புதன், 5 மே, 2010

நியூயார்க் பாலத்தில் நின்ற மர்ம லாரியில் வெடிகுண்டு பீதி.


நியூயார்க்: நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ராபர்ட் கென்னடி பாலத்தில் மர்ம லாரி ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றதால் அந்தப் பாலம் மூடப்பட்டது. தற்போது அந்த லாரியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு அந்த லாரியை பாலத்தில் நிறுத்தி விட்டு ஒரு நபர் இறங்கி ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். இதனால் பீதி ஏற்பட்டது. லாரியிலிருந்து காஸ் வாசனையும் வந்து கொண்டுள்ளது.

மர்ம லாரியைத் தொடர்ந்து பாலம் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்துள்ளனர்.முதல் கட்ட விசாரணையில், லாரியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதனால் பீதி சற்று அகன்றுள்ளது. இந்த பாலம் முன்பு திர்பாரோ பாலம் என்று பெயர் அழைக்கப்பட்டது. மன்ஹாட்டன், பிரான்க்ஸ், க்வீன்ஸ் ஆகிய பகுதிகளை இது இணைக்கிறது. சமீபத்தில், டைம்ஸ் சதுக்கப் பகுதியில் கார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மர்ம லாரியால் நியூயார்க் நகரில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: