திங்கள், 26 ஏப்ரல், 2010

பிரிட்டன் ஈரானுக்கு 650 மில்லியன் டாலர் திருப்பியளிக்க நீதிமன்றம் உத்தரவு

திஹேக்:1970களில் ஆயுத உடன்பாட்டில் நஷ்டஈடாக பிரிட்டன் 650 மில்லியன் டாலர் ஈரானுக்கு திருப்பியளிக்க வேண்டும் என தி ஹேக் நகரின் மத்தியஸ்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை உறுதிச் செய்த பிரிட்டன் அரசு நஷ்டஈட்டுத் தொகையை உடனடியாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. 1971 முதல் 1976 வரையிலான காலக்கட்டத்தில் ஈரானின் சர்வாதிகாரி ஷா பஹ்லவியின் அரசு 1500 போர் டாங்கிகளும், 250 ராணுவ வாகனங்களும் வாங்குவதற்கு பிரிட்டனுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

ஆனால், பின்னர் இஸ்லாமிய புரட்சியின் காரணமாக ஈரானில் ஆட்சியில் அமர்ந்த புதிய அரசு அவ்வொப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டு கொடுத்த பணத்தை திருப்பித்தர வேண்டும் எனவும் கோரியது.

இதனைத் தொடர்ந்த வழக்கில்தான் ஹேக் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு. 400 கோடி பவுண்ட் பிரிட்டீஷ் அரசு ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உடனடியாக திருப்பியளிக்கும் என்று இண்டிபெண்டண்ட் இதழ் கூறுகிறது.

கடலுக்கடியில் கேபிளில் பழுது- இண்டர்நெட் சேவைகள் பாதிப்பு

தென்கிழக்கு ஆசிய நாடுகளை இந்தியா வழியாக ஐரோப்பாவுடன் இணைக்கும் கடலுக்கடியிலான இண்டர்நெட் கேபிளில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளில் இண்டர்நெட் சேவைகளில் ஒரு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கேபிள் சேவையை பாரதி ஏர்டெல், டாடா கம்யூனிகேசன் உள்பட 16 சர்வதேச தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணைந்த அமைப்பு நடத்தி வருகிறது.

இத்தாலி அருகே கடலுக்கடியில் இந்த கேபிளில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணிகள் நடக்கவுள்ளதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளி்ல் இண்டர்நெட் சேவைகள் மேலும் பாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்த கடலடி இண்டர்நெட் கேபிளுக்கு சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு நாடுகள், செளதி அரேபியா, இத்தாலி, துனீசியா, அல்ஜீரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் டெர்மினல் ஸ்டேசன்கள் எனப்படும் மையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈராக் முன்னாள் துணை அதிபர் கைது

ஈராக்கின் முன்னாள் துணை அதிபர் இஸ்ஸத் இப்ராகிம் அல்-தெளரி கைது செய்யப்பட்டுள்ளார்.தூக்கிலிட்டு கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் ஹூசேனின் உறவினரான இஸ்ஸத் இப்ராகிம், பாத் கட்சியின் துணைத் தலைவராகவும், நாட்டின் புரட்சிகரப் படை கவுன்சிலின் தலைவராகவும் இருந்தவர்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளால் சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது முதல் இவர் தலைமறைவாக இருந்தார். இவரை உயிரோடு அல்லது பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு பல மில்லியன் டாலர் பரிசை அறிவித்திருந்தது அமெரிக்கா.

இந்நிலையில் ஈராக்கின் வட கிழக்கு மாகாணத்தின் தலைநகரான தியாலாவில் உள்ள ஹம்ரின் மலைப்பகுதியில் ஒரு குகைக்குள் பதுங்கியிருந்த போது இவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவருடன் அவரது ஆதரவாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க கோரிக்கையை ஏற்று சதாம் ஹூசேனின் மூத்த மகள் ரகத் ஹூசேனை தேடப்படுவோர் பட்டியலில் இன்டர்போல் சேர்த்துள்ளது. இதையடுத்து இப்போது ஜோர்டானில் உள்ள அவர் விரைவில் நாடு கடத்தப்பட்டு ஈராக் போலீசாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஈராக் தீவிரவாதிகளுக்கு ரகத் ஆதரவு அளித்து வருவதாக அமெரிக்க ஆக்கிரமிப்புக் கூட்டுப் படையினரும் ஈராக்கிய போலீசாரும் குற்றம் சாட்டியதையடுத்து இன்டர்போல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஜோர்டான் மன்னரின் ஆதரவுடன் சதாம் ஹூசேனின் குடுமபம் அங்கு அடைக்கலம் அடைந்து வாழ்ந்து வருகிறது

அமெரிக்காவின் மிஸிஸிபி மாகாணத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 10 பேர் பலி

அமெரிக்காவின் மிஸிஸிபி மாகாணத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி 10 பேர் பலியானார்கள்.உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வீடுகள், வர்த்தக நிறுவனங்களின் மேற் கூரைகள் பிய்த்து எறியப்பட்டன. கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. மரங்கள் அடியோடு பெயர்த்து எறியப்பட்டதால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாக்டாவ் என்ற பகுதியில் 5 பேரும், யாஸூ நகரில் 4 பேரும், ஹோம்ஸ் பகுதியில் ஒருவரும் சூறாவளிக்கு உயிரிழந்தனர்.

சூறாவளிக்கு யாஸூ நகர் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மிஸிஸிபி மாகாணத்தில் 15 நகரங்கள் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

எகிப்தில் அடுத்த வருடம் தேர்தல் ;

அவசர காலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது
ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் திட்டவட்டமாகத் தெரிவிப்பு

எகிப்தில் 2010ம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என அந்நாட்டின் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தெரிவித்தார். விசேட வைபவ மொன்றில் சென்ற சனிக்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் இதனை தெரிவித்தார்.
விசேட வைபவமொன்றில் சென்ற சனிக்கிழமை உரையாற்றிய ஜனாதிபதி ஹொப்னி முபாரக் 2011ம் ஆண்டு தேர்தல் இடம் பெறும் வெளிநாடுகளின் தலை யீடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது. எதிர்க்கட்சிகள் கூறுவதைப் போல அரசியமைப்பு மாற்றம் செய்யப்பட மாட்டாதென தெரிவித்தார்.
1981ம் ஆண்டிலிருந்து எகிப்தின் ஜனா திபதியாக ஹொஸ்னி முபாரக் பதவி வகிக்கின்றார். 82 வயதான இவர் அண்மையில் பிரிட்டன் சென்று சிகிச்சை பெற்று வந்தார். எனினும் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள தேர்தலில் போட்டி யிடும் நோக்கம் ஹொஸ்னி முபா ரக்கிற்குண்டென்பது அவரின் பேச்சிலிருந்து தெளிவாகியது.
இது வரைக்கும் உதவி ஜனாதிபதி ஒரு வரை ஹொஸ்னி முபாரக் நியமிக்கவில்லை. 2005 ஆம் அண்டு இவரது மகன் உதவி ஜனாதி பதியாக நியமிக்கப்படுவாரெனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இவர் மீண்டும் போட்டியிட விரும் புவதையே இந்நடவடிக்கை காட்டு வதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எகிப்தின் சினாய் பகுதியிலிருந்து இஸ்ரேல் இரா ணுவம் வெளியேறிய 28 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய் யப்பட்ட வைபவத்திலே ஹொஸ்னி முபாரக் உரையாற்றினார். அவசர காலச் சட்டத்தையும் நீக்க முடியா தென ஹொஸ்னி முபாரக் தனதுரை யில் குறிப்பிட்டார்.
அரசிய லமை ப்பை மாற்றி அவசர காலச் சட்ட த்தை நீக்கினால் மாத்திரமே தேர்த லில் போட்டியிடலாம் என எதிர்க் கட்சிகள் அடம்பிடிக்கின்றன. எகிப் தின் தற்போதைய அவசர காலச் சட்டம் 1981ம் ஆண்டு அமுலுக்கு வந்தது எகிப்தின் அப்போதைய ஜனாதிபதி அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்ட பின் இச்சட்டம் அமுலாக்கப்பட்டது. இஸ்ரேலுடன் இரண்டு வருட சமாதான ஒப்பந்தம் செய்யப் பட்டதால் அன்வர் சதாத் படு கொலை செய்யப்பட்டார்