திங்கள், 3 மே, 2010

யெமனில் கடத்தப்பட்ட இராணுவ வீரர்களை விடுவிக்க அரசாங்கம் 48 மணிநேரக் காலக்கெடு

யெமன் இராணுவத்தினர் இருவரைக் கடத்திச் சென்றுள்ள தென்பகுதி போராளிகள் தங்கள் சகாக்களை விடுவிக்காவிட்டால் படையினரின் உயிருக்குத் தாங்கள் பொறுப்பில்லையென அறிவித்துள்ளனர். விடுமுறையில் சென்றுவிட்டு கடமைக்குத் திரும்பிய இரண்டு படைவீரர்களை யெமன் போராளிகள் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து யெமனின் தென்பகுதியிலுள்ள அமெரிக்கர்களைக் கவனமாக நடமாடுமாறு அமெரிக்கா கேட்டுள்ளது. யெமனிலுள்ள லண்டன் தூதரகத்தினை தாக்குவதற்கு அண்மையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்குள்ள மேற்கு நாட்டுப் பிரஜைகளை அவதானத்துடன் செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கும் மேலதிக பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடத்தப்பட்ட இராணுவ வீரர்களை விடுதலை செய்ய 48 மணி நேரம் காலக்கெடுவை அரசாங்கம் விதித்துள்ளது.

அத்துடன் 48 பேரைத் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்துள்ளது. இவர்கள் அனைவரும் யெமன் தென்பகுதியைச் சேர்ந்த போராளிகளாவர். யெமனின் தென்பகுதியில் 2004ம் ஆண்டு முதல் ஷியா முஸ்லிம்கள் மேலதிக அதிகாரம் வேண்டிப் போராடுகின்றனர்.

இதனால் பல பேர் உயிரிழந்தும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துமுள்ளனர். தற்போது இங்கு அல் கைதா ஊடுருவி தாக்குதல் திட்டங்களை முன்வைக்கிறது

மத்திய கிழக்குப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இஸ்ரேல், எகிப்து தலைவர்கள் சந்திப்பு

இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாறக்கிடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் நேற்று எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் ஆரம்பமானது.

2008ம் ஆண்டு முறிவடைந்த இஸ்ரேல், பலஸ்தீன் பேச்சுவார்த் தைகளை மீண்டும் ஆரம்பிப்பது சம்பந்தமாகப் பேசும்பொருட்டு இத் தலைவர்கள் சந்தித்துக் கொண் டனர். இஸ்ரேல், பாலஸ்தீனர் க் கிடையில் நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளையும் எகிப்தே மத்தியஸ்தராக நின்று நடத்தியது. காஸா இஸ்ரேலிடையே 2008ம் ஆண்டு யுத்தம் ஏற்பட்டதால் இப் பேச்சுக்கள் முறிவடைந்தன.

இதனை மீண்டும் ஆரம்பிப்ப தற் கான சூழலை ஏற்படுத்தவே இத் தலைவர்கள் சந்தித்துக்கொண்டனர். அரபுலீக் இப்பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற் பாடுகளையும் செய்துள்ளதுடன் ஏக மனதாக அங்கீகாரத்தையும் வழங் கியுள்ளது.

பெரும்பாலும் இஸ்ரேல் பலஸ் தீன் பேச்சுவார்த்தைகள் மறை முகமாகவே இடம்பெறவுள்ளன. இம் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காதப்பட்சத்தில் நேரடிப்பேச்சுவார்த்தைக்குச் சந்தர்ப்பமில்லையென அரபுலீக் செயலாளர் அமர்முஸா குறிப் பிட்டார்.

மார்ச் மாதம் இஸ்ரேல் எகிப்து தலைவர்கள் சந்தித்தபோது எடுக்க ப்பட்ட தீர்மானங்களுக்கமையவே தற்போது ஆரம்பமாகவுள்ள பேச்சுக் கள் இடம்பெறவுள்ளன. இதற்கான கால அட்டவணைகளும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளன. மேற்குக் கரையில் இஸ்ரேல் குடியேற்றங் களை நிறுவினால் பேச்சுவார்த்தை யிலிருந்து பலஸ்தீன் விலகிக்கொள் ளலாமென அரபுலீக் அறிவித்தது.

பைதுல்லா மெசூத் ஒளிநாடாவில் தோன்றி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

பாகிஸ்தானில் இயங்கும் தலி பான்களின் தலைவர் பைதுல்லா மெசூத் ஒளிநாடாவில் தோன்றி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார். தலிபான்களின் இணைய தளத்தில் ஒன்பது நிமிடங்கள் இந்த ஒளி நாடா காண்பிக்கப்பட்டது.

ஏப்ரல் 04 ம் திகதி இந்த ஒளி நாடா எடுக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. அமெரிக்க நகரங்கள், நலன்கள், இராணு வங்களைத் தாக்குமாறு தனது சகாக்களுக்கு பைதுல்லா மெசூத் கட்டளையிட்டார். ஆங்கில மொழி யில் இவரது உரை அமைந்திருந்தது. ஹகிமுல்லா மெசூதைக் கொன்ற மைக்காக அமெரிக்கா மீதான தாக்குதல் தொடருமென பைதுல்லா மெசூத் சூளுரைத்தார்.

இத்த னைக்கும் பைதுல்லா மெசூத் ஜனவரி மாதம் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான், அமெரிக்க அரசாங் கங்கள் அறிவித்தன. இவர் வீடி யோவில் தோன்றி உரையாற்றி யதால் பைதுல்லா மெசூத் தொடர் பான உண்மைத் தன்மை தொட ர்ந்தும் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஒளிநாடாவில் முகமூடியணிந்த இருவர் பைதுல்லா மெசூதுக் கருகாமையில் நின்று கொண்டி ருந்தனர். இந்த வீடியோ தொடர் பாக அமெரிக்க, பாகிஸ்தான் அரசுகள் உடனடியாக எதையும் தெரிவிக்கவில்லை.

நான்கு மாதத்தில் சுமார் 52 ஃபலஸ்தீனர்கள் விஷவாயு தாக்குதல் மூலம் கொலை

காஸ்ஸா இந்த வருட துவக்கத்திலிருந்து கடந்த மாதம் இறுதிவரை, நான்கு மாதத்தில் சுமார் 52 ஃபலஸ்தீனர்களை விஷவாயு தாக்குதல் மூலம் கொன்றுள்ளது எகிப்து ராணுவம்.

இஸ்ரேலின் நெருக்கடியில் வாழும் 1.5 மில்லியன் ஃபலஸ்தீனர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதில் இந்த சர்சைக்குரிய காஸ்ஸா சுரங்கங்கள் தான் உதவுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாலஸ்தீன மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை காஸ்ஸா வழியாக கொண்டுவரும் போது, எகிப்து ராணுவத்தால் வேண்டுமென்றே இவர்கள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி அநியாமாக உயிர்களை கொல்வதை எகிப்து ராணுவம் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களின் மேல் விஷவாயு தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களின் மிகப்பெறும் அத்துமீறலாகும் என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு எல்லையான ராபாவையும் எகிப்து அரசு தன் பாதுகாப்பு காரணங்களை கருதி மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது

சோமாலியா மசூதியில் குண்டு வெடிப்பு - 34 பேர் பலி 100க்கும் மேற்பட்டோர் காயம்

கடந்த சனிக்கிழமையன்று(மே2) சோமாலியா தலைநகரம் மொகாதிஷுயில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மசூதி ஒன்றில் சக்திவாய்ந்த 2 குண்டுகள் வெடித்ததில் சுமார் 34 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

வழக்கம் போல, அல் கொய்தா தொடர்பிலுள்ள அல்-ஷபாப் என்ற இயக்கத்தை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகின்றன. இந்த குண்டு வெடிப்பில் காயமடைந்த மூத்த உலமா, ஃபுஆத் முஹம்மத் கல்ஃப் என்பவரை குறிவைத்துதான் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு படைகள் இக்குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளதாக அல் ஷபாப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.அரசு மற்றும் ஆப்ரிக்கா யூனியனின் படைகளுக்கு எதிராக அல் ஷபாப் போராடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று மற்றொரு மசூதியில் குண்டு வெடித்ததில் சுமார் 2 பேர் உயிரிழந்தனர் ஏராளமானோர் காயமடைந்ததனர்.சோமாலியாவில் சமீப காலமாக மசூதிகளில் மட்டும் குண்டு வெடிப்பது தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் இரகசிய சிறைச்சாலை ஒன்றில் சிறை வைக்கப்பட்டிருந்தவர்கள்

பலவிதமான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

உடலில் மின்சாரம் பாய்ச்சப்படுதல், பாலியல் பலாத்காரம் போன்ற சித்ரவதைகளை இவர்கள் தொடர்ந்தும் அனுபவித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிறையில் முன்பு சிறை வைக்கப்பட்டிருந்தவர்களிடம் பிபிசி பேசியபோது, தாங்கள் திட்டமிட்டு வழிமுறை வகுத்து தங்களை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததை உறுதிச் செய்துள்ளனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், இக்கைதிகள் சொன்ன விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
முதானா இரகசிய சித்ரவதைச் சிறை
முதானா விமானதளத்திலிருந்த இந்த இரகசிய சித்ரவதைச் சிறை தற்போது மூடப்பட்டுவிட்டது. ஆனால் இந்த மாத முற்பகுதி வரை இந்த இடத்தில்தான் நானூறுக்கும் மேற்பட்ட கைதிகள் சிறை வைக்கப்பட்டு மிகக் கொடூரமான சித்ரவதைகளை மாதக்கணக்கில் அனுபவித்து வந்திருந்தனர்.

"எங்கள் தலையை பிளாஸ்டிக் பையால் மூடுவதிலிருந்து சித்ரவதைகள் ஆரம்பிக்கும். எங்கள் மேலே தண்ணீரை ஊற்றிவிட்டு பின்னர் உடலில் மின்சாரத்தைப் பாய்ச்சுவார்கள்"என்று இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் கூறுகிறார். தனது அடையாளத்தை வெளியில் சொல்ல அவர் பயப்படுகிறார்.
இவருக்கு நடந்த விஷயங்களும் இந்த இடத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த வேறு நாற்பது பேர் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்சின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ள விஷயங்களும் ஒத்துப் போகின்றன.

இந்நிலையில் ஈராக்கில் இரகசிய சிறைச்சாலைகள் உள்ளன என்பதையும், ஈராக்கின் சிறைகளில் சித்ரவதை பரவலாக நடந்து வருகிறது என்பதையும் ஈராக்கிய அரசாங்கம் முற்றிலுமாக மறுக்கிறது.

ஆனால் முத்தானா இரகசிய சிறைச்சாலையில் சித்ரவதை என்பது 'வழமையாகவும், வழிமுறை வகுக்கப்பட்டும்' நடந்துள்ளதாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறுகிறது.

மேற்குலகத்தவர்கள் பலர் இஸ்லாத்தைக் கற்பதில் ஆர்வமாக உள்ளனர்

சர்வதேச குழு: இயற்கையுடன் தொடர்புடைய பல்வேறு வினாக்களுக்கு விடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழியாக, இஸ்லாத்தைக் கற்றுக் கொள்வதில் தற்போதைய பெரும்பாலான மேற்கத்தைய அறிஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதை நவீன ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாக இஸ்லாமிய கல்வியியலாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

தமது சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழும் வினாக்களுக்கு திருப்திகரமான விடைகளைப் பெற்றுக் கொள்வதில் அவர்களது கொள்கைகளும் கோட்பாடுகளும் தோல்வி கண்டுள்ளமையால், அவர்களிடையே இஸ்லாம் பற்றிய ஆர்வம் அதிகரித்து வருகின்றது என, இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் பணிப்பாளர் முஹம்மத் சித்தீக் தெரிவித்தார்.

இஸ்லாமிய அறிவியலும் கல்வி மறுசீராக்கமும் பற்றிய சர்வதேச கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது, சித்தீக் தொடர்ந்து தெரிவித்ததாவது, மேற்குலகத்தினர், ஆய்வுகளுக்கும் அபிவிருத்திக்கும் பயன்படுத்திய அனைத்து விஞ்ஞானக் கற்கைகளும் பொதுப் பிரயோகத்தில் முழுமையான பயன்பாடற்றவை என்பதை உணர்ந்து கொண்டுள்ளனர்.

குர்ஆனும் பைபிளும் எனும் தலைப்பில் நூலொன்றை எழுதியவரான பிரான்சிய விஞ்ஞானியொருவர், குர்ஆன் மாத்திரமே இயற்கையுடன் தொடர்புடைய அனைத்து விவகாரங்களுக்குமான பதில்களைக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உண்மையில், இதன்காரணமாகவே மேற்குலக விஞ்ஞானிகள் பலர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சித்தீக்கின் தகவலின்படி, இஸ்லாம் மேற்குலகில் மிக வேகமாகப் பரவி வருகின்றது. அமெரிக்காவில், பள்ளிவாயல்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. யதார்த்தத்தை விளங்கிக் கொண்டமையினால் பல அமெரிக்கர்களும் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டு வருகின்றனர்.

அணுபரவல் மாநாட்டில் ஈரான் பங்கேற்பதை தடுக்கும் உரிமை அமெரிக்காவுக்கில்லை

என்கிறது தெஹ்ரான்
செய்தியாளர்களிடம் பேசிய பின் ,அஹமெதி நெஜாத் அமெரிக்கா பயணமானார்

அணு பரவில் தடுப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லும் ஈரான் உயர் மட்டக் குழுவிற்கு விசா மறுக்கப்பட்டதை ஈரான் வெளிநாட்டமைச்சர் மெளனாச்சர் மொடாகி கடுமையாகக் கண்டித்துள்ளார். இவ்விடயத்தில் முடிவெடுக்கும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை.
ஈரானின் ஜனாதிபதி உட்பட எழுபது பிரதிநிதிகளுக்கும் விசா வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். நியூயோர்க்கில் இன்று 03ம் திகதி முதல் 28ம் திகதி வரை அணு பரவல் தடுப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
192 நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன. பேரழிவு ஆயுதங்களை (அணு ஆயுதம்) அழித்தொழித்து உலகில் அமைதியை நிலைப்படுத்தும் நோக்குடன் இம்மாநாடு நடைபெறுகிறது. இதில் ஈரான், கிழக்குத் திமோர் நாடுகள் பங்கேற்க விரும்பியபோதும் இந்நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஈரானிலிருந்து சிறு தொகை அதிகாரிகள் பங்கேற்க விசா வழங்கப்பட்டுள்ளதென அறிவித்துள்ள அமெரிக்க உயரதிகாரியொருவர் இதில் அஹ்மெதி நெஜாதும் உள்ளடக்க ப்பட்டுள்ளாரா எனத் தெரியவில்லை என்றார்.
அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்) எம்.பிக்கள் அஹ்மெதி நெஜாத் அமெரிக்கா வருவதை நிராகரித்துள்ளனர். யுரேனியம் செறிவூட்டல் விடயம் தொடர்பாக மேற்குலக நாடுகளுடன் தொடர்ந்தும் அடம்பிடிக்கின்றது.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைச் சோதனையிட பிரான்ஸ், ரஷ்யாவுக்கு அனுப்ப மறுக்கும் ஈரான் இதை தங்கள் நாட்டுக்குள் வைத்து ஐ. நா. அதிகாரிகள் சோதனையிட முடியுமெனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நியூயோர்க் மாநாட்டில் ஈரானின் உண்மைத்தன்மை சமாதான நோக்கம் என்பவற்றை உலகுக்கு விளக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஈரான் வெளிநாட்டமைச்சர் வலியுறுத்தினார். இந்நிலையில் ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவும், இஸ்ரேலும் பயங்கரவாதச் செயல்களுளிலீடுபடுவதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் நீண்டகாலச் சர்ச்சைக்கு முடிவுகட்ட நியூயோர்க் மாநாட்டில் முடிவு எடுக்கப்படலாமெனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ. நா. வும் ஈரானுக்கெதிராக நான்காவது தடைகளைக் கொண்டு வருவதற்கான இறுதி ஆயத்தங்களைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
பிந்திய தகவலின்படி விசாக் கிடைக்கப்பெற்று நெஜாத் அமெரிக்கா புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.