சர்வதேச குழு:பல்கலைக்கழக மாணவர்களுக்கான குர்ஆன் மனனம் மற்றும் தஜ்வீத் என்பவற்றுக்கான பத்தொன்பதாவது வருடாந்த போட்டி, நேற்றுக் காலை லிபியாவின் தலைநகர் தராபல்ஸ்சிலுள்ள அல்பாதிஹ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.
அல்பஜ்ருல் ஜதீத் தினசரியின் தகவலின்படி, இப்போட்டி, கலை, விஞ்ஞான, சிந்தனை ரீதியான கருப்பொருள்களில், பல்கலைக்கழக மாணவர்களுக்காக வருடாந்தம் நடைபெற்று வருகின்ற முக்கிய போட்டியொன்றாகும்.
இப்போட்டியுடன் இணைந்ததாக, விசேட கண்காட்சியொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில், லிபியாவின் பல பகுதிகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், பல்வேறு துறைகளிலான தமது படைப்புகளையும் பொருட்களையும் காட்சிக்கு வைப்பர். குறிப்பாக, பலஸ்தீன் தொடர்பான காட்சிகள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியொன்றும் விசேடமாக இடம்பெறும்.
குர்ஆன் மனனம், மற்றும் தந்வீத் என்பவை தொடர்பான இப்போட்டி, லிபியாவின் பல்கலைக்கழக மாணவர்களிடையே மிகவும் பிரபல்யம் பெற்ற போட்டியென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக