ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

ஸ்பெய்னில்


ஸ்பெய்னில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை
சர்வதேச குழு: ஸ்பெய்ன் பாடசாலையொன்றில் கற்கும் 16 வயதுடைய முஸ்லிம் மாணவி, தான் அணிந்து வந்த ஹிஜாபைக் களையும் படியாகத் தனக்கு விடுக்கப்பட்ட உத்தரவை நிராகரித்ததனால், வகுப்பிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.


ஸ்பெய்னிலுள்ள மொரோக்கோ வாசியின் புதல்வியான நவ்ஜா மல்ஹா, மட்ரிட்டிலுள்ள ஜோஸ் செலா பாடசாலையிலிருந்து, ஹிஜாப் தமது பாடசாலையின் ஆடைக் கட்டுப்பாடுகளை மீறுகின்றது என்பதைக் காரணமாகக் கொண்டு, வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஸ்பெய்னின் பாடசாலைகளில், முஸ்லிம்களது கலாசாரத்தைப் பிரதிபலிக்கின்ற தலையை மறைக்கும் ஆடைகளை அணிவது தொடர்பான சரியான திட்டமோ சட்டமோ இல்லாத நிலையில் இவ்வாறான ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

சுpல தனியார் பாடசாலைகளில், இவ்வாறான ஆடைக் கட்டுப்பாடுகளைத் திணிக்கும் நடைமுறைகள் இல்லை. எனினும், வளர்ந்த பாடசாலைகளிலேயே இவ்வாறான திணிப்புகள் இடம்பெறுவதாக அறியப்படுகின்றது.

நான் மிகவும் கவலையும் அவமானமும் அடைந்ததாக உணர்கிறேன் என மல்ஹா கூறினார். தனது சமயக் கடமை நிமித்தம் இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தான் ஹிஜாப் அணியத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்பெய்னின் தேசிய நீதிமன்றத்திலிருந்து முஸ்லிம் பெண் வழக்கறிஞரொருவர், தனது ஹிஜாபை அணிய மறுத்தமைக்காக, நீதிமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வு, கடந்த நவம்பர் மாதம் ஸ்பெய்னில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: