ரஷ்யாவில் கடந்த வாரம் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான போலந்து ஜனாதிபதி லெக் கக்சின்ஸ்கியினதும் அவரது மனைவியினதும் உடல்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், ஐரோப்பாவில் பரவிவரும் ஐஸ்லாந்து எரிமலை புகை காரணமாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பல உலகத் தலைவர்கள் கக்சின்ஸ்கியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
போலந்தின் கிராகோவில் நடைபெறத் திட்டமிட்டிருந்த இறுதி நிகழ்வில் கலந்துகொள்ளும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் ரத்து செய்துள்ளார்.
ஜெர்மனியின் ஆளுநர் அஞ்சலாமார்கெல் பிரிட்டன் இளவரசர் பிரின்ஸ் ஆகியோரும் போலந்துக்கான தமது விஜயத்தை ரத்துச் செய்துள்ளனர்.
கக்சின்ஸ்கியின் இறுதிச் சடங்குகள் வவல் சவச் சாலையில் இடம் பெற்றபோது பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
1 இலட்சத்து 80 ஆயிரம் பேர் வரையில் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தியதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். போலந்து ஜனாதிபதியின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளாதமையை இட்டு தான் மனம் வருந்துவதாக ஜனாதிபதி ஒபாமா குறிப்பிட்டுள்ளார். போலந்து ஜனாதிபதி கக்சின்ஸ்கி ஒரு தேசாபிமானி. அத்துடன் அமெரிக்காவின் ஒரு சிறந்த நண்பரும் ஆவாரென ஒபாமாவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக