
ஹிஸ்புல்லா நவீன ஏவுகணையை தயாரிப்பது இஸ்ரேலுக்கு ஆபத்து
லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் புதிய தொழில் நுட்பத்தினூடாக நவீன ஏவுகணைகளைத் தயாரிப்பதாக அமெரிக்காவின் செனட்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹிஸ்புல்லாஹ் தொழில்நுட்ப ரீதியாகப் பலமடைவது இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்து எனத் தெரிவித்த செனட்டர் மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லா அமைப்பிற்கு சிரியா ஆயுதங்களை வழங்கு வதாக அண்மையில் இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமென் பெரஸ் குற்றம்சாட்டினார். இதை சிரியா முற்றாக நிராகரித்தது. ஆனால் இதன் உண்மைத் தன்மைகளை ஆராய அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது. சிரியத் தூதுவருக்கு இதுபற்றி விளக்கம் தரும்படியும் அமெரிக்கா கேட்டுள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் எதிர்கொள்ளும் ஆபத்தை இல்லாமல் செய்ய வேண்டுமெனில் இஸ்ரேல் பலஸ்தீன் பிரச்சினைகள் இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் தீர்க்கப்படவேண்டுமென அமெரிக்க செனட்டர் மேலும் தெரிவித்தார்.


