செவ்வாய், 20 ஏப்ரல், 2010

குத்ஸ் நகரில் சியோனிச அரசு

அரசியல் குழு: லெபனான்-பலஸ்தீன் அரசியல் சமூக அமைப்பின் உத்தியோகபூர்வ ஒன்றுகூடல், ஏப்ரல் ஐந்தாம் திகதி சாயிதா லெபனானில் இடம்பெற்ற போது, புனித குத்ஸ் நகரில் சியோனிச அரசு மேற்கொண்டு வரும் சட்டவிரோத அகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


லெபனானில் இயங்கும் இக்னா செஸ்திக் கிளை தெரிவிப்பதாவது, இவ்வொன்றுகூடலில் பலஸ்தீனிலும் லெபனானிலும் நடைபெறும் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும், சியோனிச அரசினால் முன்வைக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

கலந்து கொண்டோர் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். சியோனிச அரசின் வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆதரவு வழங்கி வரும் ஐக்கிய அமெரிக்காவினது நடவடிக்கைகளையும், இவ்விறுக்கமான அரசியல் சூழ்நிலையிலும் மௌனம் சாதிக்கும் அரபுலகத்தின் கையாலாகாத்தனத்தையும் அவ்வறிக்கை கடுமையாக விமர்சித்திருந்தது.

பலஸ்தீன மக்களது உரிமைகளைப் பாதுகாப்பதில் துருக்கியின் ஆதரவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவ்வறிக்கை, நடைபெற்ற அரபு உச்சிமாநாட்டில் புனித குத்ஸ் விவகாரம் தொடர்பான எடுக்கப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்த முடியாமல் போயுள்ளமை குறித்து கவலையும் வெளியிட்டுள்ளது.

பலஸ்தீன விடுதலை இயக்கங்கள், இஸ்ரேலின் சியோனிசக் கொடுமைகளுக்கு தலைசாய்க்காமல் தொடர்ந்தும் தமது முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவ்வொன்றுகூடலில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: