
அரசியல் குழு: நவ்ரூஸ் வைபவம் மற்றும் ஈரானிய புதுவருடப் பிறப்பு என்பவற்றையொட்டி நிகழ்வின் போது, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் செய்யித் அலி காமெனயி அவர்கள், மஷ்ஹத் மக்களையும், இமாம் ரிஸா (அலை) அவர்களின் புனித அடக்கஸ்தலத்தையும் தரிசித்தார்.
இச்சந்திப்பனி போது உரையாற்றிய ஆயத்துல்லாஹ் காமெனயி அவர்கள், ஜனநாயம் மற்றும் மனித உரிமைகளை ஆதரிப்பதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார். ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா மேற்கொண்ட அழிவு நடவடிக்கைகள், காஸாவில் இஸ்ரேலின் வன்முறைகளுக்கு அது வழங்கிய ஒத்துழைப்புகள் என்பவற்றின் அடிப்படையில், ஜனநாயகம் பற்றியொ மனித உரிமைகள் பற்றியோ பேசுவதற்கு அமெரிக்காவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆன்மீகத் தலைவர், ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் நான்காவது தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கும் நாம், நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளும் அர்ப்பணிப்புகளும் அதிகமுள்ளன எனத் தெரிவித்தார். கடந்த தேர்தலின் பின்னரான வன்முறைகளையும் எதிரிகளின் திட்டமிட்ட சதிகளையும் முறியடிப்பதில் ஈரானிய மக்கள் காட்டிய விசுவாசத்தையும் ஈரான் தேசத்தின் ஒற்றுமையையும் சிலாகித்த அவர், இத்தகைய உறுதியான நிலைப்பாடு தொடர்ந்திருக்க வேண்டுமெனவும் அப்போதே ஈரானை முன்னணி வல்லரசு நாடொன்றாக மாற்றியமைக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆயத்துல்லாஹ் காமெனயி அவர்கள் தொடர்ந்து உரையாற்றும் போது, ஈரான் இஸ்லாமியக் குடியரசு, இறைநம்பிக்கையையும் நபிகளாரின் போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டது. இறைநம்பிக்கையும் இஸ்லாமியப் போதனைகளும் மனித வாழ்க்கையில் ஒழுக்க விழுமிய வளர்ச்சிக்கும், சடவாதத் தூய்மைக்கும் உயர்ந்த மனப்பக்குவத்திற்கும் பிரதான காரணமாக அமையும். இதன் காரணமாகவே இஸ்லாமியக் குடியரசு இஸ்லாமியப் போதனைகளையும் கோட்பாடுகளையும் தனது அடிநாதமாகக் கொண்டுள்ளது என்றார்.
பன்மடங்கு உறுதிக்கும் உழைப்புக்குமான ஆண்டு' எனப் பெயரிடப்பட்டுள்ள ஈரானியப் புதுவருடம் பற்றிக் குறிப்பிட்ட அவர், இவ்வாறு ஒவ்வொரு வருடத்திற்கும் பெயரிடுவது வெறுமனே வைபவங்களை சிறப்பிப்பதற்காக அல்ல என்றும், சமகாலப் பிரச்சினைகள் அவற்றின் முக்கியத்துவங்கள், அவற்றுக்கு தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தங்கள் மற்றும் தேவைகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டே இவ்வாறு யெரிடப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.
கடந்த வருடத்தில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அறிவியலாளர்கள் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்துப் பேசிய அவர், இப்பணிகள் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்களிப்புச் செய்துள்ளன எனவும், பிரதான குறிக்கோளை அடையும் பாதையில் அவை ஊக்குவிப்பை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
அறிவைப் பெறுவதும், ஆய்வுகளை மேற்கொள்வதும் மட்டும் மனித சமூகத்தின் கடமையல்ல, குறிக்கோள்களை அடைவதற்கான வழிகளுமல்ல. மாறாக, ஆய்வு நிலையங்களும் கல்லூரிகளும் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புடனும் தூரநோக்குடனும் தமது பாதையை வகுத்துச் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் நிருவாக மற்றும் சட்ட சபைகள், இவ்வருடத்தின் கருப்பொருளின் படி செயற்படவும் அதற்கான குறிக்கோளை அடையும் பணியில் முழுமூச்சுடன் ஈடுபடவும் தயாராக இருக்கும் என உறுதி கூறியதுடன், நிருவாகத்துறையானது, நாட்டின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் என்பவற்றையும் அவற்றுடன் தொடர்புடைய அனைத்துத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தும் என்றார். நிருவாகத்தின் இப்பணிகளின் போது, சட்டசபை தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆக்கபூர்வமான சிந்தனைகளை உருவாக்குதல், நூல்களை வாசித்தல் மற்றும் பொது அறிவை வளர்த்தல் என்பன நாட்டுக்கு அவசியமாகவுள்ள ஏனைய துறைகளாகும் என அவர் அடையாளப்படுத்தினார்.
பன்மடங்கு உறுதிக்கும் உழைப்பு என்பவற்றின் போது தேவைப்படும் மற்றொன்று வறுமை, ஊழல், மற்றும் அநீதி என்பவற்றுக்கெதிரான சண்டையாகும். அடிப்படைக் குறிக்கோளை அடைவதில் ஒவ்வொருவரும் தளராத அயராத முயற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது நாட்டில் காணப்பட்ட அசம்பாவிதங்களுக்குக் காரணமாக அல்லது ஒத்துழைப்பாக செயற்பட்டவர்கள் தமது தவறுகளை உணர்ந்து நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் தமது மனப்பூர்வமான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்க முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
சர்வதேச விவகாரம் பற்றி தொடர்ந்து கருத்துரைத்த அவர், அமெரிக்கர்கள், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் உள்ள அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று வருவதுடன், காஸாவிலுள்ள பலஸ்தீன சிறார்களைக் கொலை செய்யும் இஸ்ரேலின் திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. இவற்றையெல்லாம் செய்து கொண்டு மனித உரிமைகளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் காட்டிக் கொள்கின்றனர் எனச் சாடினார்.
அமெரிக்க அரசு, ஜனநாயகம் பற்றியோ மனித உரிமைகள் பற்றியோ பேசுவதற்கு எவ்விதத் தகுதியும் அற்றது என்பதை தற்கால யதார்த்தம் நிரூபித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயத்துல்லாஹ் காமெனயி அவர்கள் தொடர்ந்து குறிப்பிடும் போது, ஈரான் இஸ்லாமியக் குடியரசை நிர்மூலமாக்குவதற்காக முயற்சிகளை மேற்கொண்டு வரும் எதிரிகளும் அரக்கர்களும், தமது எத்தகைய நிர்ப்பந்தங்களையும் இஸ்லாமியக் குடியரசு நிராகரித்து விடும் என்பதை உணர்ந்து கொண்டுள்ளார்கள். இத்தகைய நயவஞ்சகர்களிடம் தனது பாதுகாப்பையும் ஒப்படைக்க ஈரான் ஒரு போதும் தயாராக அளவுக்கு, அ துநன்கு விழிப்புணர்வுடன் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக