புதன், 14 ஏப்ரல், 2010

புதிய அணு உலைகளை


மேலும் புதிய அணு உலைகளை அமைகிறது ஈரான்.
Monday, February 22, 2010
தெஹ்ரான், பிப்.22: யுரேனியம் செறிவூட்டுவதற்காக இரண்டு உலைகளை அமைக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. வான் வழி தாக்குதலைத் தவிர்க்கும் பொருட்டு இவை இரண்டையும் மலைக்குள்ளே அமைக்கப் போவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்றும், ஈரானை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்க உயர் அதிகாரி டேவிட் பெட்ராஸ் சமீபத்தில் எச்சரித்திருந்தார். ஈரான் தொடர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டால் அதை அமெரிக்கா தகர்க்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஈரானின் அணுவிசை பிரிவின் தலைவர் அலி அக்பர் சலேஹ் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்தமாதம் யுரேனியம் செறிவூட்டும் உலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.ஏற்கெனவே நதான்ஸில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் ஆலையின் திறனை ஒத்ததாகவே புதிய ஆலைகளும் அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யுரேனியத்தை செறிவூட்டக்கூடாது என ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து 3 முறை பொருளாதார தடை விதித்த போதிலும் அதை பொருட்படுத்தாது செயல்படுத்தி வருகிறது ஈரான்.

ஐக்கிய நாடுகள் சபை தகவலின்படி நதான்ஸில் உள்ள செறிவூட்டும் மையம் 8610 சென்ட்ரிஃபியூகஸ் திறன் கொண்ட செறிவூட்டு உலையை அமைக்கிறது. இது சூப்பர்சானிக் வேகத்தில் செயல்பட்டு யுரேனியத்தை செறிவூட்டும்.ஏற்கெனவே 3,772 சென்ட்ரிபியூகஸ் திறன் கொண்ட செறிவூட்டும் இயந்திரம் மட்டுமே தற்போது சர்வதேச கண்காணிப்பின்கீழ் செயல்படுகிறது.

ஆண்டுக்கு 30 டன் யுரேனியத்தை செறிவூட்டும் திறன் கொண்டதாக ஈரான் விளங்குகிறது. தற்போது 2,065 கி.கி. எடையுள்ள குறைவான அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரான் வசம் இருக்கலாம் என்று சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) கணித்துள்ளது.

கருத்துகள் இல்லை: