சனி, 13 நவம்பர், 2010

ஜி-20 உச்சிமாநாடு:சியோலில் ஆயிரக்கணக்கானோர் கண்டனப் போராட்டம்

சியோல்,நவ.12: ஜி-20 உச்சிமாநாட்டிற்கு வருகைத் தந்த உலகத் தலைவர்களுக்கெதிராக ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. தங்களின் நீண்டகால கோரிக்கைகளைக் குறித்து அரசு பாராமுகமாக உள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். வளர்ச்சி தொடர்பான சச்சரவுகளையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சியோல் சிட்டி ஹாலிற்கு வெளியே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என போராட்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

உச்சிமாநாட்டிற்கு பிறகு போராட்டக்காரகளின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதாக அரசு உறுதி அளித்துள்ளது.

தொழிலாளர் யூனியன்கள், ஊனமுற்றோர் அமைப்புகள், முன்னாள் ராணுவத்தினர் அமைப்பு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் இப்போராட்டத்தில் பங்கேற்றன. 10 ஆயிரம் கலவரத் தடுப்பு போலீசார் உள்பட 60 ஆயிரம் ராணுவத்தினரை உச்சிமாநாட்டின் பாதுகாப்பிற்காக அரசு நிறுத்தியுள்ளது.

அமைதியான வழியில் நடத்தப்படும் போராட்டத்தை பலம் பிரயோகித்து அடக்கமுடியாது என நைன் ட்ராகன்ஸ் என்ற அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: