திங்கள், 26 ஏப்ரல், 2010

ஈராக் முன்னாள் துணை அதிபர் கைது

ஈராக்கின் முன்னாள் துணை அதிபர் இஸ்ஸத் இப்ராகிம் அல்-தெளரி கைது செய்யப்பட்டுள்ளார்.தூக்கிலிட்டு கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் ஹூசேனின் உறவினரான இஸ்ஸத் இப்ராகிம், பாத் கட்சியின் துணைத் தலைவராகவும், நாட்டின் புரட்சிகரப் படை கவுன்சிலின் தலைவராகவும் இருந்தவர்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளால் சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது முதல் இவர் தலைமறைவாக இருந்தார். இவரை உயிரோடு அல்லது பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு பல மில்லியன் டாலர் பரிசை அறிவித்திருந்தது அமெரிக்கா.

இந்நிலையில் ஈராக்கின் வட கிழக்கு மாகாணத்தின் தலைநகரான தியாலாவில் உள்ள ஹம்ரின் மலைப்பகுதியில் ஒரு குகைக்குள் பதுங்கியிருந்த போது இவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவருடன் அவரது ஆதரவாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க கோரிக்கையை ஏற்று சதாம் ஹூசேனின் மூத்த மகள் ரகத் ஹூசேனை தேடப்படுவோர் பட்டியலில் இன்டர்போல் சேர்த்துள்ளது. இதையடுத்து இப்போது ஜோர்டானில் உள்ள அவர் விரைவில் நாடு கடத்தப்பட்டு ஈராக் போலீசாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஈராக் தீவிரவாதிகளுக்கு ரகத் ஆதரவு அளித்து வருவதாக அமெரிக்க ஆக்கிரமிப்புக் கூட்டுப் படையினரும் ஈராக்கிய போலீசாரும் குற்றம் சாட்டியதையடுத்து இன்டர்போல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஜோர்டான் மன்னரின் ஆதரவுடன் சதாம் ஹூசேனின் குடுமபம் அங்கு அடைக்கலம் அடைந்து வாழ்ந்து வருகிறது

கருத்துகள் இல்லை: