திங்கள், 29 நவம்பர், 2010

ஈரான் அணுசக்தி விஞ்ஞானி குண்டுவெடிப்பில் படுகொலை

டெஹ்ரான்,நவ.30:ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த குண்டுவெடிப்பில் ஈரான் அணுசக்தி விஞ்ஞானி கொல்லப்பட்டார்.

டெஹ்ரானில் ஷாஹித் பெஹெஸ்தி பல்கலைக்கழகத்தில் மாஜித் ஷஹரியார்தான் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அணுசக்தி விஞ்ஞானியாவார்.

இவருடைய காரில் சில நபர்கள் வெடிக்குண்டை பொருத்தியதால் குண்டு வெடித்தது. விஞ்ஞானி தான் பணிபுரியும் இடத்திற்கு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காரின் கதவுகளில் குண்டுகளை பொருத்தியுள்ளனர். இதனை அரசு தொலைக்காட்சியின் இணையதளம் தெரிவிக்கிறது.

இஸ்ரேலிய ஏஜண்டுகள்தான் இத்தாக்குதலுக்கு காரணமென ஈரான் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மற்றொரு தாக்குதலில் ஈரானின் அணுசக்தி விஞ்ஞானி ஃபரீதுன் அப்பாஸிக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இவருடைய காரிலும் வெடிப்பொருள் பொருத்தப்பட்டுள்ளது.

ஈரானில் சமீபகாலமாக அணுசக்தி விஞ்ஞானிகள் மீது நடத்தப்படும் வெடிக்குண்டுத் தாக்குதல்களில் மர்மம் நீடிப்பதாக ஈரான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வருடத் துவக்கத்திலும் ஒரு ஈரான் அணுசக்தி விஞ்ஞானி கொலைச் செய்யப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை: