செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் சர்ச்சை: பாதுகாப்புச் சபைக்கு விளக்கமளிக்க விருப்பம்

தெஹ்ரான், ஏப்ரல். 19. ஏ. எப். பி.


ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் சர்ச்சைகள் தொடர்பாக ஐ. நா. பாதுகாப்புச் சபையிலுள்ள 15 நாடுகளுக்கும் விளக்க மளிக்கவுள்ளதாக ஈரானின் வெளிநாட்ட மைச்சர் மொனாச்சர் மொற்றாகி தெரிவித்தார். ஈரானில் நடந்த யுரேனியம் செறிவூட்டல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

அமெரிக்கா வுடன் மாத்திரம் இது தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்படமாட் டாதெனக் கூறிய ஈரான் வெளிநாட்டமைச்சர் ஏனைய 14 நாடுகளுடனும் நேரடிப் பேச்சுக்கள் நடத்தப்படுமென்றார். இனி வரும் காலங்களில் இப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். இதற்கான திட்டங்கள் எம்மிடமுள்ளன.

ஈரானைத் தாக்க முயற்சிப்போர் நெருப்புடன் விளையாடப் போகின்றனர். எங்களைத் தாக்கும் தைரியம் எவருக்கும் இல்லையெனவும் ஈரான் வெளிநாட்டமைச்சர் சூளுரைத்தார். யுரேனியத்தை செறிவூட்டி ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக மேற்கு நாடுகள் சந்தேகிக்கின்றன. இதனால் செறிவூட்டப் பட்ட யுரேனியத்தை சோதனை செய்வதற்காக பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அனுப்புமாறு ஐ. நா. வலியுறுத்துகிறது.

இதை நிராகரித்த ஈரான், தங்கள் நாட்டு எல்லைக்குள் யுரேனியத்தை சோதனையிட முடியுமெனக் கூறுகிறது. இந் நிலையில் ஈரானுக்குகெதிராக நான்காவது பொருளாதாரத் தடையைத் கொண்டுவர நிரந்தர உறுப்பு நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என்பன முன்வந்து ள்ளன.

ரஷ்யா, சீனா என்பன இவ் விடயத்தில் பின்நிற்கின்றன. ஈரான் ஐ. நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளுக்கும் தங்கள் நிலைப்பாட்டை விளக்கவுள்ளது. அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் ஈரானை வழிக்குக் கொண்டு வரும் விரிவான விடயங்கள் வெள்ளை மாளிகையிடம் இல்லையென நகலொன்றை கடந்த ஜனவரி மாதம் அனுப்பி வைத்ததாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இச் செய்தியை பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் நிராகரித்தார்.

ஈரானைத் தண்டிக்கும் முறைகள், வழிக்குக் கொண்டு வரும் விடயங்கள், இவற்றைச் செய்ய வேண்டிய கால ஒழுங்குகள் என்பவற்றை உள்ளடக்கியதான நகல் ஒன்றையே நாம் ஜனாதிபதி ஒபாமாவுக்கு அனுப்பியதாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட் டார்.

ஈரானில் நடைபெற்ற யுரேனிய மாநாட்டில் மத்திய கிழக்கின் பாதுகாப்பு, அழிவு தரும் ஆயுதங்களை அகற்றல், இஸ்ரேலை அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இணங்கச் செய்தல் போன்ற விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை: