செவ்வாய், 20 ஏப்ரல், 2010

மலேசியாவின் தேசிய குர்ஆன் மனனப் போட்டி புதன்கிழமை ஆரம்பம்
சர்வதேச குழு: மலேசிய இஸ்லாமிய அபிவிருத்தித் திணைக்களம், மலேகா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், எதிர்வரும் 21 தொடக்கம் 25 வரை, மலேகா சர்வதேச வர்த்தக நிலையத்தில், 31ஆவது தேசிய மட்ட குர்ஆன் மனனப் போட்டியை ஒழுங்கு செய்யவுள்ளது.


திணைக்களத்திலிருந்து விடுக்கப்பட்ட அறிக்கையொன்று குறிப்பிடுவதாவது, இப்போட்டி மூன்று மட்டங்களாகப் பிரிக்கப்படும். முதல் மட்டம் (ஜுஸ்உ 1 தொடக்கம் 10), இரண்டாம் மட்டம் (ஜுஸ்உ 1 தொடக்கம் 20), மூன்றாம் மட்டம் (ஜுஸ் 1 தொடக்கம் 30) என்பவையாகும்.

ஒவ்வொரு மாகாணமும், மாகாண மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய, ஏழுக்கும் 25க்கும் இடைப்பட்ட வயதுடைய, மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்களாக ஆறு பேரை தமது மாகாணத்தின் சார்பாக இந்த தேசிய மட்டப் போட்டிக்கு அனுப்ப முடியும்.

தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டுவோருக்கு பணப்பரிசும், ஹஜ் உம்ரா வாய்ப்பும் வழங்கப்படுவதுடன், பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மூன்றாம் மட்டத்தில், பணப்பரிசு சுஆ. 10,000, இரண்டாம் மூன்றாம் மட்டங்களில் பணப்பரிசுகள் முறையே சுஆ. 6,000 மற்றும் சுஆ. 4,000 ஆகும்.

உம்மாஹ்வின் உறவுகளையும் சக்தியையும் வலுப்படுத்தல் எனும் கருப்பொருளிலான இப்போட்டி, ஏப்ரல் 21ம் திகதி, மலேக்கா முதலமைச்சர் டதுக் செரி முஹ்த் அலி ருஸ்தாமினால் ஆரம்பித்து வைக்கப்படும்.

கருத்துகள் இல்லை: