வியாழன், 24 பிப்ரவரி, 2011

விக்கிலீக்ஸ்:கத்தாஃபியின் ஊழல்கள்

லிபியா நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி மற்றும் அவரது குடும்ப அங்கத்தினரின் ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் ஆகியன வெளிவரத் துவங்கியுள்ளன.

அதிகாரத்தைக் கைப்பற்ற கத்தாஃபியின் பிள்ளைகளுக்கிடையே நடைபெறும் போட்டிகளையும், ஊழலையும் விக்கிலீக்ஸ் நேற்று முன்தினம் வெளியிட்டது.

புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவும் - அஹ்மத் நஜாத்


டெஹ்ரான்,பிப்.24:மேற்காசியாவிலும், வட ஆப்பிரிக்காவிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் உருவான மக்கள் புரட்சி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் பரவு காலம் வெகுதூரத்தில் இல்லை என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்.


நாட்டு மக்களை அடக்கி ஒடுக்குவதில் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பிரசித்திப் பெற்றவையாகும். அமெரிக்கா ஆதரவு பெற்ற அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கெதிராகத்தான் தற்போதைய எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

1979-ஆம் ஆண்டில் ஈரானில் அமெரிக்க ஆதரவுப் பெற்ற மன்னர் ஆட்சியை மண்ணைக் கவ்வச் செய்த புரட்சியைத்தான் இன்றைய புரட்சியாளர்கள் முன்மாதிரியாக காண்கிறார்கள் என அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார்

யெமனில் ஏழு எம்.பிக்கள் அதிபரின் கட்சியை விட்டு விலகினர்


யெமன் நாட்டின் ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக மக்கள் எழுச்சி கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் கட்சியிலிருந்து ராஜினாமாச் செய்துள்ளனர். இத்துடன் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் கட்சியிலிருந்து விலகும் எம்.பிக்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

புதன், 16 பிப்ரவரி, 2011

மத்திய கிழக்கில் ஒரு பார்வை


1.துனிசியா: பின் அலி ஆட்சி அகற்றம். ஊர் அடங்கு உத்தரவு நீக்கம். அவசரகால சட்டம் நடைமுறையில். மக்கள் போராட்டத்தை தடுக்க தேசிய கவுன்சில் அமைக்கத் திட்டம். நகரங்களில் ஆளுநர்கள் மாற்றம் மற்றும் வதந்திகளை கிளப்பி குழப்பம் உண்டாக்கும் நபர்களை கைது செய்ய அல்லது சுடுவதற்கு அனுமதி.

வியாழன், 10 பிப்ரவரி, 2011

மிரட்டும் சுலைமான், அடம் பிடிக்கும் முபாரக், அசராத மக்கள்


கெய்ரோ,பிப்:எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் நடத்திவரும் எழுச்சிமிகு போராட்டம் 16-வது நாளை தாண்டிவிட்டது. ஆனால், பதவியை விட்டு விலகாமல் அடம்பிடித்து வருகிறார் ஹுஸ்னி முபாரக். எகிப்தின் முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் முபாரக் பதவி விலகியே தீரவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

எகிப்தின் மக்கள் திரள் போராட்டத்திற்கு துருக்கி, ஈரான் ஆதரவு, கவலையில் இஸ்ரேல்

அங்காரா,பிப்.2:எகிப்தின் மண்ணில் புயலாக வீசும் மக்கள் திரள் போராட்டத்தினால் முப்பது ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த ஹுஸ்னி முபாரம் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

முபாரக்கை ஆட்சியை விட்டு அகற்றியே தீருவோம் என்ற உறுதியுடன் தஹ்ரீர் சதுக்கத்தில் பெருந்திரளாக கூடியிருக்கும் லட்சக்கணக்கான எகிப்திய மக்களுக்கு துருக்கியும், ஈரானும் ஆதரவளித்துள்ளன.

எகிப்து நாட்டில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான மக்கள் போராட்டம் துவங்கி ஒருவாரம் கழிந்தபிறகும் மெளனம் சாதித்து வந்த துருக்கி பிரதமர் ரஜன் தய்யிப் உருதுகான் தற்போது எகிப்திய மக்களுக்கு தனது பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பும் நிலைப்பெற வேண்டுமானால் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் நடத்திய உரையில் அவர் தெரிவித்தார்.

எகிப்திற்கு நன்மையை ஏற்படுத்தும் காரியங்களை செய்யுங்கள். மக்களை திருப்தி படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என முபாரக்கிடம் உருதுகான் தெரிவித்துள்ளார்.

எகிப்து சுமூகமான சூழலுக்கு மாறினால் தான் கெய்ரோவுக்குச் செல்லப்போவதாக அவர் அறிவித்துள்ளார். அதேவேளையில், போராட்டம் அமைதியான வழியில் நடத்த வேண்டுமெனவும், நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் எகிப்து நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எகிப்திலும், துருக்கியிலும் விரைவில் சீர்திருத்தம் வரவேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அத்துடன் அமைதியும், பாதுகாப்பும் தேவை. ஜனநாயக்த்திற்கான போராட்டங்களுக்கு துருக்கி என்றுமே ஆதரிக்கும் என உருதுகான் அறிவித்தார்.

எகிப்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு ஈரானும் தனது பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளது. உலகில் சுதந்திரத்திற்காக போராடக் கூடியவர்களுடன் நாங்கள் இருப்போம். மகத்தான நாடான எகிப்தில் புரட்சிக்கு நாங்கள் எங்களுடைய ஆதரவை பிரகடனப்படுத்துகிறோம் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸாலிஹி தெரிவித்துள்ளார்.

எகிப்தின் புரட்சி இஸ்லாமிய மேற்காசியா உருவாக உதவும் என நம்புவதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில் அரபுலகத்தை அதிரவைத்துள்ள போராட்டத்தில் அமெரிக்கா தலையிடுவதாக ஸாலிஹி குற்றஞ்சாட்டினார்.

பிராந்தியத்தில் மாற்றம் தேவை. மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சி கவிழவேண்டும். மேற்கத்திய சக்திகளின் கட்டுப்பாட்டிலுள்ள அரசுகள் கவிழ்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நிரூபிக்கின்றனர் துனீசியா மற்றும் எகிப்து நாட்டு மக்கள் என ஸாலிஹி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் எகிப்தில் ஈரானில் ஏற்பட்ட புரட்சிபோல நிகழ்ந்துவிடுமோ என்ற கவலையில் இஸ்ரேல் உள்ளது. அராஜகங்கள் நிறைந்த சூழலில் ஒரு கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய சக்திக்கு நாட்டின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர இயலும். ஈரானில் அதுதான் நடந்தது. மற்ற சில இடங்களிலும் அதுதான் சம்பவித்தது என நேற்று முன்தினம் ஜெர்மனி சான்ஸ்லர் ஆஞ்சலா மெர்க்கலுடன் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

தங்களின் உற்றத் தோழனான முபாரக் தனிமைப்படுத்தப்படுவதை இஸ்ரேல் கவலையுடன் பார்க்கிறது.முபாரக்கிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காதீர்கள் என இஸ்ரேல் அமெரிக்காவுடனும், மேற்கத்திய நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கு அழுத்தம் கொடுக்க பல்வேறு நாடுகளில் செயல்படும் தங்களது தூதரக பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது இஸ்ரேல்.

சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் மீது பிரயோகிக்க அந்நாட்டு அதிபர் ஹுஸ்னி முபாரக்கிற்கு ஆயுதங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுதங்களுடன் இஸ்ரேலிருந்து புறப்பட்ட விமானம் கெய்ரோ சர்வதேச விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை வந்துள்ளதாக இண்டர்நேசனல் நெட்வர்க் ஃபார் ரைட் அண்ட் டெவல்ப்மெண்டை மேற்கோள்காட்டி பிரஸ் டி.வி தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் தடைச் செய்யப்பட்டுள்ள வாயுக்கள் அடங்கிய ஆயுதங்கள் எகிப்திற்கு வந்துள்ளன. போராட்டத்தை தணியச்செய்ய முபாரக் நடத்திய முயற்சிகளை மக்கள் புறக்கணித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
எகிப்தின் சினாய் தீவில் பன்னாட்டு படையினருக்கும், கண்காணிப்பாளர்களுக்கும் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அமெரிக்க விமானப்படை ரெஜிமண்ட் அந்நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து-இஸ்ரேல் ஒப்பந்தத்தில் நிபந்தனைகள் பேணப்படுகிறதா? என்பதை உறுதிச் செய்வதற்கான சர்வதேச அமைதிப்படைதான் எம்.எஃப்.ஒ.

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான எகிப்து நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் நிலைமை மக்கள் திரள் போராட்டத்தைத் தொடர்ந்து மோசமாக உள்ளது. இச்சூழலில்தான் அமெரிக்காவின் விமானப்படை யூனிட் எகிப்திற்கு செல்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது