புதன், 5 மே, 2010

நியூயார்க் பாலத்தில் நின்ற மர்ம லாரியில் வெடிகுண்டு பீதி.


நியூயார்க்: நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ராபர்ட் கென்னடி பாலத்தில் மர்ம லாரி ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றதால் அந்தப் பாலம் மூடப்பட்டது. தற்போது அந்த லாரியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு அந்த லாரியை பாலத்தில் நிறுத்தி விட்டு ஒரு நபர் இறங்கி ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதனால் பீதி ஏற்பட்டது. லாரியிலிருந்து காஸ் வாசனையும் வந்து கொண்டுள்ளது.

மர்ம லாரியைத் தொடர்ந்து பாலம் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளனர்.முதல் கட்ட விசாரணையில், லாரியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் பீதி சற்று அகன்றுள்ளது. இந்த பாலம் முன்பு திர்பாரோ பாலம் என்று பெயர் அழைக்கப்பட்டது. மன்ஹாட்டன், பிரான்க்ஸ், க்வீன்ஸ் ஆகிய பகுதிகளை இது இணைக்கிறது. சமீபத்தில், டைம்ஸ் சதுக்கப் பகுதியில் கார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மர்ம லாரியால் நியூயார்க் நகரில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது.

ஹிஜாப்:முஸ்லிம் மாணவியை உடனடியாக பள்ளிக்கூடத்தில் சேர்க்க கேரள அரசு உத்தரவு



.
திருவனந்தபுரம்:ஹிஜாப் அணிந்த காரணத்தினால் பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கிய 9-ஆம் வகுப்பு பயிலும் நபாலா என்ற முஸ்லிம் மாணவியை உடனடியாக பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள மாநில அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்திய கல்வித்துறை துணை இயக்குநர் ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ததாக பொது கல்வி இயக்குநர் எ.பி.எம்.முஹம்மது ஹனீஷ் தேஜஸிடம் தெரிவித்தார்.

இச்சம்பவத்தைக் குறித்து சரியான விளக்கத்தைப் பெற பள்ளிக்கூட நிர்வாகத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்களை காண முடியவில்லை என்றும், அவர்களிடமிருந்து கிடைத்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றும் துணை இயக்குநரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இச்சம்பவத்தைக் குறித்த விரிவான விசாரணை தொடரும்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Read more... Posted by புதிய தென்றல் at 9:50 PM , Links to this post , 0 comments
Labels: ஹிஜாப்
ஹிஜாப் அணிந்ததை அடுத்து மேலும் ஒரு மாணவி நீக்கம்: தொடரும் கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கூடங்களின் மதத்துவேஷம்.
கொல்லம்:ஹிஜாப் அணிந்ததால் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நபாலா என்ற 9-ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவியைத் தொடர்ந்து ஆலப்புழா கிறிஸ்தவ மிஷனரி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகள் மீண்டும் ஒரு முஸ்லிம் மாணவிக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கி பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

பூணப்புரா செண்ட் அலோசியஸ் பள்ளிக்கூடத்தில் பயின்ற மாணவி ஹாஜிராவை பள்ளிக்கூட நிர்வாகிகள் ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கியுள்ளனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் செண்ட் அலோசியஸ் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த ஆஸியாவும் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இவருடைய தந்தை தனது மகளின் படிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சிஸ்டர் மேரி மாத்யூவை அணுகிய பொழுது மதத்துவேசமான முறையில் பேசியுள்ளார்.

மேலும் பள்ளிக்கூடத்தில் ஹிஜாப் அணிந்ததற்காக அனைத்து முஸ்லிம் மாணவிகளையும் வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் அது எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். அதேவேளையில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான அந்த பள்ளிக்கூட தலைமயாசிரியை தலையில் அணிந்திருக்கும் கிறிஸ்தவ முறையிலான ஆடையைக் குறித்து கேட்டபொழுது இது எங்களுடைய பள்ளிக்கூடம் எங்கள் விருப்பப்படி ஆடை அணிவோம் என பதிலளித்துள்ளார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Read more... Posted by புதிய தென்றல் at 9:42 PM , Links to this post , 0 comments
Labels: ஹிஜாப்
கேரளா:பள்ளிக்கூடத்தில் ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவியை வெளியேற்றிய பள்ளிக்கூட நிர்வாகம்.

ஆலப்புழா:ஹிஜாப் அணிந்த காரணத்தினால் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றியுள்ளது கிறிஸ்தவ பள்ளிக்கூடம். இதற்கெதிராக எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஆலப்புழையில் குருபுரம் என்ற இடத்தில் செயல்படும் பிலீவேர்ஸ்(believers) சர்ச் சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவி டி.என்.நபாலா. இவர் பள்ளிக்கூடத்திற்கு தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார். இதனால் இவரை பள்ளிக்கூட நிர்வாகம் பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கியுள்ளது.

கெ.பி.யோகன்னான் என்பவர் தலைமையில் செயல்படும் இப்பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி நபாலாவுக்கு ஹிஜாப் அணிந்ததற்காக மாற்று சான்றிதழ்(T.C) கொடுக்கப்பட்டுள்ளது. மாற்றுச் சான்றிதழில் கூறப்பட்டுள்ள காரணம் இதுவாகும்: 'maftha is not allowed in this school' என்பதாகும். ஒன்பதாம் வகுப்பிலிருந்து வெற்றி பெற்று பத்தாம் வகுப்பிற்கு சென்றுள்ள நபாலாவை தற்பொழுது பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கினால் அது அவருடைய தொடர் படிப்பை பாதிக்கும் என்றும் இவ்வருடம் மட்டும் படிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியபொழுதும் பள்ளிக்கூட நிர்வாகம் செவிக் கொடுக்கவில்லை. இதனை நபாலாவின் தந்தை நாஸிர் முஸ்லியார் பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

ஹிஜாப் அணிவது மதக்கடமையானதால் அனுமதிக்க வேண்டும் என்று கோரியபொழுது பள்ளிக்கூட நிர்வாகம் மோசமாக நடந்துக்கொண்டது. எல்.கே.ஜி முதல் நபாலா இப்பள்ளிக் கூடத்தில்தான் பயின்று வருகிறார். முதலில் எஸ்.என்.டி.பி என்ற அமைப்பின் கீழ் இப்பள்ளிக்கூடம் செயல்பட்டிருந்தது. அப்பொழுதெல்லாம் பிரச்சனைகளொன்றும் இல்லை. பிலீவர்ஸ் சர்ச் இப்பள்ளிக்கூட நிர்வாகத்தை ஏற்ற பொழுதுதான் பிரச்சனை உருவானது. நபாலாவை தொடர்ந்து படிக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி அவருடைய தாயார் பள்ளிக்கூடம் சென்றபொழுது ஆசிரியையோ தலைமை ஆசிரியரோ சந்திக்க விருப்பமில்லை எனக் கூறிவிட்டனர்.

தலைமை ஆசிரியரின் மொபைலில் தொடர்புக் கொண்டபொழுது ஹிஜாபை அனுமதிக்க முடியாது டி.சி யை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். அப்படியானால் ஹிஜாப் அணிந்ததால்தான் டி.சி வழங்குகிறோம் என்று எழுதித் தாருங்கள் என்ற பொழுது இவ்வாறு கேட்டால் மாணவியின் மோசமான நடவடிக்கை என்று எழுதித்தருவோம் என மிரட்டினார்.பின்னர் கெஞ்சிய பின்னரே இவ்வாறு எழுதித் தந்துள்ளார்கள்.

நபாலா சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்துள்ளதால் வேறு பள்ளிக்கூடங்களில் சேர்ப்பது தொடர் படிப்பிற்கு கடினமாக இருக்கும் ஆதலால் கிரஸண்ட் சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடத்தில் அனுமதிக் கேட்ட பொழுதும் அவர்களும் இத்தகைய பிரச்சனையை காரணம் காட்டி அவர்களும் சேர்க்க முடியாது எனக் கூறிவிட்டனர்.இதனால் எனது மகளின் தொடர் படிப்பை இழக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் இதில் தலையிட வேண்டும் எனவும் நபாலாவின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.மாணவியை ஹிஜாப் அணிந்ததற்காக வெளியேற்றிய பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

அணு ஆயுத அச்சுறுத்தல் விடுக்கும்’ நாடுகளை ஐ.நா தண்டிக்க வேண்டும்


அணு பரவலாக்காமை ஒப்பந்த மீளாய்வு கூட்டத்தில் ஈரானிய ஜனாதிபதி
அணு ஆயுத பாவனை வெறுப்புக்கும் வெட்கத்துக்கும் உரியது. அவ்வாறான பாவனையை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தி வரும் அமெரிக்கா போன்ற நாடுகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு தண்டிக்க வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜாத் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சம்மேளனக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஈரானிய ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
1970 ஆம் ஆண்டின் அணு ஆயுத பரவலாக்காமை ஒப்பந்தத்தில் கைச்சாத் திட்டுள்ள 189 நாடுகளின் ஒப்பந்த மீளாய்வு சம்மேளன கூட்டம் ஒரு மாத காலத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறுகிறது.

அணு ஆயுத தடை ஒப்பந்தம் மீதான மாநாடு ஐ.நா.வில் நடைபெற்றபோது ஈரான் ஜனாதிபதி அஹமதி ரஜாத் உரையாற்றுகின்றார்.
இந்த கூட்டத் தொடரின் ஆரம்ப கட்டத்தில் உரையாற்றிய போதே ஈரானிய ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அணு ஆயுதங்களை வைத்திருப்பது என்பது ஒன்றும் பெருமைக்குரிய விடய மல்ல. அவ்வாறான ஆயுதங்கள் சமாதான முறையிலான அணு வசதிகளுக்கு எதிராக பாவிக்கப்படும் என்ற அச்சுறுத்தலோ அல்லது அவ்வாறான தாக்குதலோ சர்வதேச சமாதானம் அல்லது பாதுகாப்பை மீறும் செயல் என கருதப்பட வேண்டும்.
அவ் வாறான தாக்குதலை மேற்கொள்ளும் நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் துரித செயற்பாட்டின் விளைவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். அத்துடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இதர நாடுகளினால் பகிஷ்கரிக்கப்பட வேண்டும் என்று ஈரானிய ஜனாதிபதி சாடினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்த கூட்டங்களின் போது மேற்குலக நாடுகள் அடிக்கடி வெளிநடப்பு செல்வது ண்டு. ஈரானிய ஜனாதிபதியின் காரசாரமான உரையின் போதும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பல மேற்கு நாடுகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருந்தன.
இஸ்ரேல் அதன் அண்டைய நாடுகளை தாக்குவதாகவும் கைப்பற்றப் போவதாகவும் அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடு களின் நிபந்தனையற்ற ஆதரவு இஸ்ரேலுக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது என்று ஈரானிய ஜனாதிபதி குற்றஞ் சாட்டை விடுக்கத் தொடங்கியதையடுத்தே மேற்கு லக தூதுக்குழுவினர் சபையிலிருந்து வெளிநடக்க ஆரம்பித்தனர்.
ஈரானிய ஜனாதிபதி அஹமதி நஜாத்தின் கூற்றை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலரி கிளின்டன் நிராகரித்தார்.
எப்போதும் போலவே பொய்யான குற்றச்சாட்டுக்களையே அவர் இம்முறையும் முன்வைக்கிறார் என்று கூறிய ஹிலரி சகல நாடுகளும் ஒன்றிணைத்து ஈரானின் அணு ஆயுத திட்டத்தை கைவிடச் செய்ய வைப்பதற்கு முன்வரவேண்டும் என்று ஹிலரி கிளின்டன் வலியுறுத்தினார்.
இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணு பரவலாக்காமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை எனினும் இவை அணு ஆயுதங்களை வைத்துள்ளன. வடைகொரியா முதலில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது. எனினும் 2003 இல் அதிலிருந்து விலகிக் கொண்டு 2006 இலும் 2009 இலும் அணு சோதனைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஜெருசலம்:சிறைக்கைதியான ஃபலஸ்தீன் முஸ்லிமின் குர்ஆனை கிழித்தெறிந்த இஸ்ரேலிய வார்டன்

ஜெருசலம்:இஸ்ரேலின் சிறைக்கொட்டகையில் அடைக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீனைச் சார்ந்த ஒருவரிடமிருந்து கைப்பற்றிய புனித குர்ஆனை இஸ்ரேலிய வெறிப்பிடித்த வார்டன் ஒருவன் கிழித்தெறிந்துள்ளான். அஷ்கலன் சிறையில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த கைதியான ஃபலஸ்தீன் முஸ்லிமிடமிருந்து கத்திக்கொண்டு வந்த இஸ்ரேலி வார்டன் குர்ஆனை பலவந்தமாக கைப்பற்றி கிழித்தெறிந்துள்ளான்.

இச்சம்பவம் ஃபலஸ்தீனில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அல் அரூப் அகதிகள் முகாமிலும் மெஜிதோ சிறையிலும் குர்ஆனை பலவந்தமாக கைப்பற்றி கிழித்தெறிந்துள்ளனர் யூத பயங்கரவாதிகள்

கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான ஆதரவு தொடரும்: பாகிஸ்தான்


இஸ்லாமாபாத்:கஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான தார்மீக, ராஜீய, அரசியல் ரீதியான ஆதரவில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் தேசிய அசம்பிளியில் பாக்.வெளியுறவுத்துறை அமைச்சர் குரைஷி தெரிவித்தார்.

கஷ்மீர் விவகாரத்தில் ஆசுவாசமான தீர்வைத்தான் பாகிஸ்தான் விரும்புகிறது. கஷ்மீரிகளின் விருப்பங்களுக்கும், ஐ.நா தீர்மானத்திற்கும் ஒத்ததாக இருக்கவேண்டும் அந்த தீர்வு. கஷ்மீரிகள் பங்கெடுக்காத ஒரு பரிகாரமும் நிலைக்காது. கஷ்மீரிகளை சேர்க்காமல் நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை பரிபூரணமாகயிருக்காது.

பிரச்சனை தீர்ப்பதற்காக நாங்கள் எல்லைக்கு அப்பாலும் எல்லைக்கு உள்ளும் உள்ள கஷ்மீரி தலைவர்களுடம் உறவை பேணி வருகிறோம். பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கொள்கையின் ஆணிவேரான கஷ்மீர் பிரச்சனையை மறந்துவிட்டு முன்னே செல்ல சாத்தியமில்லை. அதேவேளையில் பேச்சுவார்த்தைகள் மூலமாகத்தான் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.

கடந்த ஆண்டு எகிப்தின் ஷரமுஷேக்கில் வைத்து இருநாட்டு பிரதமர்கள் நடத்திய ஒருங்கிணந்த பிரகடனத்தில் இதனை அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டது. இவ்வாறு குரைஷி கூறினார்.

ஹமாஸின் மனம் மாறிவிடுமா?



டெல்அவீவ்:மூன்று ஆண்டுகள் காஸ்ஸா மீது விதிக்கப்பட்ட தடையின் மூலம் இஸ்ரேல் சாதித்தது என்ன? காஸ்ஸா மக்களையும் அவர்களுடைய பாதுகாவலர்கள் எனக்கூறப்படும் ஹமாஸையும் பாடம் புகட்ட முடிந்ததா? எதற்காக இந்த கூட்டுத்தண்டனை? தடையின் தற்போதைய நிலை என்ன?

ஹமாஸ் அதிகாரத்தை கைப்பற்றியதை விரும்பாத இஸ்ரேலும், எகிப்தும் காஸ்ஸாவிற்கு ஏற்படுத்திய தடையையும், அதன் பலனையும் குறித்து பி.பி.சிக்கு சில ஆவணங்கள் கிடைத்துள்ளன.

குடிதண்ணீர் உள்ளிட்ட உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருட்களை தடைச் செய்த பிறகும் தளராத ஃபலஸ்தீனர்கள் இறுதியில் வெற்றியைப் பெற்றுள்ளார்கள் என பி.பி.சியின் நிரூபர் டிம் ஃப்ராக்ஸ் கூறுகிறார்.

எதற்காக காஸ்ஸாவின் மீதான இத்தகைய தடை? என நீதிமன்றத்தின் கேள்விக்கு, இஸ்ரேல் அளித்த பதில், 'ஹமாஸிற்கு பாடம் புகட்ட' என்பதாகயிருந்தது. தடை ஏற்படுத்துவதால் போராளிகள் எவ்வாறு தங்களது ஆரோக்கியத்தை பேணுவார்கள் என்று பார்ப்போம் என்பது இஸ்ரேலின் நோக்கமாகயிருந்தது.

காஸ்ஸாவிற்குள் நுழைய தடைச்செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை வெளியிட இஸ்ரேலுக்கு துணிச்சலில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் நிர்பந்தம் அதிகமாகும் பொழுது ஒவ்வொரு பொருளின் இறக்குமதியை இஸ்ரேல் அனுமதி வழங்கியது. குடிதண்ணீருக்கான தடையை நீக்கியது இந்த மாதம் பிப்ரவரியிலாகும். துணிகளை அனுமதித்தது மார்ச் மாதம். அலுமினியம், பர்னிச்சர்களுக்கான மரம், சமையலறை பாத்திரங்கள், செருப்புகள் ஆகியவற்றை கடந்த மாதம்தான் இறக்குமதிச் செய்ய இஸ்ரேல் அனுமதியளித்தது.

அதேவேளையில் மல்லிப்பொடி, ஜூஸ் வகைகள், விளையாட்டுப் பொருட்கள், சாக்கலேட், ஜாம், ஆடைகள் ஆகியவற்றிற்கான தடை தற்பொழுதும் தொடருகிறது.

காஸ்ஸா தடையைக் குறித்து விவரமறிய தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி பணியாற்றும் இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பான 'கிஸா' தான் இஸ்ரேல் தடைச்செய்த பொருட்களின் பட்டியலை வெளியிட்டது.

சர்வதேச நிர்பந்தத்தின் காரணமாக இஸ்ரேல் காஸ்ஸாவிற்குள் கடந்த வருடம் பாதி முதல் இம்மாதம் வரை அனுமதித்த 81 பொருட்களின் பட்டியலையும், கால அளவையும் இவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இஸ்ரேல் சமர்ப்பித்த 13 பக்க விளக்கத்தில் எந்தவொரு நீதியும் இல்லை. இன்று அத்தியாவசியப் பொருட்கள் காஸ்ஸாவிற்குள் கிடைக்க ஆரம்பித்திருந்தாலும், தடை மற்றும் தனிமைப்படுத்தலில் நாட்களை மன உறுதியோடு எதிர் கொண்ட வரலாற்றைத்தான் இவர்களால் கூறமுடியும்.

மல்லிப்பொடியை தடைச்செய்ததால் ஹமாஸின் மனதை மாற்ற முடியவில்லை என்பதோடு உலக சமூகத்தின் ஆதரவையும் பெற இந்தத் தடை உதவியது.

ரியாத்தில் கடும் சூறாவளிக் காற்றுடன் மழை- வரலாறு காணாத வெள்ளம்


சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. வாகனப் போக்குவரத்து முடங்கி விட்டது. பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கடும் சூறாவளிக் காற்றுடன் நேற்று பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடாகியுள்ளது. பல சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடிவருவதால், போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்துள்ளது.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு கன மழை கொட்டித் தீர்த்தது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கிலிருந்து மணிக்கு 42 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சவூதி அரேபிய கல்வி அமைச்சர் இளவரசர் பைசல் பின் அப்துல்லா கூறுகையில், ரியாத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்தார்.மேலும்,அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கு மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை மீட்கும் நடவடிக்கைகளில் ரியாத் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பாலங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கன மழையால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை காரணமாக பல்வேறு இடங்களிலிருந்து கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு பலரால் வர முடியாமல் போனதால் அவர்கள் விமானங்களைத் தவற விட நேரிட்டது.

நேற்று பிற்பகல் பள்ளியிலிருந்து திரும்பிய மாணவர்கள், மழை வெள்ளத்தால் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள். இதேபோல ரியாத் நகருக்கு விமானங்கள் மூலம் வந்தவர்களும் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்ல முடியாமல் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.