புதன், 28 ஏப்ரல், 2010

இலங்கை தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு அமைக்கப்படுவதை - தடுக்கும் முயற்சி தீவிரம்!

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் லின் பாஸ்கோ, அடுத்தமாதமளவில் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.நாவின் உயர்மட்ட தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ள போதும், அவர் ஐ.நா அமைக்கவுள்ள இலங்கை தொடர்பான விஷேட நிபுணர் குழு பற்றி ஆராய்வதற்காக இவ்விஜயத்தினை பயன்படுத்தமாட்டார் என தெரிய வருகிறது.

இலங்கையின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அண்மையில் நியூயோர்க்கில், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். இதில், இலங்கை தொடர்பில், நிபுணர் குழுவை அமைக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை ஏப்ரல் 20 ம் திகதி இஸ்ரேலினால் ஐ.நா வில் நடத்தப்பட்ட வரவேற்பு உபசாரத்தின் போது உங்கள் அரசாங்கத்திற்கு எதிராக நான் செயற்படுவதில்லையென பான் கீ மூன், ஐ.நாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹணவுக்கு தெரிவித்ததாக இன்னர்சிற்றி பிறஸ் குறிப்பிட்டிருந்தது.

மேலும், இலங்கை தொடர்பில் நிபுணர் குழு அமைக்கப்படும் என எதிர்பாத்திருக்க வேண்டாமென்று ஐ.நாவில் உள்ள சிரேஷ்ட்ட அதிகாரியொருவர் கூறியதாகவும் இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்திருந்தது.
இந்நிலைமைகளினல் இலங்கை தொடர்பில் ஐ.நாவின் விஷேட நிபுணர் குழு அமைக்கப்படுமா? என்றே சந்தேகம் எழுந்துள்ளது!

கருத்துகள் இல்லை: