ஞாயிறு, 2 மே, 2010

அமெரிக்க கடலில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் பிப்பாய் எண்ணெய் கசிவதாக தகவல்.

அமெரிக்கா - மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவானது லூயிசியானா மாகாணக் கடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளது. தற்போது அடர்த்தியான எண்ணெய் படிமங்கள் கரையோரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரம் வரை படிந்து காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடல் ஆழிப் பகுதியிலுள்ள எண்ணெயை அகழ்வு பகுதிகளில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவமே இந்த எண்ணெய் கசிவிற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் இணைக்கப்பட்டிருந்த குழாய் சிதைவையடுத்து தொடர்ந்து நாளொன்றிற்கு 5ஆயிரம் பீப்பாய்கள் என்ற அளவில் எண்ணெய் கடலில் கசிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் கசிவு ஏற்படும் இடத்தை அடைத்து கசிவை முழுமையாகத் தடுத்து நிறுத்துவதற்கு 40 தொடக்கம் 90 நாட்கள் வரை எடுக்குமென எண்ணெய் அகழ்விற்கான பிரித்தானிய நிறுவனம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: