வெள்ளி, 23 ஏப்ரல், 2010

சூரியனில் நடக்கும் மாற்றங்களை குறித்த அபூர்வ படங்கள்- நாசா வெளியீடு





சூரியனில் நடக்கும் மாற்றங்களை இதுவரை அறியாத புதிய கோணத்தில் படம் பிடித்து வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்.

பார்க்கவே படு பிரமிப்பாக இருக்கும் இநதப் படங்களை நாசாவின், சூரிய இயக்க கண்காணிப்பு செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியுள்ளது.

சூரியனில் ஏற்படும் மின் காந்தப் புயல்கள், பீறிடும் பிளாஸ்மா ஆகியவற்றை நெருக்கமாகப் படம் பிடிக்க இந்த பிரத்யேக செயற்கைக் கோளை ஏவியது நாசா.

இந்த செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியுள்ள அட்டகாசமான படங்களை விளக்கங்களுடன் வெளியிட்டுள்ளது நாஸா.

கடந்த பிப்ரவரி 11ம் தேதி இந்த செயற்கைக் கோளை நாசா அனுப்பியது. இதுகுறித்து திட்ட தலைமை விஞ்ஞானி டீன் பெஸ்னல் கூறுகையில், சூரியன் குறித்த பல கருத்துக்களை இந்தப் புதிய படங்கள் பொய்யாக்கியுள்ளது என்றார்.

நாசா ஹீலியோபிசிக்ஸ் பிரிவு இயக்குநர் ரிச்சர்ட் பிஷர் கூறுகையில், செயற்கைக் கோள் எந்தவித கோளாறும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. கொலராடோ ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட சாதனம் உள்ளிட்ட பல முக்கிய கருவிகள் இந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தம் அதில் மூன்று கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார்.

ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிப்பதாக பென்டகன் அறிக்கை.



வாஷிங்டன்:2015ம் ஆண்டுக்குள் ஈரானிடம் அமெரிக்காவைத் தாக்கும் சக்தி கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தயாராக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது.அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு பென்டகன் அனுப்பியுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது: சில நாடுகளின் (வடகொரியா, சீனா?) உதவியோடு ஈரான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை படுவேகத்தில் பலப்படுத்தி வருகிறது. இதே வேகத்தில் போனால் 2015ம் ஆண்டுக்குள் அமெரிக்காவைத் தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் (intercontinental ballistic missile- ICBM) ஏவுகணையை ஈரான் தயாரித்துவிடும்.

இந்த ஏவுகணையை வழியிலேயே தடு்த்து நிறுத்தி அழிக்கும் ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா நிலைநிறுத்தியாக வேண்டும். ஏவுகணை தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், வேறு பல விவகாரங்களிலும் ஈரான் தைரியமாக செயல்பட்டு வருகிறது. இராக்கி்ல் ஷியா பிரிவு போராளிகளுக்கு ஈரான் தொடர்ந்து பண, ஆயுத உதவிகளை செய்து வருகிறது. அவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறது. அதே போல ஆப்கானிஸ்தானிலும் ஒரு பிரிவு போராளிகளுக்கு அரசியல் ஆதரவும் நிதி, ஆயுத உதவிகளைத் தந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வேலைகளை அமெரிக்கா தொடர்ந்து செய்து வரும் நிலையில், பென்டகனின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்த்ததாக கருதப்படுகிறது.
Read more...

அமெரிக்காவின் அணுஆயுத தாக்குதல் மிரட்டல் குறித்து உலக நாடுகள் அமெரிக்காவை கண்டிக்கவேண்டும்.



THURSDAY, APRIL 22, 2010
டெஹ்ரான்:ஈரான் மற்றும் கொரியா நாட்டிற்கெதிராக அமெரிக்காவின் அணுஆயுத தாக்குதலின் மிரட்டல்களை தொடர்ந்து, அமெரிக்காவின் போர்தொடுக்கும் எண்னத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ளவேண்டும். இதற்கு ஒபாமாவின் அமெரிக்க அரசுதான் முழுவதுமாக பொறுப்பேற்க்க வேண்டும் என்று உலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என ஈரானின் மூத்த தலைவர் ஆயதுல்லா சையத் அலி கூறியுள்ளார்.

சர்வதேச நாடுகளுக்கும் இந்த மிரட்டல்களை தவிர்க்கும் உரிமை கிடையாது என்று டெஹ்ரானில் நடைபெற்ற செவிலிகள் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒபாமாவின் இந்த மிரட்டல், அமெரிக்க வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்றும் மனிதகுலத்திற்கு எதிராக இப்படி ஒரு மிரட்டலை விடுவதற்கு உலகத்தில் யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அலி சூசகமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் எக்காலமும் யு.எஸ்சின் நரக தலைமைத்துவத்திற்கு அடி பணிய மாட்டோம் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார். முன்னதாக, அமெரிக்கா அணுஆயுதத்தை கொண்டு ஈரான், கொரியா போன்ற நாடுகளை தாக்கலாம் என்பதுபோல சட்டத்தை மாற்றியமைத்தது நினைவிருக்கலாம். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரானும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரானின் ராணுவ பலத்தை இஸ்ரேலால் எதிர்க்கொள்ள இயலாது: ஈரான் பாதுகாப்புத்துறை


அமைச்சர்.
தெஹ்ரான்:ஈரானின் ராணுவ பலத்தை எதிர்க்கொள்ள இஸ்ரேலுக்கு துணிவில்லை என்று ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்தார். ஈரானின் வடக்கு நகரான பபோலில் FNA வுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.

’ஈரானின் ராணுவ மற்றும் ஆன்மீக பலம் இஸ்ரேலுக்கு மரணத்தையும் துயரத்தையும் விளைவிக்கும்.’ இஸ்ரேல் சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் சந்தித்துவரும் பிரச்சனைகளை நினைவுக்கூறிய வாஹிதி ,’சியோனிஷ அரசு சர்வதேச தனிமைப்படுத்தப்படுதலிருந்தும், உள்நாட்டுப் பிரச்சனையிலிருந்தும் தப்பிக்கலாம் என கற்பனைச் செய்கிறது. ஆனால் அது தோல்வியையே தழுவும்.

மேற்கு கரையும், பைத்துல் முகத்தஸும் இன்று சியோனிஷ அரசுக்கு முக்கிய பிரச்சனையாக திகழ்கிறது. இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் இஸ்ரேல் நாசத்தை விளைவிக்கும் பதிலடியை ஈரானின் படைகளிடமிருந்து எதிர் கொள்ளவேண்டி வரும். லெபனானுக்கு எதிராக நடந்த 33 நாள் போரை விட கடுமையான விளைவுகள் ஏற்படும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஈரானுக்கெதிரான அணுஆயுத அச்சுறுத்தல் மனித இனத்தை அழிப்பதற்கான அந்நாடுகளிலிருந்து வரும் அடையாளமாகும்.

வாஹிதி இதனை தெரிவிப்பதற்கான காரணம் என்னவெனின்ல் சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா,ஈரான் மற்றும் வடகொரியாவுக் கெதிராக அணு ஆயுத தாக்குதல் குறித்து அச்சுறுத்தினார்.அணுஆயுதக் குறைப்பை பற்றி ஒரு பக்கம் பேசும் அமெரிக்கா டெஹ்ரான் மற்றும் பியோங்யாங் (வடகொரியா தலைநகர்)கிற்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை குறித்தும் பேசுகிறது. ஒபாமாவின் அச்சுறுத்தலைப் பற்றிக் குறிப்பிட்ட ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத் ஒபாமாவிற்கு அனுபவம் போதவில்லை எனத்தெரிவித்தார்.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் காமினி ஈரானின் புரட்சிப் படையினர் மற்றும் ராணுவ கமாண்டர்கள் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், அமெரிக்காவின் அணுஆயுத அச்சுறுத்தலைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது,’ஒபாமாவின் அறிக்கை ஆச்சரியமாக உள்ளது. உலகம் இதனை ஊன்று கவனிக்க வேண்டும். 21 ஆம் நூற்றாண்டில் அணுஆயுத தாக்குதலைக் குறித்துப் பேசும் அமெரிக்காதான் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும், தீவிரவாதத்திற்கு எதிராகவும் பிரச்சாரம் செய்கிறது.’ என்றார்.

ஈரானின் தரைப்படை கமாண்டர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் ரசா போர்டஸ்டான் கடந்த புதன் கிழமை கூறுகையில்,’ஈரானின் தரை,கப்பல்,விமானப்படைகள் நாட்டிற்கெதிரான அச்சுறுத்தலை எதிர்க்க தயாராக உள்ளது என்றார். மேலும் அவர் தெரிவிக்கையில் ஆயுதப்படைகள் எந்த அச்சுறுத்தலுக்கும் பதிலடிக் கொடுக்க எந்நேரமும் விழிப்புடனும், தயாராகவும் இருக்கின்றன’ என்றார்.