செவ்வாய், 20 ஏப்ரல், 2010

இஸ்ரேல் மத்திய கிழக்கில் மோதலைத் தூண்டுகிறது



தெஹ்ரான், ஏப்ரல். 18 ஏ. எப். பி.

மத்திய கிழக்கில் மோதலைத் தூண்டி விடும் நாடாக இஸ்ரேலுள்ளதென ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் குற்றம் சாட்டினார். ஈரானின் இராணுவ வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அஹ்மெதி நெஜாத் இக்குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆயதுல்லா அலி கொமைனியின் நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற இவ் வைபவத்தில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி தெரிவித்ததாவது:-

மத்திய கிழக்கில் வெளிநாட்டுப் படைகளின் பிரசன்னம் இப் பிராந்தியத்தில் வன்முறைகளையே தோற்றுவிக்கும். இப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்.

இஸ்ரேலின் இராணுவப் பலத்தை அழிக்க ஏனைய நாடுகள் ஒன்றுபட வேண்டும். இஸ்ரேலுக்குப் பின்னாலுள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் அஹ்மெதி நெஜாத் கண்டித்து உரையாற்றினார். இஸ்ரேலின் இருப்பை ஈரான் எப்போதும் எதிர்த்தே வருகின்றது. உலக வரை படத்திலிருந்து இஸ்ரேல் அகற்றப்பட வேண்டுமென ஈரான் கூறி வருகின்றது.

இந்நிலையில் அஹ்மெதி நெஜாதின் உரை இஸ்ரேலைச் சாடுவதாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை: