
ஹிலாரி கிளிங்டனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா சர்சைக்குரிய விதத்தில் இஸ்ரேலை வாழ்தியதையடுத்து, இஸ்ரேல்-ஃபலஸ்தீனிற்கான அமைதி முயற்சியில் யு.எஸ் மத்தியஸ்தம் செய்வதற்கான தகுதியை இழந்துவிட்டது என்று ஹமாஸ் கூறியுள்ளது.
இதுக்குறித்து ஹமாஸ் செய்தி தொடர்பாளர் சமி அபு ஜுஹ்ரி, ஒபாமாவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல் ஒபாமாவின் இவ்வகையான பேச்சு, இஸ்ரேல் ஃபலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது என்றார். எங்கள் விவகாரத்தில் வாஷிங்டன் ஒரு 'நேர்மையான தரகராக' செயல்பட முடியாது என்றே இது காட்டுகிறது என்று ஜுஹ்ரி குற்றம்சாட்டினார்.
அமெரிக்காவின் இவ்வாழ்த்துச் செய்தி ஒபாமாவின் முயற்சிகளை நம்பும் அனைத்து அரபு நாடுகளுக்கும் ஒரு சிறந்த பாடமாகும் என்று மேலும் தெரிவித்தார். முன்னதாக, ஏப்ரல் 20 அன்று தன் சுதந்திர தினத்தை கொண்டாடும் இஸ்ரேலுக்கு ஒபாமா கூறிய வாழ்த்து செய்தியில் இஸ்ரேல்அமெரிக்க உடனான எங்கள் உறவை யாராலும் பிரித்துவிட முடியாது என்றும் எதிர்காலத்தில் இது மேலும் வலுவடையத்தான் செய்யும்' என்று கூறியிருந்தார். இதுவரை, 700,000திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, தற்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலயே அகதிகளாக தங்க வைக்கப்பட்டுள்ளது உலக வரலாற்றிலயே முதன்முறை என்று கூட கூறலாம்.
Read more...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக