வியாழன், 22 ஏப்ரல், 2010

இஸ்ரேல் இராணுவத்தினரை கைது செய்ய ஹமாஸ்

இஸ்ரேல் படை வீரர்களை கைது செய்யவுள்ளதாக அறிவித் துள்ள ஹமாஸின் வெளிநாட்டு அமைப்பாளர் காலித் மெஷால், இவ்வாறு கைது செய்யப்படும் இஸ்ரேல் வீரர்கள் பணயக் கைதிகளாகப் பாவிக்கப்படவுள் ளதாகக் கூறினார். இஸ்ரேல் சிறைகளிலு ள்ள பலஸ்தீனர் களை விடுவிக்க பேரம் பேசும் சக்தி தேவை.

இதற்காக இஸ்ரேல் இராணுவத்தினரைக் கைது செய்ய வேண்டியுள்ள தென்றும் காலித் மெஷால் குறிப்பிட்டார். 2006 ம் ஆண்டு காஸா இஸ்ரேல் யுத்தம் மூண்ட போது ஹமாஸ் அமைப்பினர் கிலாத்சாலிட் என்ற இஸ்ரேல் இராணுவ வீரரை கைது செய்தனர். இவரை விடுதலை செய்ய ஹமாஸ் நிபந்தனை விதித்தது. இஸ்ரேல் சிறைகளிலு ள்ள பலஸ்தீனர்களை விடுதலை செய்யவேண்டுமென ஹமாஸ் கோருகின்றது.

இந் நிலை மத்திய கிழக்கு சமாதான முயற்சி களை வெகுவாகப் பாதித்தது. எகிப்து, ஜேர்மன் என்பன இக் கைதிகள் பரிமாற்ற விடயத்தில் மத்தியஸ்தராகச் செயற்பட்டன. எனினும் எதிர் பார்த்த பலன் கிடைக்கவில்லை. இந் நிலையில் மேலும் பல இஸ்ரேல் வீரர்களைக் கைது செய்ய ஹமாஸ் எண்ணியுள் ளமை நிலைமையை மேலும் மோசமாக்கலாம்.