வியாழன், 11 நவம்பர், 2010

இஸ்ரேலின் அடாவடி:ஹமாஸ் எம்.பி கைது

ரமல்லா,நவ.11:ஃபலஸ்தீனின் மேற்குகரையில் ஹமாஸ் இயக்கத்தைச் சார்ந்த எம்.பி ஒருவரை இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்துள்ளது.

ஃபலஸ்தீன் சட்டமியற்றும் கமிட்டியின் பொதுச் செயலாளர் மஹ்மூத் ரமாஹினை அவருடைய வீட்டிலிருந்து பிடித்துச் சென்றனர் இஸ்ரேலிய ராணுவத்தினர்.
தனது சக எம்.பியான மோனா மன்சூரிடம், ரமாஹி தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வீட்டில் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ராணுவம் தன்னை கைதுச் செய்வதாக கூறி அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில் ரமாஹி உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது எனவும், அவரை எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்பது தெரியவில்லை என மோனா மன்சூர் தெரிவிக்கிறார்.
இச்சம்பவத்தைக் குறித்து பரிசோதித்து வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது. ஹமாஸ் மற்றும் ஃபத்ஹ் இயக்கங்களிடையேயான சமரச பேச்சுவார்த்தை சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் இஸ்ரேலிய ராணுவத்தின் இந்த அடாவடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரு இயக்கங்களும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது அதனை சீர்குலைக்க இதற்கு முன்பும் முயற்சிகள் நடந்தன. சமரச முயற்சியை சீர்குலைப்பதற்கான நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளதாக மேற்குகரையில் ஹமாஸ் தலைவர் உமர் அப்துற்றஸ்ஸாக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே ஹமாஸ் எம்.பி ஹாத்திம் கஃபைஸை இஸ்ரேல் கைதுச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: