திங்கள், 3 மே, 2010

நான்கு மாதத்தில் சுமார் 52 ஃபலஸ்தீனர்கள் விஷவாயு தாக்குதல் மூலம் கொலை

காஸ்ஸா இந்த வருட துவக்கத்திலிருந்து கடந்த மாதம் இறுதிவரை, நான்கு மாதத்தில் சுமார் 52 ஃபலஸ்தீனர்களை விஷவாயு தாக்குதல் மூலம் கொன்றுள்ளது எகிப்து ராணுவம்.

இஸ்ரேலின் நெருக்கடியில் வாழும் 1.5 மில்லியன் ஃபலஸ்தீனர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு வருவதில் இந்த சர்சைக்குரிய காஸ்ஸா சுரங்கங்கள் தான் உதவுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாலஸ்தீன மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை காஸ்ஸா வழியாக கொண்டுவரும் போது, எகிப்து ராணுவத்தால் வேண்டுமென்றே இவர்கள் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி அநியாமாக உயிர்களை கொல்வதை எகிப்து ராணுவம் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்களின் மேல் விஷவாயு தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களின் மிகப்பெறும் அத்துமீறலாகும் என்று அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு எல்லையான ராபாவையும் எகிப்து அரசு தன் பாதுகாப்பு காரணங்களை கருதி மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: