புதன், 28 ஏப்ரல், 2010

இலங்கை தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு அமைக்கப்படுவதை - தடுக்கும் முயற்சி தீவிரம்!

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் லின் பாஸ்கோ, அடுத்தமாதமளவில் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.நாவின் உயர்மட்ட தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ள போதும், அவர் ஐ.நா அமைக்கவுள்ள இலங்கை தொடர்பான விஷேட நிபுணர் குழு பற்றி ஆராய்வதற்காக இவ்விஜயத்தினை பயன்படுத்தமாட்டார் என தெரிய வருகிறது.

இலங்கையின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அண்மையில் நியூயோர்க்கில், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். இதில், இலங்கை தொடர்பில், நிபுணர் குழுவை அமைக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை ஏப்ரல் 20 ம் திகதி இஸ்ரேலினால் ஐ.நா வில் நடத்தப்பட்ட வரவேற்பு உபசாரத்தின் போது உங்கள் அரசாங்கத்திற்கு எதிராக நான் செயற்படுவதில்லையென பான் கீ மூன், ஐ.நாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹணவுக்கு தெரிவித்ததாக இன்னர்சிற்றி பிறஸ் குறிப்பிட்டிருந்தது.

மேலும், இலங்கை தொடர்பில் நிபுணர் குழு அமைக்கப்படும் என எதிர்பாத்திருக்க வேண்டாமென்று ஐ.நாவில் உள்ள சிரேஷ்ட்ட அதிகாரியொருவர் கூறியதாகவும் இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது.
இந்நிலைமைகளினல் இலங்கை தொடர்பில் ஐ.நாவின் விஷேட நிபுணர் குழு அமைக்கப்படுமா? என்றே சந்தேகம் எழுந்துள்ளது!

காந்தஹாரில் ஐ.நா அலுவலகம் மூடப்பட்டது

காபூல்:ஆப்கானிஸ்தானில் காந்தஹார் நகரில் செயல்பட்டுவந்த ஐ.நா அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள் என கூறப்பட்டாலும் வருகிற ஜூனில் நேட்டோ படையினர் நடத்தவிருக்கும் தாக்குதலை முன்னிட்டுத்தான் ஐ.நா அலுவலகம் மூடப்பட்டது என கூறப்படுகிறது.

வெளிநாடுகளைச் சார்ந்த பணியாளர்களிடம் காபூல் தலைமை அலுவலகத்திற்கு செல்லவும், ஆப்கானிஸ்தான் பணியாளர்கள் சிறிதுகாலம் வீட்டிலிருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் சூசன் மானுவல் தெரிவித்தார்.

40 வெளிநாட்டு பணியாளர்களிருந்த அலுவலகத்தில் தற்பொழுது 10க்கும் குறைவான பணியாளர்களே உள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்படும் அலுவலகத்திற்கு தாக்குதல் பீதி உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அலுவலகத்தை மூடுவதாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

ஆனால்,அத்தகைய சூழல் தற்பொழுது இல்லை என்றும், அலுவலகத்தை மாற்றியது கண்டிக்கத்தக்கது என்றும் மாகாண மேயர் அஹ்மத் வலி கர்ஸாயி தெரிவித்தார்.

அமெரிக்காவின் நிர்பந்தத்தின் அடிப்படையில் தான் ஐ.நா அலுவலகம் காந்தஹாரில் மூடப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜூனில் நடைபெறும் ராணுவ நடவடிக்கையில் ஆப்கான் ராணுவத்தினர் உட்பட 23000 பேர் பங்குபெறுவர் என கூறப்படுகிறது. தற்பொழுது பணியிலுள்ள 8 ஆயிரம் அமெரிக்க-கனடா அந்நிய ஆக்கிரமிப்பு ராணுவத்தினருடன் புதியதாக வரும் 3500 அமெரிக்க அந்நிய ஆக்கிரமிப்பு படையினரும் இந்த ராணுவ நடவடிக்கையில் கலந்துக் கொள்வர்.

6700 ஆப்கான் ராணுவத்தினரும் இதில் பங்குபெறுவர். அமெரிக்க அந்நிய ஆக்கிரமிப்பு படையினர் நடத்தவிருக்கும் அக்கிரம ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்நிய ஆக்கிரமிப்பு அக்கிரம் ராணுவ நடவடிக்கைக்கு கடுமையான பதிலடியைக் கொடுப்போம் என அவர்கள் கூறியுள்ளனர்.
செய்தி:தேஜஸ்

மால்கம் எக்ஸ் கொலையாளியை பரோலில் விடுதலைச் செய்தது

வாஷிங்டன்:அமெரிக்காவில் மனித உரிமை சேவகராகவும் நேசன் ஆஃப் இஸ்லாமின் தலைவராகவுமிருந்த மால்கம் எக்ஸ் என்ற மாலிக் அல் ஸாபாஸைக் கொன்ற கொலையாளியை 45ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் பரோலில் விடுதலைச் செய்தது.

1965 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மால்கம் எக்ஸை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட தாமஸ் ஹகேன் என்பவரைத்தான் நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் குடும்பத்தினருடன் வாழ விடுதலைச் செய்துள்ளது.

ஹகேனுக்கு 22 வயதான காலக்கட்டத்தில்தான் மால்கம் எக்ஸை தனிப்பட்ட விரோதம் காரணமாக கொன்றார் என குற்றஞ் சாட்டப்படுகிறது. இதற்கு உதவிய முஹம்மது அப்துல் அஸீஸையும், காலித் இஸ்லாமினுக்கும் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது.

கறுப்பு நிற மக்களின் வாழ்வில் வசந்தம் இஸ்லாமின் மூலமே சாத்தியம் என்பதை பிரச்சாரம் செய்த மால்கம் எக்ஸ் நேசன் ஆஃப் இஸ்லாம் என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவராவார். இவர் ஒரு மனித உரிமைப் போராளியாவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வேற்றுகிரக உயிரிகள் உண்டு:ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ்.

வாஷிங்டன்:வேற்றுக்கிரக உயிரிகள் உண்டுமா? பல நூற்றாண்டுகளாக விஞ்ஞான உலகத்தை குழப்பத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் கேள்வி இது.வேற்று கிரக உயிரிகள் உண்டு என்கிறார் இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங். ஆனால் அவற்றுடன் தொடர்பு ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வது மனித குலத்தின் அழிவிற்கு காரணமாக மாறிவிடும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.டிஸ்கவரி சேனலில் ஒரு புதிய டாக்குமெண்டரி தொடரில் பிரபஞ்சத்தின் மிகவும் மர்மமான ஒன்றைக் குறித்து ஹாக்கிங்ஸ் தனது ஆய்வை தெரிவிக்கிறார்.

கிரகங்களில் மட்டுமல்ல கிரகங்களுக்கிடையிலான வெற்றிடங்களிலும் இவை நடமாடலாம் என்கிறார். வேற்றுக்கிரக உயிரினங்களை குறித்த ஹாக்கிங்ஸின் வாதம் எளிதானது. இப்பிரபஞ்சத்தில் 100 பில்லியன் கேலக்ஸிகள் உள்ளன. ஒவ்வொன்றிக்கும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்களும் உள்ளன. இத்தைகையதொரு விசாலமான பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் உயிரினங்கள் வாழுகின்றன எனக்கூறுவது கற்பனைச் செய்யவியலாத ஒன்றாகும். அவற்றின் உருவம் எவ்வாறிருக்கும் என்பதை கற்பனைச் செய்வதுதான் உண்மையான சவாலாகும். என ஹாக்கிங்ஸ் கூறுகிறார்.

உலகில் அதிக அளவு ஏவுகணைகளை வைத்துள்ள ஹஸ்புல்லாஹ் இயக்கத்தினர்: அமெரிக்கா அறிவிப்பு.



உலகில் பல நாடுகளிடம் உள்ள ஆயுதங்களை பார்க்கிலும் அதிக ஏவுகணை, ஏறிகணைகளை ஹஸ்புல்லாஹ் அமைப்பினர் தமது வசம் வைத்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். சிரியாவும் ஈரானும் அதிக அளவிலான ஆயுதங்களை லெபனானிய இஸ்லாமிய அமைப்பான ஹஸ்புல்லாஹ்விற்கு வழங்குவதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ரொபர்ட் கேட்ஸ் குற்றச்சாட்டியுள்ளார்.இவ்வாறான நடவடிக்கைகள் பிராந்தியத்தின் அனைவரையும் பாதிக்கும் என ரொபர்ட் கேட்ஸ் இஸ்ரேலிய தலைவர்களுடன் கலந்துரையாடும்போது தெரிவித்துள்ளார்.ஹஸ்புல்லாஹ் அமைப்பினருக்கு சிரியா ஏவுகிற ஏறிகணைகளை வழங்குவதாக ரொபர்ட் கேட்ஸ் குறிப்பிடாதபோதிலும் இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றது.

2006 ஆம் ஆண்டு ஹஸ்புல்லாஹ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 34 நாட்கள் இடம்பெற்ற மோதலில் ஆயிரத்து 200 இற்கும் அதிகமான லெபனானியர்கள் பலியானதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாவர் இஸ்ரேலைச் சேர்ந்த 560 பேர் இந்த மோதலில் கொல்லப்பட்டதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிரியாவும் ஈரானும் ஹஸ்புல்லாஹ் அமைப்பினருக்கு அதிக எறிகணைகளை வழங்குவதாகவும், அவர்களிடம் இந்த ஆயுதங்கள் அதிக அளவில் இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஏவூத் பராக்கை வொஷிங்டனில் சந்தித்து கலந்துரையாடிய போதே ரொபர்ட் கேட்ஸ் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
உலகில் பல அரசாங்கத்திடம் உள்ளவற்றை விட அதிக அளவிலான ஆயுதங்கள் ஹஸ்புல்லாஹ் அமைப்பினரிடம் இருக்கின்றனது பாரிய அச்சுறுத்தல் எனவும் எனவே அதனை மிக கவனமாக அவதானித்து வருவதாக ரொபர்ட் கேட்ஸ் பென்டகனின் செய்தியாளர்களிடம் உரையாடியபோது குறிப்பிட்டுள்ளார்.

பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பியமை : உடன் பதிலளிக்க ம. அரசுக்கு உத்தரவு

சென்னையில் சிகிச்சை பெறவந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைth திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசை உடனடியாகப் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

மனுவில், "மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் திகதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஜெயசிங் ஆஜராகி வாதாடுகையில்,

"இந்த வழக்கில் மத்திய அரசையும், மாநில அரசையும் பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார்கள். பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் கிடையாது. வெளிநாட்டவர்கள் வருகையும், அனுமதி வழங்குவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது" என்று கூறினார்.

இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர்.

பின்னர் நடந்த வாதத்தில் மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் ஆஜராகி நாளை(இன்று)பதில் அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ___

ரஷ்யாவின் கடற்படைத் தளத்துக்கான கால எல்லை 2042 வரை நீடிப்பு

உக்ரைன் பாராளுமன்றத்துக்குள் கூழ் முட்டை, பெற்றோல் குண்டுகள் வீசி எதிர்க்கட்சிகள் ரகளை

உக்ரைன் பாராளுமன்றம் ரஷ்யாவின் கடற்படைத் தளத்துக்கான காலத்தை 25 ஆண்டுவரை நீடிக்க அனுமதி வழங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியபோது இதற்கான அனுமதியை பாராளுமன்றம் வழங்கியது. இதன் பிரகாரம் 2042ம் ஆண்டுவரை உக்ரைனில் ரஷ்யாவின் கடற்படைத் தளம் இயங்கவுள்ளது.

உக்ரைன் பிரதமர் யனுகோவிச், ரஷ்ய ஜனாதிபதி மெத்விடிவ் ஆகியோருக்கிடையே இது தொடர்பான உடன்படிக்கைகள் ஏப்ரல் 21ம் திகதி கைச்சாத்திடப்பட்டன. ரஷ்யாவிடமிருந்து உக்ரைன் பெறும் எரிவாயுக்களுக்கு முப்பது வீத விலைக் கழிவை வழங்குவது என ரஷ்யா உத்தரவாதம் வழங்கியதையடுத்து கடற்படைக் காலத்துக்கான கால எல்லையை உக்ரைன் பாராளுமன்றம் நீடித்தது. 236 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தக் கால எல்லை நீடிக்கப்பட்டது.

எனினும் இதைச் சட்டமாக்க இன்னும் பத்து எம்.பி.க்களின் ஆதரவுகள் தேவையாயுள்ளன. இது குறித்துப் பிரதமர் யனுகோவிச் கூறியதாவது, இதை மாற்றம் செய்ய முடியாது. குறைந்த விலையில் எரிவாயுவை பெற இதைச் செய்தோம். குறைந்த விலையில் எரிவாயுவை பெறுவதென்பது உக்ரைனின் வரவு செலவுத் திட்டத்தைப் போன்றதென்றார்.

யனுகோவிச் கடந்த பெப்ரவரி மாதம் ஆட்சிக்கு வந்தார். 2010ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்துக்கென 12 பில்லியன் அமெரிக்க டொலரை சர்வதேச நாணயத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும் பிரதமர் யனுகோவிச் எதிர்பார்க்கின்றார்.

உக்ரைன் பாராளுமன்றத்தின் இந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்துக்குள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே நின்று வன்முறைகளில் ஈடுபட்டனர். கூழ் முட்டைகள், பெற்றோல் குண்டுகளை பாராளுமன்றத்துக்குள் எரிந்தனர்.

பாராளுமன்றம் எங்கும் புகை மண்டலமாகவும் கூழ் முட்டையாகவும் காணப்பட்டது. சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி பெருந்தொகையான கூழ் முட்டைகள் எரியப்பட்டன. இதனால் குடையைப் பிடித்தவாறு சபாநாயகர் ஆசனத்தை நோக்கி வந்தார். உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சி வேட்பாளருமான டைமோ கொன்கோ கூறுகையில், உக்ரைன் கறுப்புக் பக்கத்துக்குச் சென்றுவிட்டது.

இது எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய அவமானம் எனத் தெரிவித்தார். எதிர்க்கட்சியை பொறுத்தவரை 2017ம் ஆண்டுவரைக்கும். இக்கால எல்லை நீடிக்கப்படுவதையே விரும்புகின்றனர். உக்ரைன் கொடிகளை எரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்தை மிக மோசமாக விமர்சித்தனர். படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டதுடன் அரசாங்கம் விழிப்பாக இருந்தது.