வியாழன், 20 ஆகஸ்ட், 2009

ஒரே அடிப்படை இஸ்லாமிய சக்தி - ஈரான்

ஈரான் நாடாளுமன்றத்தின் விசேட குழுவினரைஇ கடந்த 18ம் திகதி செவ்வாயன்று லெபனானில் வைத்துஇ அந்நாட்டு ஷீஆக்களின் வழிகாட்டி மர்ஜஃ அல்லாமா 'பழ்ளுல்லாஹ்' அவர்கள் சந்தித்துப் பேசினார்.


இச்சந்தின்போது மத்திய கிழக்கு சமதானம் தொடர்பான அமேரிக்காவின் அரசியல் திட்டங்கள் மற்றும் சியோனிஸ அரசியல் நடவடிக்கைகளில் பலஸ்தீனர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்டார்.


பலஸ்தீன விவகாரத்தில் ஈரான் வழங்கிவரும் தொடருதவிகள் குறித்து நன்றிகூறிய அல்லாமா அவர்கள்இ இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு எதிரான பலஸ்தீன ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையில் இஸ்லாமிய போராட்டக் குழுக்களுக்கு தொடர்ந்தும் உதவுமாறு வேண்டிக்கொண்டார்.


ஈரான் இஸ்லாமியக் குடியரசுஇ சியோனிஸத்திற்கு எதிரான அனைத்து இஸ்லாமியப் போராட்டக் குழுக்களுக்கும் உதவி வருகின்றது. இதுவே மத்திய கிழக்கில்இ மேற்கத்திய மேலாதிக்கங்களுக்கு எதிரான ஒரே அடிப்படை இஸ்லாமிய சக்தியுமாகும் என அவர் குறிப்பிட்டார்.


தற்போது ஈரான்இ தனது இஸ்லாமிய குடியரசு என்ற அந்தஸ்தையும்இ பலத்தையும் கொண்டு தன்னை கட்டியெழுப்பும் முயற்சியில் இறங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில்இ குறிப்பிட்ட விடயங்களில் நேரடியாக அமேரிக்காவுடன் கருத்தியல்சார்ந்த அறிபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.


இக்கலந்துரையாடல்களின் போது ஐக்கிய இராச்சியங்களுக்கு முன்னுரிமை வழங்காதுஇ உம்மத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டதாக இக்கலந்துரையாடல்கள் அமைய வேண்டும் என அவர் வேண்டிக்கொண்டார்.

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஈரானில் ஜனாதிபதித் தேர்தலில் மஹ்மூத் அஹ்மத் நெஜாதி மீண்டும்

அஸீஸ் நிஸாருத்தீன்


ஈரானில் ஜனாதிபதித் தேர்தலில் மஹ்மூத் அஹ்மத் நெஜாதி மீண்டும் தெரிவானதைத் தொடர்ந்து அந்நாட்டில் இடம் பெற்றுவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், வன்முறைகளும் உலகையே ஈரானின் பக்கம் திசைதிருப்பி இருக்கின்றன.

மீண்டும் ஜனாதிபதியாக தெரிவான அஹ்மத் நெஜாதி கடந்த காலங்களில் வந்த ஜனாதிபதிகளுள் மிகவும் பிரசித்தமானவர் அதிகம் பேசப்பட்டவர். அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் எதேச்சதிகார அக்கிரமங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக்கொண்டவர் எல்லாவற்றையும் விட எளிமையான அவரது வாழ்வும் பலரை அவர் பக்கம் ஈர்திருக்கின்றது.

ஈரான் ஜனாதிபதித் தேர்த்தலுக்கான பிரசார பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது எனக்கு ஈரானில் இருக்க சந்தர்ப்பம் கிடைத்தது.தேர்தல் ஒன்றின் போது இலங்கையில் நாம் காணும் சண்டைகள் சச்சரவுகள் ஒன்றையும் அங்கு எனக்கு காணக்கிடைக்கவில்லை. தேர்தல் காலங்களில் ஒருவரை ஒருவர் கடித்துக் குதறிக் கொள்ளும் எமது கலாசாரம் அங்கு இல்லவே இல்லை. இஸ்லாத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் தனது தாய் நாட்டின் மீதும் பற்றுக்கொண்டவர்களாய் ஈரானியர்கள் இருப்பது இதற்கு ஒரே காரணமாகும். அப்படியென்றால் இப்பொழுது இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் தோ்தல் மோசடியும், அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களும் அசம்பாவிதங்களும் எப்படி என்று நீங்கள் கேட்கலாம்.

1979ல் உருவான இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னரான ஈரானின் 10 வது ஜனாதிபதித் தேர்தலே கடந்த 12ம் திகதி இடம்பெற்றது.
இதில் நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஏற்கனவே ஜனாதிபதியாக இருந்த முஹ்மூத் அஹ்மத் நெஜாதி, மிர்ஹுஸைன் மூஸவி, மஹ்தி கரூபி, ரிழாயி ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தல் பிரசாரங்களின் போது வீதிகளில் சுலோகங்களையும் வேட்பாளர்களின் படங்களையும் சுமந்தவாறு ஒவ்வொரு வேட்பாளர்களினதும் ஆதரவாளர்களும் வீதிகளில் திரண்டு ஊர்வலமாக சென்றனர். சில இடங்களில் ஒரே குழுவாக இரண்டு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் ஒரே இடத்தில் தத்தமது வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து நான் ஆச்சாரியப்பட்டேன்.

ஒரு சில இடங்களில் பாதை ஓரங்களில் பெரிய கூட்டம். யாரின் ஆதரவாளர்கள் என்று பார்த்தால், மஹ்மூத் அஹ்மத் நெஜாதி, மூஸவியினுடைய ஆதரவாளர்கள்! ஒரே குழுவாக நின்று இரண்டு வேட்பாளர்களினதும் பிரசுரங்களை எவ்வித முரண்பாடுகளுமின்றி விநியோகிப்பதை காணக்கூடியதாக இருந்தது.

தெஹ்ரான், இஸ்பஹான் போன்ற பெரிய வர்த்தக நகரங்களில் முக்கிய வேட்பாளர்களான நஜாதி, மூஸவியுடைய ஆதாரவாளர்கள் இப்படி முரண்பட்டுக்கொள்ளாமல் தமது பிரசாரப்பணியை மேற்கொள்வதைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன். ஆனால் ஆங்காங்கே சில சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஈரான் இஸ்லாத்தை தனது இலட்சியமாக கொண்ட நாடு. தனது நாட்டின் பெயரைக் கூட ஈரானிய இஸ்லாமிய குடியரசு என அது முத்திரை குத்திக்கொணடுள்ளது. உலகிலே இஸ்லாத்தை தனது பெயரோடு இணைத்துக் கொண்ட எந்த ஒரு நாட்டையும் நாம் எங்கும் காண முடியாது. இறையில்லமான புனித கஃபாவை சுமந்துள்ள சஊதி அரசு கூட தனது பெயரோடு இஸ்லாத்தை இதுவரை இணைத்துக்கொள்ளவில்லை.

அஹ்மத் நெஜாதியோடு போட்டியிடும் மிர்ஹுஸைன் மூஸவி மறுசீரமைப்பாளராக தன்னை பிரகடனப்படுத்தி இந்த தேர்தலில் குதித்திருந்தார். மூஸவி ஈரானை சீர்திருத்தம் செய்யப்போகும் வேட்பாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அமெரிக்க ஆதரவாளரான மன்னர் ஷாவினால் சீர்குலைக்கப்பட்டிருந்த ஈரானை சீர்திருத்தியதே இஸ்லாம்தான். அப்படியிருக்கையில் இஸ்லாமிய ஈரானை சீர்திருத்த மூஸவிக்கு தேவை ஏன் ஏற்பட்டது?

அமெரிக்க ஏகாதிபத்தியம், இன்று விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியில் அதீத வளர்ச்சியைக் கண்டு வரும் ஈரானை ஓரம் கட்டுவதற்காக, அந்த நாட்டை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்துவதற்கான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக பலஸ்தீன் முஸ்லிம்களின் தாயக பூமியைப் பறித்து இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி முழு மத்திய கிழக்கையுமே கபளீகரம் செய்துள்ளது.
அரபு நாடுகளின் வளங்களை சூறையாடுவதை நோக்காக வைத்து இராணுவ நடவடிக்கைகளைக் கூட அது நடாத்தியிருக்கிறது. உலக நீதி நியாயங்களை தலைகுனிய வைத்து மத்திய கிழக்கிற்குள் ஆக்கிரமப்பு நடாத்திய அமெரிக்காவிற்கு மூஸவியின் சீர்திருத்த கொள்கை மிகவும் இனிப்பான விசயமாக மாறியது.

ஈரானின் உள்ளக அரசியலில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்க சந்தர்ப்பமாக இதை அமெரிக்கா பயன்படுத்தி இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாதளவிற்கு ஆதாரங்கள் இப்போது வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

பெரும் வர்த்தக மையங்களாக கருதப்படும் தெஹ்ரான், இஸ்பஹான் போன்ற நகரங்களில் மிகவும் திட்டமிடப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட தோ்தல் உத்திகளை மூஸவி கையாண்டிருந்தார். அவரின் தோ்தல் பிரசார பணிகளைப் பார்க்கும் போது அமெரிக்க ஜனாதிபதித் தோ்தலில் இருந்த பிரசார உத்திகளே எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

வர்த்தக நகரங்களை ஹுஸைன் மூஸவியின் பெரிய பெரிய கட்அவுட்டுகள், சுவரொட்டிகள் ஆக்கிரமித்திருந்தன. வாகனங்களில் கோஷமிட்டு செல்லும் ஆதரவாளர்களில் வர்த்தக உயர்மட்டக் குடிகளின் தொகை சற்று அதிகமாகவே இருந்த போதும், நகர்ப்புறமில்லாத ஏனைய பகுதிகளில் அஹ்மத் நெஜாதிக்கு ஆதரவு பலமாக இருந்ததை என்னால் உணர முடிந்தது.

இஸ்லாமிய ஈரானை சீர்திருத்தப்போவதாக பிரகடனப்படுத்திக் கொண்ட மூஸவிக்கு ஆதரவாக பிரதான நகரங்களில் உள்ள உயர் மட்டக்குடிகளும், வர்த்தக சமூகமும், பணக்காரர்களும் மேற்கத்தேய சிந்தனையின் தாக்கத்திற்கு உட்பட்டவர்களும் அணிதிரண்டு இருப்பதை அவதானிக்க முடிந்தது.

நெஜாத்தியின் பிரசார நடவடிக்கைகள் ஆரவாரம் எதுவுமில்லாமல் அரங்கேரியது. போட்டோ கொப்பி முறையில் பெறப்பட்ட நஜாத்தியின் புகைப்படங்களை அநேக இடங்களில் ஆதராளர்கள் சுமந்து செல்வதைக் காணக் கூடியதாக இருந்தது.

இஸ்லாமிய சட்ட விதிகள் அமுலாகும் ஈரானில், மத, கலாசார ரீதியிலான கட்டுப்பாடுகள், மறுசீரமைப்பாளர் மூஸவியின் வெற்றியின் பின்பு தளர்த்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு வர்த்தக சமூகத்திடமும் ஒருசில பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடமும், ஏனைய மேற்கின் ஆதரவாளர்களிடமும் இருந்தது. நகர்ப்புற பகுதிகளில் மூஸவிக்கு பலத்த ஆதரவு இருப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். நகர்ப்புறமல்லாத பகுதிகளில் அஹ்மத் நெஜாதிக்கு ஆதரவு பலமாக இருந்தது.

ஈரானின் ஆன்மீக தலைமைத்துவ கட்டமைப்பு மிகவும் பலமானது. ஆரசியல் யாப்பு கூட அந்த தலைமைத்துவ கட்டமைப்பின் ஊடே பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆன்மீகத்தையும் அரசியலையும் ஒன்றாக இணைத்தே ஈரானிய அரசு உதயமாகி இருக்கிறது.
துற்போதைய ஆன்மீகத்தலைவர் செய்யத் அலி காமனெயி அவர்களுக்கு அந்நாட்டு மக்கள் ஜனாதிபதியைவிட அதிக கௌரவம் வழங்குகின்றனர். அவரின் உரையை கேட்கும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது. சுமார 15 இலட்சம் ஈரானியர்கள் கூடிய அந்த நிகழ்விற்கு ஜனாதிபதி வேற்பாளர்களான இந்த நால்வரும் வருகை தந்திருந்தனர். நான்கு வேட்பாளர்களும், அமைச்சர்களும் ஆன்மீக தலைவரின் உரையை மக்களோடு மக்களாக சேர்ந்து தரையில் உட்கார்ந்து கேட்க தலைவர் செய்யத் அலி காமனெயி மேடையில் வீற்றிருந்து உரையாற்றினார்.

மக்களையும், ஜனாதிபதி வேட்பாளர்களையும் விழித்துப் பேசிய தலைவர், வேட்பாளர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளில் இடைவெளியால் நாட்டை துவம்சம் செய்ய காத்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டு எதிரிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்ற கருத்தில் உரையாற்றினார்.

தேர்தல் பிரசாரங்களுக்குள் மறைந்திருந்த அந்த வெளிநாட்டு நாசகார சக்தியை தேர்தல் முடிவுற்ற மறநாள் உலகமே கண்டு வியப்பில் ஆழ்ந்தது. ஆந்த வியப்பை அந்த நாசகார சக்திகளின் கைப்பொம்மைகளாக இயக்கும் மேற்கத்தேய ஊடகங்கள் உலகுக்கு பறைசாற்றின.

தேர்தல் வன்முறைகளை கண்டு தான் அதிர்ந்து போனதாய் சொல்லும் தேஹ்ரான் பீ.பீ.ஸி நிருபர்

“ஈரானில் இஸ்லாமிய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. இந்த நாட்டில் அரசுக்கு எதிராக இப்படியொரு எதிர்ப்பு நடவடிக்கை ஒரு நூறு வருடங்களுக்கு பின்பு கூட நடக்குமா என்று நான் நினைதத்திருந்தேன். அது இப்போது நடக்கிறது. இன்று நடக்கிறது.”

என்று நீண்ட நாள் தன் மனதுக்குள் புதைந்து கிடந்த தனது அவாவையும் வெளிப்படுத்தினார்

இது மறுசீரமைப்பு என்ற போர்வையில் திணிக்கப்பட்ட வெளிநாட்டு சதி என்பதை என்னால் விளங்கிக்கொள்ள கஷ்டமாக இருக்கவில்லை.

இலங்கையிலிருந்து என்னோடு உடன் சென்ற நண்பர் முனவ்வரிடம், மூஸவியின் விளம்பர உக்திகளையும் பிரசார நடவடிக்கைகளையும் பார்த்த உடன் மூஸவியின் பிரச்சாரத்திற்கு பின்னால் உள்ள வெளிநாட்டுச்சக்தி அவர் தோற்றாலும் ஈரானை சும்மா விடாது என்று நான் கூறினேன். அது நான் இலங்கைக்கு காலடி வைத்து அடுத்த நாள் அரங்கேறியதைக் கண்டும் கொண்டேன்.

ஆமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனம் இரத்தம் சிந்தாமல் பெரிய இராஜ்ஜியங்களையே பூஜ்ஜியமாக மாற்றியிருக்கிறது. ரஷ்யா, யூகொஸ்லோவியா போன்றன இதற்கு இன்றைய வாழும் சான்றுகள். ‘பெரெஸ்ரொய்கா’ மறுசீரமைப்பு என்ற போர்வையில் இரத்தம் சிந்தாமல் தனது எதிரி நாடான சோவியத்தை துண்டு துண்டுகளாக இடித்து தகர்த்த பெருமை அமெரிக்க உளவு நிறுவனத்திற்கு உண்டு.

அமெரிக்க உளவு நிறுவனங்களின் அசிங்கங்களை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய ஜோன் பெர்கின்ஸ், இந்த அமெரிக்க உளவு நிறுவன்ங்களின் செயற்திட்டங்களினால், மனித அவலத்தை தனது தலைவிதியாக அமைத்துக் கொண்ட நாடுகளில் பெயர்களை பட்டியல் போட்டுக் காட்டுகிறார். அந்த உளவு நிறுவனங்களின் சதி இன்று ஈரானிலும் அரங்கேறியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

ஒரு யுத்த அச்சுறுத்தலோடு ஈரானுக்கு பல நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா, ஈரானின் தேர்தலை நன்கு பயன் படுத்தியிருக்கும் சந்தேகம் இப்போது வலுப்பெற்று வருகிறது.

நெஜாதியின் அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டால் நிலை குலைந்து போயுள்ள அமெரிக்கா மூஸவிக்கு பக்க பலமாக இருந்து நெஜாதியை தோற்கடிக்க வகுத்த யூகங்கள் தவிடுபொடியாகி இருக்கின்றன.
நெஜாதியின் தோல்வியை எதிர்பார்த்து காத்திருந்த எதிரிகள். அவரின் வெற்றியை கேள்வியுற்றதும் துடித்துப் போனார்கள்.
நெஜாத்திக்கு கிடைத்த வெற்றி அமெரிக்கா தொடர்பான அவரது வெளியுறவு கொள்கைக்கு அந்த மக்கள் வழங்கிய அங்கீகாரம் என்பதை அமெரிக்காவால் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது.

அமெரிக்க விவகாரத்தில் இலகுவான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய மூஸவிக்கு ஏற்பட்ட தோல்வியை மூடி மறைத்து மூஸவியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அமெரிக்காவிற்கும் மேற்கின் ஊடகங்களுக்கும் இருக்கின்றது. எதிரிகள் மூஸவிக்கு செய்த கைமாறுதான்
தோ்தல் மோசடி பிரசாரமும் தொடர்ந்து வந்த வன்முறைகளும்.

தேர்தலுக்கு பின்னரான எதிர்ப்பு நடிவடிக்கைகள் பி.பி.ஸி நிறுவனம் கூறியது போல் ஒரு நூறு வருடங்களுக்கு பின்னரும் ஈரானில் இப்படி நிகழுமா என்றிருந்த நிகழ்வுகள் இடம்பெற காரணமாயின். இஸ்லாமிய குடியரசு ஒன்றில் இப்படி தேர்தல் மோசடி இடம் பெற்றிருக்கிறது என்று அமெரிக் சார்பு ஊடகங்கள் உலகறிய ஊளையிட்டன.

இஸ்லாமிய அரசு ஒன்றின் கட்டமைப்பை தகர்க்கும் அல்லது அதன் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் ஒரு பிரசாரத்தை இந்த பக்கச்சபார்பு ஊடகங்கள் உலகமெல்லாம் கொண்டு சென்றன.

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மூஸவியின் எதிர்ப்பு நடவடிக்கைகள் மரபு ரீதியாக அந்நாட்டு மக்களிடையே உள்ள தலைமைத்துவ கட்டுப்பாட்டை அதிர வைத்துள்ளது. தலைவரின்; வார்த்தைகளுக்கு கண்ணியமாக செவி சாய்த்து வந்த மக்களின் ஒரு பிரிவினரை இன்று தலைவரின் வார்த்தைகளை துச்சமாக மதித்து அசம்பாவிதங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டை பல கூறுகளாய் பிரிக்கும் அமெரிக்க சதி அச்சொட்டாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஈரானிய மக்களிடம் இருந்த பலமான கட்டுக்கொப்புக்கு சவால் விடப்பட்டிருக்கிறது. ஒருவிதத்தில் இது அமெரிக்காவிற்கு கிடைத்த ஒரு தற்காலிக வெற்றிதான்.

யுத்தம் ஒன்றின் மூலம் ஈரானுக்கு பாடம் புகட்ட இருந்த அமெரிக்காவிற்கு இலகு சந்தர்ப்பத்தை மூஸவி அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

மூஸவி கூறுவது போல் தோ்தல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் வாக்களிக்கும் போது அவை நிச்சயம் வெளிச்சத்திற்கு வந்திருக்க வேண்டும். கள்ள வாக்குகள் அளிக்கப்பட்ட சந்தர்ப்பங்களை மேற்குலக ஊடகங்கள் உலகிற்கே ஊதித் தள்ளியிருக்கும். ஆனால் அதற்கு மாறாக வாக்குகள் எண்ணப்படும் வரை அமைதியாக இருந்துவிட்டு முடிவு வெளியான உடன் தோ்தல் மோசடி இடம் பெற்றதாக கூறி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவதிலிருந்து மூஸவி வேறு ஒரு சக்தியின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படுவதன் இரகசியம் வெளிப்படையாகவே தெரிகிறது. மூஸவி தோ்தலில் வெற்றி பெறுவதை விட எதிர்ப்பு நடவடிக்கைகளால் வேறு விதமான இலாபங்களை எதிரிகளுக்கு பெற்றுக்கொடுக்க முயற்சி செய்வது புலனாகின்றது.



ஈரானைப் பொறுத்தவரை அதன் அரசியல் கட்டமைப்பில் ஜனநாயகத்திற்கான இடப்பாடு விசாலமானது. இஸ்லாமியப் புரட்சிக்கு எதிரான கருத்து உடையவர்கள் கூட அந்த நாட்டில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். மக்களின் தீர்ப்பிற்கே அந்த நாட்டில் முதலிடம் வழங்கப்படுகின்றது.

ஈரான் தோ்தலை வைத்து கிளப்பப்பட்டிருக்கும் இந்த சர்ச்சை மத்திய கிழக்கில் தோ்தல் ஜனநாயகம் தொடர்பான ஒரு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல்களற்ற ஜனநாயமற்ற மன்னர்களின் மகுடங்கள் தொடர்ந்து மிளிர இது காரணமாக வைக்கப்படவும் இடமிருக்கின்றது.

ஏனைய முஸ்லிம் நாடுகளில் இல்லாத சுதந்திரமும் தலைமைத்துவ கட்டுப்பாடும் ஈரானில் இருக்கிறது. அரசின் தலைமைத்துவம் மார்க்க அறிஞர்களின் சபையினால் வழிநடாத்தப்படுகின்றது.

அரபு நாடுகளில் மன்னார்களின் ஆலோசனையின் கீழ் மார்க்க அறிஞர்கள் செயற்படுகின்றார்கள்.

ஈரானில் மார்க்க அறிஞா்களின் வழிகாட்டுதலின் கீழ் அரசு இயங்குகிறது. அமெரிக்காவின் சூறையாடலுக்கான தளமாக ஈரான் மாறாமலிருப்பதற்கு இது முக்கிய காரணம் என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்திருக்கின்றது.

இன்று மூஸவியின் செயற்பாடுகளால் அந்த ஆன்மிக தலைமைத்துவத்திற்கு அடி விழுந்திருப்பதாக அமெரிக்கா மகிழ்ச்சியுறலாம். ஆன்மிக தலைவர் செய்யித் அலி காமெனெயி அவர்கள் ஈரானிய அரச செயல்முறைகளில் வாக்கு மோசடிகளுக்கு இடமே இல்லையென்றும் ஆயிரம், ஐயாயிரம், பத்தாயிரம் வாக்குகளில் மோசடி ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் 10 மில்லியன்களுக்கு அதிகமான வாக்குகள் திருடப்பட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் ஆணித்தரமாக கூறியிருக்கிறார்

எது எப்படியிருப்பினும் ஈரான் தோ்தல், ஈரானைக் கடித்துக் குதற காத்துக் கொண்டிருந்த எதிரிகளின் வாய்களுக்கு அவலையும், ஒற்றுமையின்மையின்மை, சுயநலம் போன்ற பலவீனங்களால் எதிரிகளின் கைகளுக்கு ஆயுதத்தையும் கொடுத்திருக்கிறது.