புதன், 5 மே, 2010

ஹமாஸின் மனம் மாறிவிடுமா?



டெல்அவீவ்:மூன்று ஆண்டுகள் காஸ்ஸா மீது விதிக்கப்பட்ட தடையின் மூலம் இஸ்ரேல் சாதித்தது என்ன? காஸ்ஸா மக்களையும் அவர்களுடைய பாதுகாவலர்கள் எனக்கூறப்படும் ஹமாஸையும் பாடம் புகட்ட முடிந்ததா? எதற்காக இந்த கூட்டுத்தண்டனை? தடையின் தற்போதைய நிலை என்ன?

ஹமாஸ் அதிகாரத்தை கைப்பற்றியதை விரும்பாத இஸ்ரேலும், எகிப்தும் காஸ்ஸாவிற்கு ஏற்படுத்திய தடையையும், அதன் பலனையும் குறித்து பி.பி.சிக்கு சில ஆவணங்கள் கிடைத்துள்ளன.

குடிதண்ணீர் உள்ளிட்ட உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பொருட்களை தடைச் செய்த பிறகும் தளராத ஃபலஸ்தீனர்கள் இறுதியில் வெற்றியைப் பெற்றுள்ளார்கள் என பி.பி.சியின் நிரூபர் டிம் ஃப்ராக்ஸ் கூறுகிறார்.

எதற்காக காஸ்ஸாவின் மீதான இத்தகைய தடை? என நீதிமன்றத்தின் கேள்விக்கு, இஸ்ரேல் அளித்த பதில், 'ஹமாஸிற்கு பாடம் புகட்ட' என்பதாகயிருந்தது. தடை ஏற்படுத்துவதால் போராளிகள் எவ்வாறு தங்களது ஆரோக்கியத்தை பேணுவார்கள் என்று பார்ப்போம் என்பது இஸ்ரேலின் நோக்கமாகயிருந்தது.

காஸ்ஸாவிற்குள் நுழைய தடைச்செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை வெளியிட இஸ்ரேலுக்கு துணிச்சலில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் நிர்பந்தம் அதிகமாகும் பொழுது ஒவ்வொரு பொருளின் இறக்குமதியை இஸ்ரேல் அனுமதி வழங்கியது. குடிதண்ணீருக்கான தடையை நீக்கியது இந்த மாதம் பிப்ரவரியிலாகும். துணிகளை அனுமதித்தது மார்ச் மாதம். அலுமினியம், பர்னிச்சர்களுக்கான மரம், சமையலறை பாத்திரங்கள், செருப்புகள் ஆகியவற்றை கடந்த மாதம்தான் இறக்குமதிச் செய்ய இஸ்ரேல் அனுமதியளித்தது.

அதேவேளையில் மல்லிப்பொடி, ஜூஸ் வகைகள், விளையாட்டுப் பொருட்கள், சாக்கலேட், ஜாம், ஆடைகள் ஆகியவற்றிற்கான தடை தற்பொழுதும் தொடருகிறது.

காஸ்ஸா தடையைக் குறித்து விவரமறிய தகவல் அறியும் உரிமைச்சட்டப்படி பணியாற்றும் இஸ்ரேலிய மனித உரிமை அமைப்பான 'கிஸா' தான் இஸ்ரேல் தடைச்செய்த பொருட்களின் பட்டியலை வெளியிட்டது.

சர்வதேச நிர்பந்தத்தின் காரணமாக இஸ்ரேல் காஸ்ஸாவிற்குள் கடந்த வருடம் பாதி முதல் இம்மாதம் வரை அனுமதித்த 81 பொருட்களின் பட்டியலையும், கால அளவையும் இவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இஸ்ரேல் சமர்ப்பித்த 13 பக்க விளக்கத்தில் எந்தவொரு நீதியும் இல்லை. இன்று அத்தியாவசியப் பொருட்கள் காஸ்ஸாவிற்குள் கிடைக்க ஆரம்பித்திருந்தாலும், தடை மற்றும் தனிமைப்படுத்தலில் நாட்களை மன உறுதியோடு எதிர் கொண்ட வரலாற்றைத்தான் இவர்களால் கூறமுடியும்.

மல்லிப்பொடியை தடைச்செய்ததால் ஹமாஸின் மனதை மாற்ற முடியவில்லை என்பதோடு உலக சமூகத்தின் ஆதரவையும் பெற இந்தத் தடை உதவியது.

கருத்துகள் இல்லை: