சனி, 27 நவம்பர், 2010

சோமாலியா:ஒருவருடத்தில் கொல்லப்பட்ட சிவிலியன்கள்

மொகாதிஷு,நவ.27:போராளிகளுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வரும் சோமாலியா தலைநகரான மொகாதிஷுவில் இந்த ஆண்டு கொல்லப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை 2100 ஆகும்.

தலைநகரின் பக்கார சந்தையை நோக்கி ஆப்பிரிக்கா யூனியன் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில்தான் 80 சதவீத சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனை லைஃப் லைன் ஆப்ரிக்கா ஆம்புலன்ஸ் சர்வீஸ் இயக்குநர் அலி மூஸ் தெரிவிக்கிறார்.


இந்த ஆண்டு ஜனவரி-அக்டோபர் மாதங்களிடையே கொல்லப்பட்ட சாதாரணமக்கள் 2171 பேர்களாவர். 5814 பேர்களுக்கு காயமேற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 2903 பெண்களும், 1145 குழந்தைகளும் அடங்குவர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு 2089 சாதாரண மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இந்த அறிக்கைக்கு பதிலளிக்க ஆப்பிரிக்க யூனியன் ராணுவச் செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார்

கருத்துகள் இல்லை: