திங்கள், 26 ஏப்ரல், 2010

பிரிட்டன் ஈரானுக்கு 650 மில்லியன் டாலர் திருப்பியளிக்க நீதிமன்றம் உத்தரவு

திஹேக்:1970களில் ஆயுத உடன்பாட்டில் நஷ்டஈடாக பிரிட்டன் 650 மில்லியன் டாலர் ஈரானுக்கு திருப்பியளிக்க வேண்டும் என தி ஹேக் நகரின் மத்தியஸ்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை உறுதிச் செய்த பிரிட்டன் அரசு நஷ்டஈட்டுத் தொகையை உடனடியாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. 1971 முதல் 1976 வரையிலான காலக்கட்டத்தில் ஈரானின் சர்வாதிகாரி ஷா பஹ்லவியின் அரசு 1500 போர் டாங்கிகளும், 250 ராணுவ வாகனங்களும் வாங்குவதற்கு பிரிட்டனுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

ஆனால், பின்னர் இஸ்லாமிய புரட்சியின் காரணமாக ஈரானில் ஆட்சியில் அமர்ந்த புதிய அரசு அவ்வொப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டு கொடுத்த பணத்தை திருப்பித்தர வேண்டும் எனவும் கோரியது.

இதனைத் தொடர்ந்த வழக்கில்தான் ஹேக் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு. 400 கோடி பவுண்ட் பிரிட்டீஷ் அரசு ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உடனடியாக திருப்பியளிக்கும் என்று இண்டிபெண்டண்ட் இதழ் கூறுகிறது.

கருத்துகள் இல்லை: