ஆயூதம் இருக்கிறது என்று போர்தொடுப்பது. இல்லை பக்கத்துக்கு நாட்டுக்கு ஆயூதம் கொடுத்து சண்டையை மூட்டிவிட்டு சமாதானம் செய்வது போல்வந்து தனது ராணுவ தளத்தை நிறுவுவது , உலகில் ஏதாவது பெரிய இயற்க்கை பேரழிவுகள் ஏற்ப்பட்டால் அதற்க்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று தனது ராணுவத்தை அனுப்புவது உதவி பணிகள் முடிந்தது அங்கு உள்ளநாட்டு பாதுகாப்பு சரியில்லை என்று காரணம் சொல்லி தனது ராணுவத்தை அங்கே நிறுத்துவது.இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

தன்னை கண்டு இந்த உலகம் பயப்பட வேண்டும் தான் தான் இந்த உலகின் நம்பர் ஒன் வல்லரசாக இருக்கவேண்டும் என்று அமெரிக்கா உலகில் ஏற்படுத்திய அழிவுகள் தான் எத்தனை? எத்தனை? கொன்ற உயிர்கள் தான் எத்தனை? எத்தனை? ஹிரோஷிமா, நாகஷாகியில் போட்ட அணுகுண்டில் மட்டும் ஒரே நேரத்தில் 2 லட்சம் மக்கள் கொல்லபட்டர்கள். அதன் பாதிப்புகள் இன்றுவரை பிறக்கும் குழந்தைகள் ஊனமாக மற்றும் புற்றுநோய் இப்படியாக தொடர்கிறது. அடுத்து வியட்நாம் 35 வருட போரில் அமெரிக்கா பயன்படுத்திய பேரழிவு ஆயூதங்கள் மூலம் அந்த நாடு உருத்தெரியாமல் போகியது. அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் இல் விதவிதமான குண்டுகளை பயன்படுத்தி லட்ச கணக்கான மக்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்தது. ஈராக் இல் பொருளாதார தடை ஏற்படுத்தி அத்தியாவாசிய மருந்து பொருட்கள் கிடைக்காமல் 1 .5 லட்சம் குழந்தைகள் செத்துமடிந்தது.

முன்பு ஈரானில் குழப்பத்தை ஏற்படுத்தி ஆயிர கணக்கான மக்களை கொன்றது இம்மாம் கொமைனி ஒரு இஸ்லாமிய புரட்சியை ஏற்படுத்தி இவர்களை விரட்டியது இப்ப திரும்ப இரானின் வளர்ச்சி பிடிக்காமல் திரும்பவும் இரானை அழிக்க முற்படுவது. உலகில் நடக்கும் அத்தனை தீவிரவாத நடவடிக்கைகளுக்கும் இது போல் ஆக்கிரமிப்புகளும், அந்நிய நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க நடத்தும் போர்களும் தான் காரணம். அமெரிக்கா தனது அயல்நாட்டு கொள்கையில் மாற்றம் கொண்டுவருமா? தனது தீவிரவாத போக்கை மாற்றி உலகில் அமைதியை ஏற்படுத்துமா? உலகம் எதிர்பார்கிறது. என்று தனியுமோ இவர்கள் இரத்ததாகம். என்று உலகம் அமைதி பெறுமோ.

அமெரிக்காவுக்கு எந்த அருகதையும்


மனித வுரிமை மீறல்களை பற்றி பேச அமெரிக்காவுக்கு எந்த அருகதையும் இல்லை: ஈரான்
Monday, February 15, 2010
இரானின் மனித உரிமைகளின் நிலை குறித்த ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளின் மீளாய்வின் போது வெளியாகியுள்ள விமர்சனங்களை இரான் நிராகரித்துள்ளது. ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்ற விவாதம் ஒன்றின் போது கருத்து தெரிவித்த பிரான்ஸ் தூதுவர், இரானில் கடந்த வருடம் நடைபெற்ற தேர்தல்களின் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள இரத்தக் கறைபடிந்த ஒடுக்குமுறைகளுக்கு இரான் அதிகாரிகளே பொறுப்பு எனக்கூறினார். இந்த நிலைமைகள் குறித்து இரான் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்த முன்வரவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த மனித உரிமைகள் பேரவைக்கான இரானிய தூதுவர், சர்வதேச உடன்பாடுகளுடன் இரான் இசைவான போக்கையே கொண்டுள்ளதாகவும், மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் நேர்மையான அணுகு முறைகளையே இதுநாள் வரை கைக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டினார். உலகம் முழுவது மனித வுரிமை மீறல்களை நடத்திவரும் இவர்கள் மனித வுரிமை பற்றி பேச எந்த அருகதையும் இல்லாதவர்கள் என்றும் கூறினார்.

பயப்படும் அமெரிக்கா


ஈரானின் அணு ஆயூத வளர்ச்சியை கண்டு பயப்படும் அமெரிக்கா..
இரான் ஒரு இராணுவ சர்வாதிகார நாடாக மாறிவருகிறது எனத் தான் நம்புவதாக அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் அம்மையார் கூறியுள்ளார். அரசாங்க அதிகாரங்களை இரானின் புரட்சிப் படை அத்துமீறி கைப்பற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அப்புரட்சிப் படையை இலக்குவைத்து இரான் மீது சர்வதேச தண்டனைத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிளிண்டன் அம்மையார் தெரிவித்துள்ளார்.

சவுதிஅரேபியா வந்துள்ள அவர் மன்னர் அப்துல்லாவை சந்திக்கவிருக்கிறார். இரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பில் அந்நாட்டின் மீது புதிய தடைகளை விதிக்க சவுதியின் ஆதரவை கிளிண்டன் நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரான் மீது கடுமையான தடைகளை விதிப்பதற்கு சீனாவின் சம்மதத்தை பெற சவுதிஅரேபிபியாவால் முக்கியப் பங்காற்ற முடியும் என அமெரிக்க அதிகாரிகள் குறிப்புணர்த்தியுள்ளனர்

இஸ்ரேல்லுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை.


இஸ்ரேல்லுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை.
FRIDAY, FEBRUARY 12, 2010

டெஹ்ரான்: முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தயாரித்து விட்டோம். இனி நாங்களும் அணு ஆயுத நாடுதான். இஸ்ரேல் எங்களிடம் வாலாட்ட முயன்றால் அதை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவோம் என்று ஈரான் அதிபர் மகமூத் அகமதநிஜாத் அறிவித்துள்ளார். உயர் ரக செறிவூட்டப்பட்ட (highly enriched uranium) யுரேனியத்தை 2 நாட்களிலேயே தயாரித்துள்ளதாகவும் அகமதிநிஜாத் அறிவித்துள்ளார்.

ஈரான் இப்போது ஒரு அணு ஆயுத நாடாகும். 20 சதவீத எரிபொருளில், முதல் தொகுதி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாம் தயாரித்து விட்டோம். அதை தற்போது விஞ்ஞானிகளிடம் கொடுத்துள்ளோம். 2 நாட்களில் இதைச் செய்துள்ளோம் என்றார் அகமதிநிஜாத்.

தன்னிடம் உள்ள யுரேனியத்தை செறிவூட்டும் பணியை தொடங்கியிருப்பதாக செவ்வாய்க்கிழமைதான் அறிவித்தது ஈரான். இந்த நிலையில் முதல் தொகுதி செறிவூட்டும் பணியை 2 நாட்களில் அது முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணு உலைகளில் எரிபொருளாக பயன்படுத்துவார்கள். அதேசமயம், இதை வைத்து அணுகுண்டுகளையும் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யுரேனியம் செறிவூட்டும் பணியை நிறுத்துமாறும், அதைத் தொடரக் கூடாது என்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எச்சரித்துள்ளன. ஆனால் அதை ஈரான் நிராகரித்து விட்டது. தடை விதிப்போம் என்று ஐ.நா. விடுத்த மிரட்டலையும் அது புறக்கணித்து விட்டது.

எங்களிடம் உள்ள அனைத்து யுரேனியத்தையும் செறிவூட்டும் பணியை தொடருவோம் என்றும் ஈரான் கூறி விட்டது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் தயாரிக்கப்பட்ட செய்தியை நாட்டு மக்களுக்கு அறிவித்த கையோடு சிரிய அதிபர் பாஷர் அல் அஸாத்தைத் தொடர்பு கொண்டு பேசினார் அகமதிநிஜாத்.

அவரிடம் பேசுகையில், ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்கள், காஸா மக்களிடமும், லெபனானின் ஹிஸ்புல்லாவிடமும் பட்ட தோல்விக்குப் பழி வாங்க ஈரான் மீது ராணுவ நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அது ஒரு முட்டாள்தனமான நடவடிக்கையாகவே அமையும். அதுபோல ஒரு தாக்குதல் நடந்தால், அதை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். நீங்களும் எதிர்க்க வேண்டும்.

அவர்கள் வைத்துள்ள இஸ்ரேல் என்ற பெயரிலான நாடே இல்லாத அளவுக்கு, அடையாளம் தெரியாத அளவுக்கு அதை அழித்து உருக்குலைத்து விடுவோம்.அத்தோடு ஜியோனிஸ்டுகளின் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு கட்டி விடுவோம்.

சிரியா, லெபனானன், பாலஸ்தீனம் ஆகியவற்றின் பக்கம் எப்போதும் ஈரான் துணை நிற்கும். விரைவில் ஜியோனிஸ்டுகள் அழிவது உறுதி என்றார் அகமதிநிஜாத்.இஸ்ரேல் என்ற நாட்டை ஈரான் இதுவரை அங்கீகரிக்கவில்லை. அந்த நாட்டை ஜியோனிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்கள் என்றுதான் ஈரான் அழைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இரான் மீது புதிய தடைகளை

இரான் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்காவும் பிரான்சும் கோரிக்கை.
MONDAY, FEBRUARY 8, 2010


இரான் தனது அணுசக்தி திட்டத்தை துரிதப்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு எதிராக புதிய அனைத்துலக ஏற்றுமதி தடைகளை கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று அமெரிக்காவும் பிரான்சும் தெரிவித்துள்ளன.

மேற்குலக நாடுகளின் இந்தக் கருத்தை இரான் நிராகரித்துள்ளது. இந்தப் பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்க்க அனைத்துலக நாடுகள் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும் என்று பாரிஸ் நகரில் கருத்து வெளியிட்ட அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

இரானின் நடவடிக்கைகள் மிரட்டும் வகையில் உள்ளது என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். யுரேனியச் செறிவூட்டலை மேலும் மேம்படுத்த தாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்காக அடுத்த ஆண்டு மேலும் பல ஆலைகளை நிறுவ தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் இரான் அறிவித்துள்ளது.

ஈரான் மீது ஏற்றுமதி தடைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்: அமெரிக்கா.
SUNDAY, FEBRUARY 7, 2010

இரானிய அரசு யூரேனியம் செறிவூட்டலை மிக உயர்ந்த தரத்திற்கு மேற்கொள்ளவிருப்பதாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவித்தல் குறித்து மேற்கத்தைய நாடுகள் மிகவும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

இதற்கு அடுத்த கட்டம் இரான் அணு ஆயுதம் தயாரிப்பது தான் என்று மேற்குலக அரசுகள் கருதுகின்றன. இரானின் நடவடிக்கையை பிரிட்டனும் ஜெர்மனியும் கண்டனம் செய்துள்ளன.

இரான் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் அதன் மீது ஏற்றுமதி தடைகளை நடைமுறைப்படுத்த அனைத்துலக நாடுகள் இனி முயல வேண்டும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க உதவியுடன் நடத்தப்படும் பாரசீக மொழி வானொலியுடன் தொடர்புடையவர்கள் என்றும், அமெரிக்காவுக்கு ஒற்றர்களாக வேவு பார்த்தவர்கள் என்றும் இரானியர்கள் சிலரை இரான் அரசு கைது செய்துள்ளது.

மேற்கத்தைய நாடுகள் அவநம்பிக்கை


இரான் கூற்று குறித்து மேற்கத்தைய நாடுகள் அவநம்பிக்கை.
SATURDAY, FEBRUARY 6, 2010

இரானிய அணுசக்தி திட்டம் பற்றி அனைத்துலக நாடுகளுடன் உடன்படிக்கை ஒன்றை எட்ட தாம் நெருங்கி கொண்டிருப்பதாக இரான் விடுத்துள்ள அறிக்கை பற்றி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளும் நம்பிக்கையின்மையை வெளியிட்டுள்ளன.

அணு ஆயுதம் ஒன்றை தயாரிப்பதில் முன்னேற்றம் கண்டு வரும் இரான் அதனை முற்றாக நிறுத்திவிடும் அறிகுறிகள் எதுவும் தமக்கு தென்படவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

நிலைமையை தனக்கு சாதகமாக்க இரான் காலம் தாழ்த்தி வருகிறது என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் பாப் அயின்ஸ்வொர்த் குறிப்பிட்டுள்ளார்.

ஏவுகணை உற்பத்தி


ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் ஈரானில் துவக்கம்

தெஹ்ரான், பிப். 6: ஈரான் நாட்டில் இரு இடங்களில் ஏவுகணை உற்பத்தி நிலையங்களை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அகமது வாஹிதி திறந்துவைத்தார்.

தரையிலிருந்து விண்ணிலுள்ள இலக்கைத் தாக்கும் "காயெம்' என்ற ஏவுகணை, ஹெலிகாப்டர்களைத் தாக்க வல்லது. இதையும், தரையிலிருந்து கிளம்பி, தரையிலக்கைத் தாக்கும் "டூஃபான்' ஏவுகணையையும்,இம்மையங்கள் உற்பத்தி செய்யும். ஈரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சியின் 31-வது ஆண்டு நிறைவை ஒட்டி, இத்த ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த புதனன்று, உயிருள்ள ஆமைகள், எலிகள், புழுக்கள் கொண்ட ஆய்வுக்கலனுடன், "கவோஷ்கர் 3' என்ற ஆய்வு ராக்கெட்டை, பரிசோதனை முயற்சியாக ஈரான் விண்ணுக்கு செலுத்தியது. உயிருள்ள பிராணிகளுடன் ராக்கெட் அனுப்பி மூன்று நாட்களே ஆன நிலையில் இந்நிலையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக,அந்நாட்டு அரசு டி.வி. அறிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் ஏவுகணை உற்பத்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை, மேற்கத்திய நாடுகள் கண்டித்து வருகின்றன. இத்திட்டங்கள் அணுஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தப்படலாம் என்று அவை அஞ்சுகின்றன.

ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க, இஸ்ரேலிய

ஈரான் விவகாரம் தொடர்பாக அமெரிக்க, இஸ்ரேலிய உளவுத்துறை தலைவர்கள் ரகசிய சந்திப்பு.
FRIDAY, FEBRUARY 5, 2010

டெல்அவீவ்: ஈரான் விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறை நிறுவனங்களான மொஸாத்- சி.ஐ.ஏ தலைவர்கள் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அணுசக்தி திட்டத்தைப் பற்றித்தான் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலுக்கு வருகைப்புரிந்த லியோன் பானெட்டா இஸ்ரேல் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், மொஸாத் தலைவர் ஆகியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பு வருகிற மே மாதம் நடத்த வேண்டியதுதாகும். ஆனால் மேற்காசியாவில் மீண்டும் ஒரு ராணுவ தாக்குதல் நடக்கப்போவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியான சூழலில்தான் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

கடந்த சில தினங்களாக இஸ்ரேலின் நடவடிக்கைகள் இப்பகுதியில் மோதலுக்கான சூழலை உருவாக்கி வருகின்றன. சமீபத்தில் லெபனான் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ்வுடன் ஒரு போர் என்பது தவிர்க்க இயலாதது என இஸ்ரேல் காபினட் அமைச்சர் யோஸி பெலித் கூறியிருந்தார்.

ஜனவரி 20 ஆம் தேதி துபாயில் ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலைச் செய்யப்பட்டதற்கு காரணம் இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாத் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஹமாஸும் கொலைக்கு பின்னணியிலிலுள்ள மொஸாதின் பங்கைக் குறித்த ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளதாக அறிவித்திருந்தது. துருக்கி நாட்டின் அங்காராவில் ராணுவத்தளத்தில் நூதன எலக்ட்ரானிக்ஸ் மானிட்டரிங் ஸ்டேசனை பயன்படுத்தி இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி திட்டங்களை கண்காணித்து வருவதாக துருக்கி ஆளுங்கட்சியின் தலைவர்கள் சிலர் ரஷ்ய பத்திரிகைகளிடம் தெரிவித்திருந்தனர்.

ஈரானுக்கெதிராக இஸ்ரேல் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக வெளிவந்த தகவல்களை அமெரிக்க அதிகாரிகள் மறுத்த போதிலும் மேற்காசியாவில் கடலோரங்களை மையமாகக் கொண்டு நடந்துவரும் ராணுவ நடவடிக்கைகளை இந்த மறுப்பிற்கு மாறுபாடாகவே உள்ளன

ஈரான் விண்வெளி தொழில்நுட்ப

ஈரான் விண்வெளி தொழில்நுட்ப ஆராச்சியில் உலகின் 11 இடத்தில் இருக்கிறது.
THURSDAY, FEBRUARY 4, 2010
டெஹ்ரான்: ஆமை, எலி போன்ற பிராணிகள் அடங்கிய கேப்ஸ் யூலை சுமந்த ராக்கெட்டை ஈரான் விண்வெளியில் வெற்றிக்கரமாக செலுத்தியது.

காவோஸ்கர்-3 என்றழைக்கப்படும் ராக்கெட்டைத்தான் ஈரான் வெற்றிக்கரமாக செலுத்தியுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி காவோஸ்கர்-1 என்ற ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தியது. காவோஸ்கர்-2 என்ற ராக்கெட்டை நவம்பர் 2008 இல் செலுத்தியது.

ஈரான் விண்வெளி தொழில்நுட்பம் கொண்ட உலகின் 11-வது நாடாகும். ஈரானின் பாதுகாப்புத்துறை பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்ணில் செலுத்தியதற்கு பாராட்டைத் தெரிவித்தார். பின்னர் அவர் கூறுகையில் "ஈரானின் விண்வெளி ஆய்வு அமைதிக்கானதாகும். ஏதாவது தேசம் அமைதியற்றத் தன்மைக்கு விண்வெளியை பயன்படுத்தினால் அதனை ஈரான் பொறுத்துக்கொள்ளாது" என்றார்.